இரவில் தாமதமாக உணவு சாப்பிடுபவரை தாக்கும் நோய்
உணவைப் பற்றிய அறிவுரைகளை நாம் மிகவும் எளிதாக புறந்தள்ளி ஒரு வரைமுறைக்கு உட்படாமல், நாம் விரும்புகின்ற நேரத்தில் விரும்புகின்ற உணவு உட்கொண்டு விடுகின்றோம்.
நாம் அனைவரும் இரவு 8 மணிக்கு மேல் சாப்பிடுவதைப் தவிர்க்க வேண்டும். அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவானது நமது உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.
இரவு நேர உணவுப் பழக்கம் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக விளங்குகின்றது. அவர்கள் படுக்கைக்குப் போகும் முன் உள்ளே தள்ளும், அளவுக்கு அதிகமான உணவானது, அவர்களின் வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வருகின்றது.
இரவு உணவு நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட நபர்கள், இரவு நேரம் முழுவதும் அதிக கார்போஹைட்ரேட், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளுகின்றார்கள். இந்த நோய் பாதிக்கப்பட்ட மக்கள் இரவு உணவிற்குப் பின் மேலும் அதிகமாக உணவை உட்கொள்ளுகின்றார்கள்.
இவர்கள் பகல் நேரத்தில் மிகக் குறைவாகவும், இரவு நேரத்தில் மிக அதிகமாகவும் உணவை உட்கொள்ளுகின்றார்கள். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களால் நிம்மதியாகக் கூட தூங்க முடியாது. ஏனெனில் அவர்கள் தூக்கத்தில் கூட உணவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வெறுப்புடனும், குற்ற உணர்ச்சியுடனும் காணப்படுவார்கள்.
ஏனெனில் அவர்கள் உணவு உட்கொள்ளும் பொழுதே அடுத்த வேளை உணவைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி, அதைப் பற்றி பயப்படத் தொடங்கி விடுவார்கள். இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் பிற உணவு சம்பந்தப்பட்ட நோய்கள், தூக்கக் கோளாறுகள் மற்றும் மனநிலை கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
இரவு நீண்ட நேரம் விழித்திருக்கும் பழக்கம் உடையவர்கள், உங்களுடைய இரவு உணவை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் மாலை 6 மணிக்கு இரவு உணவை முடித்துவிட்டாலும், படுக்கைக்குச் நள்ளிரவு தான் செல்கின்றீர்கள் எனில் உங்களூடைய உணவிற்கும், படுக்கைக்கும் இடையே நீண்ட நேர இடைவெளி உள்ளது. அந்த நீண்ட இடைவெளி உங்களை அதிக உணவை உட்கொள்ளச் சொல்லி தூண்டும்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பலரும் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கின்றார்கள். அது அவர்களின் ஆற்றலை அளவுக்கு அதிகமாக உறிஞ்சிவிடுகின்றது என நினைக்கின்றார்கள். நீங்கள் உங்களுடைய நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால், உங்களுடைய உடற்பயிற்சியானது பசியை ஒடுக்கி உங்களுக்கு ஒரு நல்ல இரவுத் தூக்கத்தையும் தரும்.