26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
kaduku oil
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்புமுகப்பரு

முகத்தில் உள்ள முகப்பருக்கள் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்துமே குணமாக அற்புதமான எளிய தீர்வு….

 

நம்மில் சிலர் மட்டுமே கடுகு எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்துவர். இந்த எண்ணெய்யில் ஏராளமான நன்மைகள் உள்ளதாம். இதை நாம் முக பிரச்சினைகளுக்கும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள முகப்பருக்கள் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்துமே குணமாகும். இதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

 

கடுகு எண்ணெய்யின் ஆற்றல்..!

கடுகு எண்ணெய் மற்ற எண்ணெய்களை காட்டிலும் ஆரோக்கியம் கொண்டது. இதனை உணவாக சமைக்க பயன்படுத்தினாலும், முக அழகை மேம்படுத்த பயன்படுத்தினாலும் இதன் பயன் அதிகம். காரணம், இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் தான்.

கலவை குறிப்பு…

முகம் வெண்மையாக மாற இந்த கலவை குறிப்பு உங்களுக்கு உதவும். இதற்கு தேவையானவை… எலுமிச்சை சாறு அரை ஸ்பூன் கடுகு எண்ணெய் 1 ஸ்பூன் உப்பு சிறிது

செய்முறை :-

முதலில் கடுகு எண்ணெய்யுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் உப்பு சேர்த்து முகத்தில் தடவவும். 10 நிமிடம் மசாஜ் செய்த பின்னர் முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவலாம். இது முகத்தை பளபளவென மாற்றி அழகான சருமத்தை தரும்.

கரும்புள்ளிகள் நீங்க

முகத்தில் கரும்புள்ளிகள் வராமல் இருக்க இந்த குறிப்பு உதவும்.

இதற்கு தேவையானவை…

கடுகு எண்ணெய் 1 ஸ்பூன்

கடலை மாவு 1 ஸ்பூன்

தயிர் 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு அரை ஸ்பூன்

தயாரிப்பு முறை

கடலை மாவுடன் தயிர் மற்றும் கடுகு எண்ணெய்யை சேர்த்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் பூசி மெல்ல மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம். இந்த குறிப்பை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பருக்களை ஒழிக்க

முகத்தின் அழகை கெடுக்கும் இந்த பருக்களை ஒழிக்க எளிய வழி உள்ளது. 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவினால் பருக்கள் மறையும். மேலும், பருக்களினால் ஏற்பட்ட வடுக்களும் மறைந்து போகும்.

அழுக்குகளை நீக்க

முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகளை நீக்க இந்த குறிப்பு பயன்படும். இதற்கு தேவையானவை… மஞ்சள் தூள் 1 ஸ்பூன் சந்தன தூள் 1 ஸ்பூன் குங்குமப்பூ சிறிது கடலை மாவு 1 ஸ்பூன் கடுகு எண்ணெய் 2 ஸ்பூன்

தயாரிப்பு முறை…

மஞ்சள் தூள், சந்தன தூள், குங்குமப்பூ ஆகியற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். அதன்பின் கடலை மாவு மற்றும் கடுகு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகள் நீங்கி விடும்.

 

Related posts

உங்களுக்கு தெரியுமா சீழ் நிறைந்த பருக்களைப் போக்கும் சில சூப்பர் டிப்ஸ்!

nathan

இந்த பழக்கங்கள் உங்களை இயற்கையாகவே அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்!

nathan

உங்களுக்கு அழகை அள்ளித் தரும் 6 அற்புத எண்ணெய்கள் !!

nathan

கண்ணுக்குக் கீழே கருவளையமா கவலை வேண்டாம்…..

nathan

விளக்கெண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்கும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கின்றன…

nathan

கோடையில் அழகா ஜொலிக்கணுமா? அப்ப நைட் இத செய்யுங்க…

nathan

சருமத்தைப் பளபளப்பாக்கும் அன்னாசி

nathan

சருமத்தில் கரும்புள்ளிகளை போக்கும் சூப்பர் பேஷியல்

nathan

கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய

nathan