31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
இலங்கை சமையல்

கோதுமை மாவு – வாழைப்பழ பணியாரம்

தேவையானவை :

கோதுமை மாவு – அரை கப்
வாழைப்பழம்- 2
தேங்காய் துருவல் – அரை கப்
துருவிய கருப்பட்டி அல்லது துருவிய வெல்லம் – இனிப்புக்கேற்ப
ஏலக்காய்தூள் – ஒரு சிட்டிகை.

செய்முறை :

* கோதுமை மாவை நன்றாக கரைத்து கொள்ளவும்.

* வாழைப்பழத்தை தோல் உரித்து நன்றாகப் பிசைந்து, அதில் துருவிய தேங்காய், துருவிய வெல்லம், ஏலத்தூள் சேர்த்து நன்றாக கலந்து அதை கரைத்த கோதுமை மாவு கலவையில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். கலவை சற்று கெட்டியாக இருக்கும் படி கரைத்து கொள்ளவும்.

* குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடானதும் மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு குழியிலும் அரை கரண்டி மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* சுவையான கோதுமை மாவு – வாழைப்பழ பணியாரம் ரெடி.

Related posts

இலங்கை ஆப்பம் ஓட்டல் ஸ்டைலில் செய்யனுமா? தொடர்ந்து படியுங்கள்

nathan

இலங்கையரின் வறுத்தரைச்ச நாட்டுக்கோழி கறி…

nathan

யாழ்ப்பாணத்து மீன் குழம்பு

nathan

யாழ்ப்பாண ஒடியல் கூழ் (மச்சக்கூழ்)

nathan

இலங்கை சிங்கள மக்கள் விரும்பி உண்ணும் பால் சோறு….

nathan

முருங்கைக்காய் சாம்பார் / Drumstick sambar tamil

nathan

சத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு முறுக்கு

nathan

மட்டன் கீமா குழம்பு செய்ய தெரியுமா…!

nathan

தினை மாவு – தேன் உருண்டை

nathan