unna
இலங்கை சமையல்

இலங்கை ஆப்பம் ஓட்டல் ஸ்டைலில் செய்யனுமா? தொடர்ந்து படியுங்கள்

தினமும் காலையில் இட்லி தோசை மற்றும் பூரி போன்றவற்றை மட்டுமே அதிகமாக நாம் சாப்பிடுவது வழக்கம். ஆனால் அதைவிட சுவையான மற்றும் ஆரோக்கியமான டிபன் வகைதான் ஆப்பம்.

தற்போதுள்ள குழந்தைகளுக்கு இந்த மாதிரியான ஆப்பம் ஊற்றி காலையில் குடுத்து பாருங்கள் தினமும் அவர்கள் அதை விரும்பி கேட்பார்கள். இலங்கையில் ஸ்டைலில் ஆப்பம் தயார்செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.

ஆப்பம் செய்ய தேவையான பொருட்கள்

இட்லி அரிசி – 1 கப்
பச்சரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
தேங்காய் – 1/2 மூடி
வெந்தயம் – 2 ஸ்பூன்
சமைத்த சாதம் – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு
ஆப்பம் செய்முறை

முதலில் இட்லி அரிசி மற்றும் பச்சரிசியினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 மணிநேரம் ஊறவைக்கவும் . அதேபோன்று உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றினை ஒரு பாத்திரத்தில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

பிறகு ஊறவைத்த உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயத்தினை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அது நன்றாக அரைத்த உடன் அதனுடன் ஊறவைத்த அரிசியினையும் கொட்டி அரைக்கவும்.

பிறகு அதனுடன் தேங்காய் மற்றும் சமைத்த சாதம் போன்றவைகளையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். இப்போது அரைத்த மாவினை ஒரு கின்னத்தில் ஊற்றி 8 மணிநேரம் அதை புளிக்க வைக்கவேண்டும். எட்டு மணிநேரம் கழித்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். தற்போது ஆப்பம் செய்ய தேவையான மாவு தயாராகிவிட்டது.

இதனை ஆப்பகாடாயில் ஊற்றி மெலிதாக எண்ணெய் ஊற்றி ஒரு பக்கம் வேகவைத்து எடுத்தால் சுவையான ஆப்பம் தயார்.

இந்த அளவிற்கான ஆப்பத்தின் எண்ணிக்கை – 15
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 5

Related posts

பேரீச்சம்பழ தயிர் பச்சடி

nathan

மட்டன் கீமா குழம்பு செய்ய தெரியுமா…!

nathan

பஞ்சரத்ன தட்டை

nathan

மாலை நேர சிற்றுண்டி: ரவா இனிப்பு பணியாரம்

nathan

பலகார வகைகளில் காராபூந்தி செய்ய…!

nathan

முட்டைக்கோப்பி

nathan

முருங்கைக்காய் சாம்பார் / Drumstick sambar tamil

nathan

பருத்தித்துறை வடை

nathan

சூப்பரான யாழ்ப்பாண ஒடியல் கூழ் (மச்சக்கூழ்)

nathan