25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
salt water 1
ஆரோக்கியம் குறிப்புகள்

உப்பு கலந்த நீரால் வாயைக் கொப்பளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!தெரிஞ்சிக்கங்க…

பொதுவாக தொண்டையில் புண் வந்தால், உப்பு கலந்த நீரால் வாயைக் கொப்பளித்தால், தொண்டையில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, விரைவில் தொண்டைப் புண் சரியாகும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் இந்த உப்பு கலந்த நீரால் ஒருவர் அன்றாடம் வாயைக் கொப்பளிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?

Benefits Of Gargling With Salt Water
உப்பு கலந்த நீரில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வாயில் உள்ள பல்வேறு நோய்களைத் தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும். சரி, உங்களுக்கு உப்பு கலந்த நீரைக் கொண்டு ஒருவர் தினந்தோறும் வாயைக் கொப்பளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

உப்பு நீர் தயாரிக்கும் முறை:

* ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் கல் உப்பு சேர்த்து நன்கு கரையும் வரை கலந்து கொள்ள வேண்டும்.

* முக்கியமாக வாயைக் கொப்பளிக்கப் பயன்படுத்தும் நீர் சூடாக இல்லாதவாறு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* பின் அந்த உப்பு கலந்த நீரை வாய் முழுவதும் ஊற்றி, மேல் நோக்கிப் பாருங்கள்.

* உப்பு நீரானது தொண்டையில் படும்படி 30 நொடிகள் கொப்பளித்து, பின் நீரை வெளியே துப்புங்கள்.

* இப்படி ஒரு கப் நீர் முழுவதும் காலியாகும் வரை தொடர்ந்து செய்யுங்கள்.

* ஒவ்வொரு 4 மணிநேரத்திற்கும் ஒருமுறை உப்பு நீரால் வாயைக் கொப்பளித்தால், வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

pH அளவைப் பராமரிப்பது

உப்பு நீர் தொண்டையை ஆக்கிரமித்த பாக்டீரியாவால் தயாரிக்கப்படும் அமிலங்களை சீராக்க உதவும் மற்றும் ஆரோக்கியமான pH அளவை சமநிலையில் பராமரிக்க உதவும். ஒருவரது உடலில் pH அளவு சாதாரண நிலையில் இருந்தால், வாய் மற்றும் தொண்டையில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை பெருகச் செய்து, தேவையற்ற பாக்டீரியாக்களின் தேக்கத்தைத் தடுத்து, தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கும்.

சளியை நீக்கி, மூக்கு அடைப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும்

ஒவ்வொரு முறை இருமல் வரும் போதும் சளி வருகிறதா? உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளியுங்கள். இதனால் சுவாசப் பாதையில் உள்ள சளி இளகி, சுவாசக் குழாயில் வழியே வெளியேறிவிடும். இச்செயலால் சுவாசப் பாதையில் உள்ள அழற்சி குறைவதோடு, தொண்டையில் உள்ள வலியில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். அதே சமயம் இது சுவாச பாதையில் உள்ள பாக்டீரியா அல்லது வைரஸ்களையும் வெளியேற்றிவிடும். ங

வறட்டு இருமலை சரிசெய்யும்

உப்பு கலந்த நீரால் வாயைக் கொப்பளிக்கும் போது, அது அடிக்கடி வரும் வறட்டு இருமலை சரிசெய்யும். அதாவது இந்நீரால் வாயைக் கொப்பளித்தால், அது இருமல் அடக்கி போன்று செயல்பட்டு, வறட்டு இருமலைத் தடுக்க உதவும்.

மேல் சுவாச மண்டலம் நோய்த்தொற்றுகளைத் தடுக்கும்

ஜப்பானிய ஆய்வு ஒன்றில், தினமும் மூன்று முறை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளிப்பதன் மூலம் மேல் சுவாச மண்டலத்தில் உள்ள நோய்த்தொற்றுக்களின் அபாயம் 40% குறைவதாக கண்டறியப்பட்டது.

அடிநா அழற்சியை சரிசெய்யும்

நமது தொண்டையின் பின்புறத்தில் இரண்டு திசுக் கட்டிகள் அமைந்துள்ளன. இந்த கட்டிகள் பாக்டீரியல் அல்லது வைரல் தொற்றுக்களினால் அழற்சி அடைந்து, அதனால் தொண்டைப்புண், உணவை விழுங்குவதில் சிரமம் மற்றும் அடிநாப் பகுதியில் மஞ்சள்-வெள்ளைப் படலம் போன்ற அறிகுறிகளை சந்திக்க நேரிடும். உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளிக்கும் போது, அது அடிநா அழற்சியால் தொண்டையில் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் அளித்து, விரைவில் அடிநா அழற்சியை சரிசெய்யும்.

வாய் துர்நாற்றத்தைப் போக்கும்

உங்கள் வாய் எப்போதும் கடுமையான துர்நாற்றத்துடனேயே உள்ளதா? என்ன செய்தாலும் வாய் துர்நாற்றம் போகமாட்டீங்குதா? தினமும் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, அந்நீரால் வாயைக் கொப்பளித்து வாருங்கள். இதனால் அது வாயில் உள்ள அமில அளவை நீர்க்கச் செய்து, இயற்கையான pH அளவை தக்க வைத்து, வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும் 2 பெரிய பாக்டீரியாக்களை வெளியேற்றிவிடும்.

தொண்டைப்புண்

தொண்டையில் புண் வருவதற்கு பாக்டீரியா அல்லது வைரஸ்கள் தான் காரணம். இந்த கிருமிகளை அழிக்க உப்பு கலந்த நீர் நல்ல நிவாரணத்தை வழங்கும். உப்பு கலந்த நீரால் வாயைக் கொப்பளிக்கும் போது, அந்நீரில் உள்ள சோடியம் தொண்டையில் பாக்டீரியாக்கள் ஆக்கிரமித்த இடத்தை வறட்சியடையச் செய்து, பாக்டிரியாக்களின் பெருக்கத்தைத் தடுத்து வெளியேற்றி, தொண்டைப்புண்ணை சரிசெய்யும்.

ஈறு வீக்கம் மற்றும் இரத்தக் கசிவு

பற்களைத் துலக்கும் போது, உங்கள் ஈறுகளில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படுகிறதா? உங்கள் டூத் பிரஷ் முழுவதும் இரத்தத்துடன் உள்ளதா? அப்படியானால் உங்களுக்கு பாக்டீரியா தொற்றுக்களால் ஈறு நோய் உள்ளது என்று அர்த்தம். இவர்கள் தினமும் உப்பு கலந்த நீரால் வாயைக் கொப்பளிப்பதன் மூலம், வாயில் உள்ள அழற்சி குறைந்து, பாக்டீரியாக்களும் அழிக்கப்படும்.

பற்காறைகளை சரிசெய்யும் மற்றும் பற்குழிகளைத் தடுக்கும்

பற்களைச் சுற்றி படியும் காறைகளை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காமல் விட்டுவிட்டால், அது பற்களை இறுக்கமடையச் செய்து, நாளடைவில் பற்குழிகளுக்கு வழிவகுத்துவிடும். பற்குழித் தாக்கம் ஏற்பட்டால், ஈறு வீக்கம், ஈறுகளில் கடுமையான வலி மற்றும் சில சமயங்களில் தீவிரமான வாய் நோய்களை உண்டாக்கி, பல் இழப்பை ஏற்படுத்தும். ஆனால் தினமும் உப்பு கலந்த நீரால் வாயைக் கொப்பளித்து வருவதன் மூலம், பற்களில் படியும் பற்காறைகள் நீங்கி, தீவிரமான பல் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

கேன்கர் புண்கள்

கேன்கர் புண்களானது வாயில் உள்ள மிகச்சிறிய புண்களாகும். இது மிகவும் கடுமையான வலியை உண்டாக்கும். இந்த பிரச்சனையானது பல காரணங்களால் வரலாம். அதில் தெரியாமல் கடித்துக் கொண்டால், குறிப்பிட்ட உணவுகளுக்கு அழற்சியாக இருந்தால் அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் கூட ஏற்படலாம். உப்பு கலந்த நீரால் வாயைக் கொப்பளிப்பதன் மூலம், இந்த கேன்கர் புண்களினால் உண்டாகும் வலியில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, இந்த புண்களும் விரைவில் சரியாகும்.

பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்

பாக்டீரியல் தொற்றுக்களால், பற்களின் மையப்பகுதியில் சீழ் உருவாகும் போது கடுமையான பல் வலியை சந்திக்கக்கூடும். இந்நிலையில் ஆன்டி-பயாடிக்குகளின் மூலம் தொற்றுக்களுக்கு சிகிச்சை அளிக்கலாம். ஆனால் பல் வலியை உண்டாக்கும் சீழ் போன்ற திரவத்தை வெளியேற்ற, தினமும் சில மணிநேரங்களுக்கு ஒருமுறை உப்பு நீரால் வாயைக் கொப்பளியுங்கள்.

Related posts

அடிக்கடி சீக்கிரம் சோர்வடைகிறீர்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

சுவையான சமையலுக்கு சின்னதா சில டிப்ஸ்!…

sangika

கடன் பிரச்சனையில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ வாஸ்து கூறும் இந்த விஷயங்களை மட்டும் செய்யுங்கள்!

nathan

குளியல் சோப்: நல்லா தேயுங்க.. ஆனால் தெரிஞ்சுக்குங்க

nathan

நகம் கடிப்பதால் உண்டாகும் நோய்த்தொற்றுகள் என்னென்ன உங்களுக்கு தெரியுமா?

nathan

மஞ்சள் இஞ்சி மகிமை!

nathan

பற்களைத் துலக்கும் போது நம்மை அறியாமல் நாம் செய்யும் 8 தவறுகள்!

nathan

அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா?

nathan

பேன் தொல்லையால் அவதியா? : இதோ சூப்பர் ஐடியா…!

nathan