1
மருத்துவ குறிப்பு

குடற்புழுக்களை அடியோடு அழிக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

பொதுவாக குடலில் ஏற்படுகிற புழுக்களின் தாக்கம் என்பது ஒருவர் வாழுமிடம், உணவுப் பழக்கம், வயது ஆகியவற்றை எல்லாம் காரணமாக இருக்கிறது.

வயிற்றில் உருளைப்புழு, நாக்குப்பூச்சி, இதயப்புழு, கொக்கிப்புழு, நாடாப்புழு என பல வகைகள் உள்ளன.

இந்த குடற்புழு பிரச்சனை சாதாரணமானதல்ல. இதனால் தீவிர பின்விளைவுகளும் ஏற்படலாம். இதனால் தீவிர பின்விளைவுகளும் ஏற்படலாம். கடுமையான வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், குமட்டல், சோர்வு, உடல் எடை குறைவது, அனீமியா போன்றவை உண்டாக்கும்.

இந்த குடற்புழுக்களை வெளியேற்ற இந்த வேப்பம்பூ உதவும். இதனை துவையலாக செய்து சாப்பிடுவது நன்மையை தரும். தற்போது அதனை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவை

வேப்பம்பூ – அரை கப்
தேங்காய்த்துருவல் – அரை கப்
கடலைப்பருப்பு -10 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 5 டீஸ்பூன்
வரமிளகாய் 5
புளி- சிறிய அளவு
உப்பு, கடுகு- தேவைக்கு
நெய்- தேவைக்கு
செயல்முறை

வேப்பம் பூவை சுத்தம் செய்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உ.பருப்பு சேர்த்து வறுத்ததும் பிறகு தேங்காய்த்துருவல், புளி சேர்த்து, வரமிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். இதை தட்டில் கொட்டி ஆறவிடவும்.

வேப்பம் பூவை நெய்யில் வைத்து வதக்கி கொள்ளவும். இதை தனியாக வைக்கவும்.

மிக்ஸியில் முதலில் ஆறவைத்த பருப்பு தேங்காய் பொருளை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பிறகு வேப்பம் பூ சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இறுதியாக உப்பு சேர்த்து கலந்து விட்டால் வேப்பம் பூ துவையல் தயார்.

இதை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது சூடான உதிர் சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு கலந்து கொடுக்கலாம். சுவையாக இருக்கும்.

Related posts

எளிய மருத்துவம்-இய‌ற்கை வைத்தியம்!

nathan

ஒமிக்ரானின் தீவிரம் பயன்படுத்தும் துணி மாஸ்க் பாதுகாப்பானதா?

nathan

வெங்காயம் – பாதம் வைத்தியம்…!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உங்கள் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா?

nathan

அடிக்கடி நெட்டிமுறிப்பவரா நீங்கள்..?

nathan

பெண்கள் ருதுவாக குண்டுமணி இலை

nathan

சோம்பல் விடுப்போம்… சுறுசுறுப்புடன் வாழ்வோம்.

nathan

உங்களுக்கு தெரியுமா தொண்டை கட்டிச்சுன்னா உடனே சரியாகறதுக்கு என்ன செய்யணும்?

nathan

சூப்பர் டிப்ஸ்! இதயத்தை பலப்படுத்தணுமா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan