26.7 C
Chennai
Wednesday, Nov 20, 2024
tomato curry
ஆரோக்கிய உணவு

தக்காளி குழம்பு

மதிய வேளையில் சாதத்திற்கு நன்கு காரமாகவும் மிகுந்த சுவையாகவும் இருக்கும் குழம்பு செய்து சாப்பிட நினைத்தால் தக்காளி குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த தக்காளி குழம்பு பேச்சுலர்கள் செய்து சாப்பிடும் வகையில் செய்வதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும். மேலும் இந்த குழம்பு ஆரோக்கியமானது என்றும் சொல்லலாம். ஏனெனில் தக்காளியில் உள்ள அமிலம், புற்றுநோயை அண்ட விடாமல் தடுப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

சரி, இப்போது அந்த தக்காளி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Spicy Tomato Curry Recipe
தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 1/2 (நறுக்கியது)
தக்காளி – 4 (அரைத்தது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

அரைப்பதற்கு…

கிராம்பு – 3
பட்டை – 1
சோம்பு – 1/4 டீஸ்பூன்
கசகசா – 1/2 டீஸ்பூன்
மல்லி – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 3 பற்கள்
இஞ்சி – 1 இன்ச்
துருவிய தேங்காய் – 1/2 கப்
தக்காளி – 2 (பெரியது)

செய்முறை:

முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளி, கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து கிளறி, அத்துடன் மிளகாய் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு 10-15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், காரமான தக்காளி குழம்பு ரெடி!!!

Related posts

குடும்ப தலைவிகளுக்கான பயன்தரும் கிச்சன் டிப்ஸ்!! பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

சத்து நிறைந்த அவகோடா டோஸ்ட்

nathan

தெரிந்துகொள்வோமா? தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கு உதவும் உணவுகள் பற்றி

nathan

வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை போக்கும் சோம்பு !!

nathan

சத்து நிறைந்த முருங்கை கீரை சூப்

nathan

உலர்திராட்சையில் உடலுக்கு வலிமை சேர்க்கும் பல்வேறு சத்துக்கள் அடங்கியிருக்கின்றன

nathan

இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இனிப்பும் கசப்பும் கலந்த‌ பாகற்காய் குழம்பு

nathan

கொழுப்பை கரைக்கும் வாழை தண்டு தயிர் பச்சடி

nathan