2019090313
மருத்துவ குறிப்பு

நீண்ட நேரம் கணனி முன்பு அமர்ந்து வேலை செய்பவரா நீங்கள்?

நீண்ட நேரம் கணனி முன்பு அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான குறைபாடு தான் Computer Vision Syndrome.

நீண்ட நேரம் கணனி முன்பு அமர்ந்து உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் பல்வேறு உடல் நலக்கோளாறுகளுக்கு உள்ளாகி வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, Computer Vision Syndrome குறைப்பாட்டால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம். இவை தவிர மன அழுத்தம், பின் முதுகு வலி, தூக்கமின்மை, தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளும் இதில் அடங்கும். இந்த பாதிப்புகளில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால் ஒருசில வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

ஸ்கிரீன் பார்வை

கம்யூட்டர் மற்றும் செல்போனை பார்த்துக்கொண்டே இருப்பவர்களுக்கு நேரம் செல்வது தெரியாது. கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் இருந்து வெளிப்படும் ஒளியானது, நம் கண்களையும், உடலையும் பாதிக்கும். இதனால், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு தொடர்ந்து ஸ்கிரீனை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். வேலை அல்லது கம்ப்யூட்டர் கேம் என எதுவானாலும், நீண்ட நேரம் விளையாடுவதை தவிர்த்து, அதிலிருந்து வெளியேறிவிடுங்கள்.

இடைவெளி

கம்யூட்டர் முன்பு அமர்ந்து வேலையை தொடங்கிவிட்டால், முழு ஈடுபாட்டுடன் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். நாள் முழுவதும் அப்படி வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. உங்கள் வேலையில் கவனம் செலுத்தும் அதேநேரத்தில் உடல் நலனிலும் அக்கறை செலுத்துவது அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள். சிறிது நேரத்துக்கு ஒருமுறை இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். உடலை புத்துணர்ச்சிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கவனச்சிதறல்

உங்கள் செல்போனில் நோடிபிகேசனை ஆப் செய்துவிடுங்கள். அடிக்கடி வரும் மெசேஜ்கள் மற்றும் மெஜேச் ரிங் டோன் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும். தொடர்ந்து வேலையில் கவனம் செலுத்தி வரும் உங்களுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்திவிடும். ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, நோடிபிகேசன்களை பார்வையிடுங்கள். பணி நேரத்துக்குப் பிறகு, கம்ப்யூட்டர் பார்ப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

கலர் ஸ்கிரீன்

கம்ப்யூட்டரில் ஒரே ஒரு ஸ்கிரீனில் மட்டும் வேலை செய்வது பலருக்கு கடினமாக தோன்றுவதால், ஸ்கிரீன் கலர்களை அடிக்கடி மாற்றுபவர்கள் உண்டு. ஆனால், பல ஸ்கிரீன்களை அடிக்கடி மாற்றும்போது, செல்கள் மூளையின் நரம்புகளை அதிகமாக தூண்டுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதனால், மனச்சோர்வு ஏற்பட்டு வேலையில் தொடர் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். ஒரே ஸ்கிரீனில் வேலை செய்ய பழகிக்கொள்ளுங்கள்.

Related posts

இந்த ஒரு எண்ணெய் போதும்..வெரிகோஸ் வெயின் பிரச்சனை உள்ளதா?

nathan

அதிகரிக்கும் சிசேரியனுக்கு என்ன காரணம்?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

எப்படியெல்லாம் நெல்லிக்காயைப் பயன்படுத்தலாம்

nathan

மூட்டுவலியால் ரொம்ப அவதிப்படுறீங்களா?

nathan

முதுகுவலியால் அவஸ்தை படுகின்றீர்களா?… இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

தலைவலி வருவதற்கு பல காரணங்கள் இருக்கு போக்குவது எப்படி ?

nathan

உங்களுக்கு கோடையில் சரும புற்றுநோய் வராம இருக்கணும்-ன்னா, இதெல்லாம் சாப்பிடுங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா இரைப்பை கோளாறுகள் சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்யுமாம்!

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்களுக்கு ‘கக்கா’ இந்த நிறத்தில் வெளியேறுகிறதா? அப்ப உங்க உடலில் என்ன பிரச்சன இருக்குனு தெரியுமா?

nathan