28.6 C
Chennai
Monday, May 20, 2024
Tamil News AntiCovid Drug Developed by DRDO Cleared For Emergency Use SECVPF
மருத்துவ குறிப்பு

40 வயதை அடைந்த பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகள்

40 வயதை நெருங்கும் பெண்கள் ஒரு சில உடல் நல பரிசோதனைகளை அவசியம் செய்து கொள்ள வேண்டியது உடல் நலத்தை பாதுகாக்க உதவுகிறது.

இதனால், நோய் பாதிப்பில் இருந்து அவர்களை பாதுகாத்துக்கொள்வதற்கும் துணை புரியும்.

இப்பதிவில் அவர்கள் முறையான பரிசோதனை என்னென்ன செய்துகொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

பேப் ஸ்மியர் பரிசோதனை

பேப் ஸ்மியர் பரிசோதனையானது, இவை கர்ப்பப்பை வாய் பகுதியில் வைரஸ் தொற்று காரணமாக புற்றுநோய் ஏற்படக்கூடும்.

அத்தகைய கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டறிய உதவும் பரிசோதனை இது.

மேலும், யோனி, கருப்பை, கருப்பை வாய், கரு முட்டையை கருப்பையில் கொண்டு செல்லும் பலோபியன் குழாய்கள், சிறுநீர்ப்பை, மலக்குடல் போன்ற உறுப்புகள் பரிசோதனைக்கு செயல்படுத்தப்படும்.

அப்போது புற்றுநோய் உண்டாவதற்கு காரணமான செல்களின் தன்மையை கண்டறிய முடிகிறது.

கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு பெண்களின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

21 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘பேப் ஸ்மியர்’ பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது. இதனால் புற்றுநோயை ஆரம்பத்திலேய கண்டறிய முடியும்.

தைராய்டு பரிசோதனை

கழுத்தின் முன் பகுதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பியான தைராய்டு சுரப்பி அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உற்பத்தி செய்யப்பட்டு அதன் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக தைராய்டு பிரச்சினை உண்டாகிறது.

இவை மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு, உடல் சோர்வு, சருமம் மற்றும் முடி உலர்வடைதல், முடி உதிர்தல், உடல் எடை அதிகரித்தல் போன்றவை தைராய்டு பிரச்சினைக்கான முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

எலும்பு தாது அடர்த்தி பரிசோதனை

இந்த சோதனையானது 40 வயதை நெருங்க தொடங்கியதும், பெண்களுக்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும்.

மாதவிடாய் காலங்களில் பாதிப்பு அதிகரிக்கும். கால்சியம் குறைபாடுகளால் எலும்புகளின் வலிமை குறைந்து உடல் பலவீனமாகிவிடும்.

அதனால், எலும்புகளின் ஆரோக்கியத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு எலும்பு தாது அடர்த்தி பரிசோதனை பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது.

நீரிழிவு சோதனை

ரத்தத்தில் சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள உதவும் இந்த பரிசோதனையை 40 வயதை நெருங்கும் பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை செய்து கொள்வது நல்லது.

அதிக பசி, தாகம், உடல் எடையில் மாற்றம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால், இவை நீரிழிவு நோய் வயது வித்தியாசமின்றி பலரையும் பாதித்து வருவதால் நீரிழிவு பரிசோதனை செய்து கொள்ளும் விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…தயவு செய்து பல் துலக்கும்போது இந்த பிழையை மறந்தும் கூட செய்யாதீர்கள்!

nathan

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையா? கவலை வேண்டாம்!

nathan

திறமையை வளர்த்து கொள்ளும் பெண்கள்

nathan

தலையில் அரிப்பா? குணப்படுத்த ஈஸி வழிகள்!!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

காது வலியை குணமாக்கும் இலைக்கள்ளி

nathan

இயற்கையான முறையில் பெண்கள் கருத்தரிக்க சில எளிய வழிமுறைகள்

nathan

மரிக்கொழுந்தை தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் கிடைக்கும் நன்மை தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட அற்புத செடி!

nathan

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மூன்று முடிச்சு போடுவது ஏன்?என்று தெரியுமா?

nathan