28.2 C
Chennai
Tuesday, Dec 3, 2024
60324
மருத்துவ குறிப்பு

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கனுமா?

இன்றைக்கு பலரில் உயிரை மெல்ல மெல்ல பறிக்கும் நோய்களுள் நீரிழிவு நோய் இரண்டாம் இடத்தில் உள்ளது.

நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது, குடும்பப் பாரம்பரியம். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

இதனை ஆரம்பத்தில் கண்டறிந்து ஒரு சில இயற்கை பானங்கள் மூலம் குறைக்க முடியும். தற்போது நீரிழிவு நோயை விரட்டும் ஒரு சில பானங்களை இங்கே பார்ப்போம்.

​அஸ்வகந்தா டீ

அஸ்வகந்தா வேரை சீவிக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் நான்கு கப் கொதிக்க வைத்த நீரில் ஊற்றி அதில் வெட்டி வைத்த அஸ்வகந்தா வேரை போட்டு மூடி வைக்கவும்.

10 நிமிடங்கள் கழித்து அதனை வடிக்கட்டி டம்ப்ளரில் ஊற்றி வெதுவெதுப்பாக குடித்து வரலாம்.

​வேம்பு டீ

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வேப்பிலை பொடி மற்றும் லவங்கப்பட்டை தூளைச் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதேபோல், தண்ணீரில் தேயிலையை சேர்த்துக் கொதிக்க வைத்து வடித்துக் கொள்ளவும்.

இந்த இரண்டு பானங்களையும் ஒன்றாக கலந்து குடித்து வரவும். இந்த தேநீரை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

​பூண்டு டீ

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தேயிலை இலைகளைச் சேர்க்கவும். பிறகு அரைத்த பூண்டு மற்றும் இஞ்சியைச் சேர்த்து சில நொடிகள் கொதிக்க வைக்கவும்.

பிறகு அதில் சிறிது ஏலக்காய் பொடி மற்றும் கிராம்பு சேர்க்கவும். நன்றாக கொதித்ததும், வடிகட்டி தேன் கலந்த பிறகு குடிக்கவும். இது நீரிழிவு நோயை ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரிய ஆபத்து காரணியான ஹோமோசிஸ்டீன் என்ற அமினோ அமிலத்தைக் குறைக்கிறது.

​வெந்தய டீ

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி சிறிது வெந்தயத்தை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின்னர் சூடு குறைந்து வெதுவெதுப்பானவுடன் அதனை வடிகட்டி, அதில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி குடித்து வந்தால் சர்க்கரை வியாதி கட்டுக்குள் இருக்கும்.

​கற்றாழை தேநீர்

கற்றாழையின் சதை பகுதியை எடுத்து நன்கு தண்ணீரில் கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் மூன்று டம்பளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் கழுவி வைத்திருக்கும் கற்றாழையை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இனிப்பிற்கு கருப்பட்டி சேர்த்து கொள்ளலாம். இதனை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

​பிளாக் டீ

கருப்பு தேயிலை இலை இரண்டு தேக்கரண்டி அளவு போட்டு கொதிக்க விடுங்கள். பிளாக் டீ இலையின் சாறு தண்ணீரில் நன்றாக இறங்க வேண்டும். மிதமான தீயில் சுட வையுங்கள். பிறகு வடிகட்டி அதனுடன் லெமன் ஜூஸ் சேர்த்து சூடாக பரிமாறவும். இது ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.

​க்ரீன் டீ

ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்கவைத்து, இறக்க வேண்டும். அதில், ஒரு தேக்கரண்டி அளவுக்கு கிரீன் டீ இலைகளைப் போட்டு, இரண்டு நிமிடங்கள் மூடிவைக்க வேண்டும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, கிரீன் டீயின் சாறு வெந்நீரில் இறங்கியிருக்கும். அதை வடிகட்டி, ஓரிரு சொட்டுகள் எலுமிச்சைச் சாறு சேர்த்து, சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்க வேண்டும்.

Related posts

பெண்ணாக இருப்பதன் ஆனந்தங்களும் அவஸ்தைகளும்

nathan

பல் கவனம்… உடல்நலத்துக்கு உதவும்! நலம் நல்லது!

nathan

சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடைய எளிய பாட்டி வைத்திய முறைகள்!!!

nathan

சரும நோய்களை சமாளிப்பது எப்படி?

nathan

வாய்விட்டு சிரிச்சா மட்டுமில்ல, அழுதாலும் நோய்விட்டு போகும் – எப்படின்னு தெரியுமா???

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகளின் உடலைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!!!

nathan

ஏன் தெரியுமா மருத்துவர் முதலில் நமது நாக்கை பார்ப்பது?

nathan

குழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா?

nathan

பிரச்சினைகளை எதிர்கொள்ள தன்னம்பிக்கை தேவை

nathan