28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
21 1429597505 12sugarcane
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு அசிடிட்டி பிரச்சனை உள்ளதா?அப்போ இதை செய்யுங்கோ..!!

இன்றைய தலைமுறையினர் அசிடிட்டி பிரச்சனையால் அதிகமாகவே அவஸ்தைப்படுகின்றனர். அசிடிட்டி என்பது உணவை செரிக்க வயிற்றில் சுரக்கப்படும் அமிலமானது அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் நிலையாகும்.

 

செரிமான அமிலம் அதிகம் சுரப்பதால் வயிற்றில் எரிச்சல், வலி மற்றும் அந்த அமிலம் அப்படியே உணவுக்குழாய் வழியே மேலே வந்து நெஞ்செரிச்சலையும் ஏற்படுத்தும். இந்த நிலை நீடித்தால், அது அல்சருக்கு வழிவகுக்கும்.

 

பெரும்பாலும் அசிடிட்டி மன அழுத்தம், காரமான உணவுகள், சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது அல்லது சாப்பிடுவதைத் தவிர்ப்பது மற்றும் சிகரெட் பிடிப்பது போன்றவற்றால் ஏற்படும். இந்த அசிடிட்டி பிரச்சனை கோடையில் இருந்தால், இன்னும் நிலைமை மோசமாகிவிடும்.

 

ஆகவே அசிடிட்டி இருப்பவர்கள், கோடைக்கால பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட்டு வந்தால், இப்பிரச்சனைக்கு நிவாரணம் கிடைக்கும். சரி, இப்போது அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கான சத்தான கோடைக்கால உணவுகள் என்னவென்று பார்ப்போம்.

தர்பூசணி

தர்பூசணியில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இவை அதிக அளவில் செரிமான அமிவம் சுரப்பதைத் தடுக்கும். மேலும் இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், அல்சர் மற்றும் உடல் வறட்சி பிரச்சனையையும் குணப்படுத்தும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் வைட்டமின் சி இருப்பதால், இவை செரிமான அமிலத்தினை சீராக சுரக்க வழிவகுத்து, அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலில் இருந்து நிவாரணம் தரும். அதுமட்டுமின்றி, நெல்லிக்காய் இதர செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்யும்.

மாம்பழம்

மாம்பழத்தில் உள்ள குளிர்ச்சியான தன்மையினால், வயிற்றில் சுரக்கப்படும் செரிமான அமிலம் நடுநிலையாக்கப்பட்டு, நெஞ்செரிச்சல் ஏற்படுவதையும் தடுக்கும். அதற்கு மாம்பழத்தை அப்படியே அல்லது மில்க் ஷேக் செய்தோ குடிக்கலாம்.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்திற்கும் செரிமான அமிலத்தை நடுநிலையாக்கி, அதன் அதிகப்படியான உற்பத்தியைக் குறைக்கும் திறன் உள்ளது. எனவே கொய்யாப்பழம் கிடைத்தால், அதனை தவறாமல வாங்கி சுவைத்து மகிழுங்கள்.

வாழைப்பழம்

அனைத்து காலங்களிலும் கிடைக்கும் வாழைப்பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம், நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே அசிடிட்டி இருந்தால், தினமும் ஒரு வாழைப்பழத்தை தவறாமல் சாப்பிட்டு வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

முலாம்பழம்

முலாம் பழத்தில் உள்ள குளிர்ச்சி தன்மையால், இது அசிடிட்டியினால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் தந்து, அதிகப்படியான அளவில் செரிமான அமிலம் சுரப்பதைத் தடுக்கும்.

பீச்

பீச் பழத்தை எங்கு கண்டாலும் வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் இது அசிடிட்டி மற்றும் அல்சரைக் குணமாக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

மாதுளை

மாதுளைக்கும் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும் சக்தி உள்ளது. எனவே அவ்வப்போது கோடையில் மாதுளையை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதன் மூலம் வயிற்று உப்புசம் மற்றும் வலியும் நீங்கும்.

இளநீர்

இளநீரை தினமும் குடித்து வந்தால், அசிடிட்டி பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் இதில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் நீர்ச்சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் இதில் சிட்ரிக் ஆசிட் இருப்பதால், பலரும் இதை சாப்பிட யோசிப்பார்கள். ஆனால் உண்மையில் ஆரஞ்சு பழம் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இது அதிகப்படியான செரிமான அமிலம் சுரப்பதையும் தடுக்கும். இதனால் உடல் வறட்சி மட்டுமின்றி, அசிடிட்டி பிரச்சனையையும் தடுத்து, கோடையில் சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்.

கரும்பு ஜூஸ்

தற்போது கரும்பு ஜூஸ் கிடைப்பதால், இதனை அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் வாங்கி பருகி வந்தால், அசிடிட்டியின் தீவிரத்தைத் தடுக்கலாம்.

குடைமிளகாய்

குடைமிளகாய் கூட செரிமான அமிலத்தை நடுநிலையாக்கி, அசிடிட்டியில் இருந்து நிவாரணம் தரும். அதற்கு இதனை சாலட்டிலோ அல்லது பாதியாக வேக வைத்து பொரியல் போன்று செய்தோ சாப்பிடவாம்.

சுரைக்காய்

சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இவை உடல் வறட்சியை மட்டுமின்றி, அசிடிட்டி மற்றும் அல்சரில் இருந்து நிவாரணம் தரும். எனவே அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள், கோடையில் சுரைக்காயை அதிகம் சாப்பிட்டு வருவது நல்ல நிவாரணம் தரும்.

முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர்

அசிடிட்டி மற்றும் அல்சர் பிரச்சனை உள்ளவர்கள், முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவரை உட்கொண்டு வருவது நல்லது.

Related posts

குழந்தைகளுக்கு விருப்பமான பேரீச்சம்பழ கீர்

nathan

சூப்பர் டிப்ஸ்! இரும்புச்சத்தை அதிகரிக்கும் அப்பத்தாக்களின் பலகாரம் கேழ்வரகு குலுக்கல்ரொட்டி..

nathan

தெரிஞ்சிக்கங்க…காலையில் வெறும் வயிற்றில் தேன் சாப்பிடலாமா?

nathan

வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் சீரகக் குழம்பு

nathan

புதிய பழங்கள்… அரிய பலன்கள்…

nathan

சூப்பர் டிப்ஸ் ! அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை…!!

nathan

வெள்ளைச் சீனி ஏற்படுத்தும் ஆபத்துக்கள் தெரியுமா?

nathan

மூளைக்கு சுறுசுறுப்பு தரும்!

nathan

சுவையான முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி?…

nathan