வெங்காயம் உணவில் சுவைக்காக சேர்க்கப்படும் அற்புதமான உணவு. வெங்காயத்தை வதக்கியோ அல்லது வேகவைத்தோ எப்படி வேண்டும் என்றாலும் சாப்பிடலாம்.
ஆனால் பச்சையாக சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.
சிறுநீரகப் பிரச்சினை முதல் உடல் எடை குறைவது, கொழுப்பைக் குறைப்பது வரை அத்தனை பிரச்சினைகளுக்கும் வெங்காயம் மிகச் சிறந்த தீர்வாக இருக்கும்.
இனி தினமும் சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்…
இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை சாப்பிட்டால் இரத்த சோகை பிரச்சனைகள் குணமாகும்.
வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் தலைவலி, முழங்கால் வலி, பார்வை மங்குதல் போன்றவை குணமாகும்.
சளி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்கும்.
வெட்டுக்காயம் உள்ள இடத்தில் வெங்காயத்தை வதக்கி ஒரு துண்டுகள் காயத்தில் வைத்து வந்தால் காயங்கள் விரைவில் குணமாகும்.
வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிட்டால் லேசாக வாய் துர்நாற்றம் ஓடிவிடும்.
நெஞ்சு வலி காரணமாக இதய உள்ள ரத்த நாளங்களில் இரத்தம் உறைவு ஏற்படுவதால் நெஞ்சு வலி ஏற்படும்.
தினமும் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் உறையும் பிரச்சினை சரியாகும்.