7 1521722675
மருத்துவ குறிப்பு

உங்கள் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்களா?அப்போ இதை செய்யுங்கோ..!!

நேஷனல் சில்ரன்ஸ் கண்டினன்ஸ் சொசைட்டி கூறும் கருத்துப் படி 5 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள குழந்தைகள் பெரும்பாலும் ஒரு நாளைக்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட தடவை சிறுநீர் கழிக்கின்றனர்.

frequent urination symptoms and treatment
ஆனால் இதனால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றாலும் இதை சரியாக கவனிப்பது முக்கியம். ஒரு நாளைக்கு 8 தடவை மேல் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு கீழ்க்காணும் பிரச்சினைகள் இருக்கவும் வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கின்றனர்.

சிறுநீர் கழித்தலின் பொதுவான அறிகுறிகள்

அடிக்கடி சிறுநீர் கழித்தல் பழக்கம் 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும்

வலியில்லாமல் சிறுநீர் கழித்தல்

சிறுநீர் தொற்றுக்கள் எதுவும் இருக்காது

சிறுநீரை அடக்க முடியும்

சிறுதளவு சிறுநீர் கழித்தல்

ஒரு நாளைக்கு அதிகமான தண்ணீர் குடிக்காமல் இருப்பது

தூங்கி எழுந்திருக்கும் போது அல்லது இரவு நேரங்களில் சிறுநீர் கழித்தல்

குடலியக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை

தினமும் 5-10 நிமிட இடைவெளியில் சிறுநீர் கழித்தல். ஒரு நாளைக்கு 40 தடவை சிறுநீர் கழித்தல் அதாவது ஒரு மணி நேரத்திற்கு 3-4 தடவை சிறுநீர் கழித்தல்

மருத்துவ ஆலோசனை

உங்கள் குழந்தைகளின் சிறுநீர் பழக்கத்தில் கீழ்க்காணும் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை நாடுவது நல்லது. சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது வலி ஏற்பட்டால்

பகல் நேரங்களில் அவர்களையும் அறியாமல் சிறுநீர் கழித்து விட்டால்

குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் உங்கள் குழந்தைகளின் உடல்நலனை கவனமாக கவனிக்க வேண்டும்.

விளைவுகள்

உங்கள் குழந்தைகள் ஒரு நாளைக்கு தினமும் அதிகமாக தண்ணீர் குடித்தாலோ அல்லது மலச்சிக்கல் ஏற்பட்டாலோ அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இது ஒரு இயல்பான நிலை. இதைத் தவிர சில பாதிப்புகள் இருக்கவும் வாய்ப்புள்ளது. அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

நீரழிவு நோய் :

உங்கள் குழந்தைகள் நீரிழிவு நோயால் பாதிப்படைந்து இருந்தால் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏற்படும். அடிக்கடி தாகம் ஏற்பட்டு தண்ணீர் நிறைய குடிப்பார்கள். எடை குறைதல் பிரச்சினையும் ஏற்படும். இரத்தத்தில் அதிகப்படியான குளுக்கோஸ், கீட்டோன்ஸ் இருப்பதால் அது சிறுநீர் வழியாக வெளியேறுிறது. இதை மருத்துவ பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளலாம்.

சிறுநீர்ப்பையை வெற்றிடமாக்குதல் :

குழந்தைகள் பொதுவாக விளையாட்டு மும்பரத்தில் சிறுநீர் கழிக்க மறந்து விடுவார்கள். அல்லது அரை குறையாக சிறுநீர் கழித்து விட்டு விளையாட ஆரம்பித்து விடுவார்கள். இது தவறு. முழுவதுமாக சிறுநீர் கழிக்க பழக்குங்கள். 2-3 மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிக்க அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

பாலினடிஸ் அல்லது வால்வோவஜினினிஸ் –

பாலினடிஸ் என்பது ஆண்குறிகளில் ஏற்படும் ஒரு வீக்கம், வால்வோவஜினினிஸ் என்பது பெண்குறிகளில் ஏற்படும் வீக்கத்தை குறிக்கிறது. இந்த மாதிரியான வீக்க அறிகுறிகள் உங்கள் குழந்தைகளிடம் தென்பட்டால் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். குளித்த பின்பு அல்லது அந்தரக பகுதிகளை சரியாக துடைக்காமல் இருப்பது அழற்சியை ஏற்படுத்தி இந்த மாதிரியான பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

பொள்ளாக்கிரிரியா (பாலியூரியா) –

இது எதனால் ஏற்படுகிறது என்ற சரியான காரணம் தெரியவில்லை. இருப்பினும் இதனாலும் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். 4-6 வயதுள்ள குழந்தைகள் ஒரு நாளைக்கு 30-40 தடவை சிறுநீர் கழிப்பார்கள். இதற்கு வேறு எந்த அறிகுறிகளும் தென்படுவதில்லை. மன அழுத்தம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.சிறுநீர் பரிசோதனையும் இயல்பாக இருக்கும். இரண்டு வாரம் அல்லது ஒரு மாதத்தில் சிகச்சையில்லாமலே இது சரியாகி விடும்.

சிறுநீர் பாதை தொற்று

சிறுநீர் பாதை தொற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தலை ஏற்படுத்தும். இதன் அறிகுறிகளாவன :வலி அல்லது எரிச்சலுடன் சிறுநீர், சிறுநீர் கழிக்க அவசரம், முதுகு வலி, நுரையுடன் சிறுநீர், இரத்தம் கலந்த சிறுநீர்,குமட்டல் காய்ச்சல் போன்றவை ஏற்படும். சிறுநீரக பரிசோதனை சிறுநீர் பாதையில் பாக்டீரியா தொற்று இருப்பதை காட்ட உதவுகிறது. ஆன்டி பயாடிக் எடுத்து கொண்டால் இந்த தொற்றிலிருந்து விடுபடலாம்.

நீரிழிவு நோய்குறி

சில நேரங்களில் இந்த அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் குழந்தைகளுக்கு குறைவான ஆன்டி டையூரிடிக் ஹார்மோன் சுரப்பை யும், நீரிழிவு நோய்குறியையும் குறிக்கிறது. சிறுநீரகம் உடலில் சுரக்கும் ஆன்டி டையூரிடிக் ஹார்மோனுடன் சேர்ந்து சரியாக செயல்படவில்லை என்பதை குறிக்கிறது. இந்த ஹார்மோன் அளவை பொருத்து தான் சிறுநீரகம் உடலில் உள்ள தண்ணீரை உறிஞ்சி கொள்ளும். இந்த ஹார்மோன் சரியாக சுரக்க வில்லை என்றால் சிறுநீரகமும் சரியாக தன் வேலையை செய்வதில்லை. இதனாலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பு ஏற்படுகிறது.

சிகிச்சைகள்

சிறுநீர்ப் பாதை தொற்று – இது அடிக்கடி குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றும் கூட. ஆன்டி பயாடிக் எடுத்து கொண்டால் போதும் தீர்வு நிச்சயம்.

நீரிழிவு நோய்- தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை இதை ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கு இரத்த சர்க்கரை அளவை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். மருந்துகள், இன்சுலின் ஊசிகள் இதை கட்டுப்படுத்துகிறது.

பாலினடிஸ் அல்லது வால்வோவஜினினிஸ் – இந்த பிரச்சினையை குழந்தைகள் தங்கள் அந்தரங்க பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் தவிர்க்கலாம்.

மனஅழுத்தம்

மன அழுத்தம் காரணமாக கூட அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏற்படும். பெற்றோர் மீதான பயம், குடும்ப உறுப்பினர்களின் மரணம், திருமண பிரச்சினைகள், விபத்துகள்,புதிய பள்ளி தொடக்கம் போன்றவை கூட இந்த பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே உங்கள் குழந்தைகளை பயத்தை போக்கி ரிலாக்ஸ் ஆக விளையாட வையுங்கள். குறிப்பிட்ட இடைவெளியில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை அவர்களுக்கு ஊக்கப்படுத்துங்கள்.

அவர்கள் உடல் நலத்தையும் அடிக்கடி கவனியுங்கள்.

கற்பித்தல்

உங்கள் குழந்தைகள் அவர்களையே அறியாமல் சிறுநீர் கழித்து விட்டாலும் அமைதியாக எடுத்து கூறுங்கள். அவர்களுக்கு புரியும் முறைகளை பின்பற்றி கற்றுக் கொடுங்கள்.

உங்கள் குழந்தைகளின் சருமத்திற்கு ஒத்துக் கொள்ளாத சோப்பு குளியலை தவிருங்கள். இதனால் கூட அந்தரங்க பகுதியில் அழற்சி ஏற்பட்டு அடிக்கடி சிறுநீர் கழிக்க வாய்ப்புள்ளது.

Related posts

உங்களுக்கு தெரியுமா தலைவலியை குணமாக்கும் இயற்கை வழிமுறைகள்

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! திருமணம்… கர்ப்பம்… வலிப்பு நோய் இருக்கும் பெண்கள் கவனிக்க வேண்டியவை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் அதிகமாக காப்ஃபைனால் ஏற்படும் உடல்நல தாக்கங்கள்!!!

nathan

உள்ளாடையைத் தேர்ந்தெடுக்கும் முன் இதை கவனியுங்கள் பெண்களே!

nathan

தெரிந்துகொள்வோமா? பிரசவத்தின் போது முதுகில் மயக்க மருந்து கொடுப்பது ஏன்? இதனால் என்ன நன்மை?

nathan

உங்களுக்கு சும்மா குதிரை மாதிரி பலம் வரணுமா? இந்த சூரணத்த தேன் கலந்து சாப்பிடுங்க

nathan

உங்களுக்கு தெரியுமா நகங்கள் வளர்வதற்கு எளிமையான வழிமுறைகள்…

nathan

மருமகள்களுக்கு சில அன்பான ஆலோசனைகள்

nathan

உங்களுக்கு இந்த அறிகுறிகள் வைட்டமின் குறைபாட்டை தான் குறிக்கிறது என்பது தெரியுமா?படிங்க!

nathan