28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
ci 1521017511
ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைகளுக்கு வெல்லம் கொடுக்கலாமா?… எவ்வளவு கொடுக்கலாம்?…தெரிஞ்சிக்கங்க…

குழந்தைகளுக்கு வெல்லத்தை பயன்படுத்துவதால் என்ன பயன் எனத் தெரியுமா
வெல்லத்தினால் நிறைய ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என உங்களுக்கு தெரியுமா.

ஆமாங்க அதனால் தான் நம் முன்னோர்கள் பயன்படுத்திய தேநீரில் ஏன் சாப்பிட்ட பிறகு கூட ஒரு துண்டு வெல்லத்தை சாப்பிட்டு வந்துள்ளனர். நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இந்த வெல்லத்தில் உள்ளது. ஆனால் அப்படிப்பட்ட வெல்லத்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற நிறைய கேள்விகள் இன்னும் தாய்மார்களிடம் நிலவி வருகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் நாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக இந்த வெல்லத்தை தாராளமாக பயன்படுத்தலாம்.

ஏன் வெல்லம்

இந்த வெல்லம் ஹர் என்ற பெயரில் பொதுவாக அழைக்கப்படுகிறது. கரும்பிலிருந்து பெறப்படும் சாறை நன்கு காய்ச்சி சுத்திகரிக்கப்படாமல் பெறப்படும் சர்க்கரை தான் இந்த வெல்லம். இந்தியாவில் பொதுவாக எல்லா இனிப்பு வகைகளிலும், உணவுகளில் அதன் சுவையை அதிகரிக்கவும் இந்த வெல்லம் பெரிதும் பயன்படுகிறது.

கருப்பட்டி

கரும்பை தவிர பனை மரத்தில் இருந்து கூட இவைகள் பெறப்படுகின்றன. அவை கருப்பட்டி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் நிறைய தாதுக்கள் அடங்கியுள்ளன. எனவே தான் இது வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக மிகவும் சிறந்தது.

ஊட்டச்சத்து

இந்தியாவில் கிராமப் புறங்களில் ஏழ்மையில் வாழும் குழந்தைகள் போதுமான ஆரோக்கியமான உணவுகள் கிடைக்காமல் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் வாழ்கின்றனர். எனவே அந்த மாதிரி பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு தினசரி வெல்லத்தைச் சேர்த்து கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் இரும்புச்சத்து பற்றாக்குறையைப் போக்க முடியும். ஆனால் நகர்ப்புற குழந்தைகள் அளவுக்கு அதிகமாக உணவை விரும்புவதால் அவர்கள் வெல்லம் சாப்பிடலாமா என்ற சந்தேகம் தாய்மார்களிடையே உள்ளது. ஆனால் நீங்கள் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கண்டிப்பாக குறிப்பிட்ட அளவாவது வெல்லத்தை சேர்த்து கொள்வது நல்லது.

நன்மைகள்

குழந்தைகளுக்கு இனிப்பு சுவைக்காக சர்க்கரையைக் கொடுப்பதற்கு பதிலாக, வெல்லத்தை கொடுக்கலாம். அதனால் ஏராளமான சத்துக்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கும். குழந்தைகளுக்கு வெல்லத்தைக் கொடுப்பதன் மூலம் கிட்டதட்ட ஆறு விதமான நன்மைகளைப் பெற முடியும்.

நோய் எதிர்ப்பு திறன்

வெல்லத்தில் அதிகளவு தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே இவை குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு ஹூமோகுளோபின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

மலச்சிக்கலைப் போக்கும்

சீரணமின்மை, மலச்சிக்கல் மற்றும் வாய்வு போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது. இவை சீரணிப்பதற்கான என்ஜைம்களை தூண்டி குழந்தைகளுக்கு சீரண சக்தியை அதிகரிக்கிறது.

அனிமியா

வெல்லத்தில் மிக அதிக அளவில் இரும்புச் சத்து இருப்பதால் இரும்புச் சத்து பற்றாக்குறை மற்றும் இரத்த சோகை எனப்படும் அனீமியா போன்றவை உண்டாவதைத் தடுக்க முடியும். நாம்வெல்லத்துக்குப் பதிலாக சர்க்கரையைப் பயன்படுத்திய பின், பெரும்பாலான குழந்தைகள் இரும்புச்சத்து பற்றாக்குறையாலும் ரத்தத்தில் சர்க்கரை அதிகமாகி, உடல்பருமனாலும் பாதிக்கப்படுகின்றனர்.

கல்லீரல் நச்சுக்களை வெளியேற்றுதல்

வெல்லம் கல்லீரல் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்தம் செய்கிறது. உடலில் உண்டாகிற டாக்சின்கள் தான் பெரும்பாலான நோய்த்தொற்றுகளை உண்டாக்குகின்றன. அத்தகைய டாக்சின்களை வெல்லம் வெளியேற்றறும்.

இருமல் மற்றும் ஜலதோஷம்

குழந்தைகள் என்றாலே அடிக்கடி ஜலதோஷம், இருமல் இவற்றால் அவதிப்படுவார்கள். லேசாக பருவநிலை மாறினாலே ஜலதோஷம் பிடிக்க ஆரம்பித்துவிடும். இதற்கு சிறுதளவு வெல்லத்தை சூடான நீரில் கலந்து குடித்தால் போதும் சளி இருமல் தொல்லை அகலும்.

எலும்பு மற்றும் பற்கள் வலுப்படும்

வெல்லத்தில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற நிறைய தாதுக்கள் அடங்கியுள்ளன. அதனால் வெல்லம் உங்கள் குழந்தைகளின் பற்கள் மற்றும் எலும்புகள் வலுவாக இருக்க உதவுகிறது. இனிப்புகள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளாதவர்கள் தினமும் சாப்பிட்டு முடித்தபின், குழந்தைகளுக்கு ஒரு சிறு துண்டு வெல்லத்தை சாப்பிடக் கொடுக்கலாம்.

தீமைகள்

வெல்லம் குழந்தைகளுக்கு நல்லது என்றாலும் சரியான அளவு பயன்படுத்துவதும் முக்கியம். எனவே நீங்கள் அதிகமாக வெல்லத்தை குழந்தைகளுக்கு கொடுப்பதால் ஏற்படும் தீமைகளையும் அறிந்து கொண்டும் செயல்படுங்கள். சில குழந்தைகள் இந்த வெல்லத்திற்கு அடிமையாகி விடுவார்கள். அதை மட்டுமே விரும்பி விரும்பி சாப்பிடுவர். அதுவும் நல்லது அல்ல. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வாமை

சில குழந்தைகளுக்கு வெல்லத்தின் சூடான குணத்தால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது. புழுக்கடி தொந்தரவு, சரும வடுக்கள், உடம்பு சூடு மற்றும் வயிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று விட்டு பயன்படுத்துங்கள்.

வெல்லம் அதிக கலோரியை கொண்டு இருப்பதால் சில குழந்தைகளின் சீரண மண்டலம் எல்லா ஊட்டச்சத்துகளையும் உறிஞ்சி கொள்ள முடியாது. எனவே அவர்களுக்கு இதை அதிகமாக பயன்படுத்தாதீர்கள். நல்ல சுத்தமான வெல்லம் கிடைப்பது கடினம். எனவே குழந்தைகளுக்கு பார்த்து பயன்படுத்துவது நல்லது.

Related posts

குழந்தைகளுக்கு மனநல பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

nathan

இது எளிமையான வழி.! சூப்பர் டிப்ஸ் உடல் எடையை குறைக்க.,

nathan

உங்க மென்மையான சருமத்திற்கு ஏற்ற மூலிகைகள் தெரியுமா!!!

nathan

உங்களுக்கு தெரியுமா வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்களின் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் தீராத வறுமையை ஏற்படுத்துமாம்…!

nathan

புட்டிப்பால் குடிக்கும்பொழுது, குழந்தைகளிடம் சில விஷயங்களில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.

nathan

வீட்டில் தனியாக இருக்கும் போது உங்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்வது?

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம்! இந்த பொருட்களில் ஒன்று உங்கள் வீட்டிலிருந்தாலும் துரதிர்ஷ்டம் உங்கள் வீடு தேடி வருமாம் தெரியுமா?

nathan

இந்த 5 ராசிக்காரங்களுக்கு அடுத்தவங்க மனசுல இருக்கிறத படிக்கும் சக்தி இருக்காம்…

nathan

குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்! முயன்று பாருங்கள்

nathan