26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
09 10 fight4
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…பெண்களால் ஆண்கள் சந்திக்கும் 10 பிரச்சனைகள்!!!

ஒரு ஆணும் பெண்ணும் ஒன்று சேரும் போது தான் ஒருவருக்கொருவர் முழுமை அடைகின்றனர். பெண்களை கவரும் வழிகளை தேடி ஆண்கள் அலைவார்கள். அதேப்போல் தான் பெண்களும் ஆண்களை கவரும் வழிகளை தேடுவார்கள். இது நேற்று இன்று அல்ல, காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. கடவுள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதிரி படைத்திருக்கிறார். அதனால் தான் ஒருவர் கஷ்டமான சூழ்நிலையை அனுபவித்து வரும் போது, அவருக்கு ஆறுதல் அளிக்கவும், ஆதரவு அளிக்கவும், அவரின் கணவன் அல்லது மனைவி உறுதுணையாக உடனிருப்பார்கள்.

 

ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை பிடித்திருந்தாலோ அல்லது அவளை காதலித்தாலோ, அவளுக்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். பெண் மட்டும் சளைத்தவள் அல்ல. தனக்கு ஒருவனை பிடித்து விட்டால் போதும், அவளும் அவனுக்காக தன் குடும்பம், வீடு, சொத்து, நண்பர்கள் என அனைத்தயும் துறந்து, எந்த ஒரு எல்லைக்கும் செல்வாள்.

 

ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள மனநிலை அமைப்பு, யோசிக்கும் அமைப்பு, நடத்தை போன்றவைகளில் பெரிய வேறுபாடுகள் இருக்கும் என மனத் தத்துவ சாஸ்திரம் கூறுகிறது. இதனால் தான் இருவராலும் வாழ்க்கையில் முழுமை அடைய முடிகிறது. அவர்களின் பந்தமும் நீடித்து நிலைக்கிறது. பெண்களுக்கு ஆண்களைப் பற்றி புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் சில உள்ளது. அதே போல் ஆண்களுக்கு பெண்களைப் பற்றி புரிந்து கொள்ள முடியாத சில விஷயங்களும் இருக்கவே செய்கிறது. பெண்கள் சில விஷயங்களை ஏன் செய்கிறார்கள் என ஆண்கள் வியப்புக்குள்ளாகும் ஒரு 10 விஷயங்களைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.

அலங்காரத்திற்கு மணிக்கணக்காக நேரம் எடுத்துக் கொள்வது

அலங்காரம் செய்து கொள்ள ஆசைப்படாத பெண்கள் இருக்க முடியுமா? எவ்வளவு சிறப்பாக தன்னை அலங்கரித்து கொள்ள முடியுமோ அந்தளவிற்கு அதற்கு நேரத்தை செலவழிப்பார்கள். முதலில் என்ன ஆடை அணிய வேண்டும் என தேர்ந்தெடுப்பார்கள். அதற்கு என்ன கம்மல், என்ன வளையல், என்ன ஆபரணங்கள், என்ன அழகு சாதனங்கள் போன்ற பல விஷயங்களை தேர்ந்தெடுப்பர்கள். வெளியே கிளம்புவதற்கு முன்பு, எல்லாம் சரியாக உள்ளதா என குறைந்தது அரை மணிநேரத்திற்காவது கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொள்வார்கள். என்னை எல்லோரும் புகழ்வார்களா என எண்ணத்துடன் இருப்பார்கள். ஆனால் எதற்காக பெண்கள் இவ்வளவு நேரம் செலவழிக்கிறார்கள் என்பதை எண்ணியும், அதன் பின் இருக்கும் மர்மத்தை எண்ணியும் ஆண்கள் வியந்து போவார்கள்.

மனநிலை மாற்றங்கள்

ஆண்களின் உடலமைப்புடன் ஒப்பிடுகையில் பெண்களின் உடலமைப்பில் வேறுபாடு இருக்கும். மிகவும் அசாதாரண மற்றும் விசேஷ முறையில் கடவுள் பெண்களை வடிவமைத்துள்ளார். பெண்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள் மற்றும் ஹார்மோன் வெளிப்பாடுகளின் வேறுபாடுகளினால், அவர்களால் அனைத்து நேரத்திலுமே நிலையாக இருப்பது கஷ்டமான ஒன்றாகும். ஆனால் ஆண்களின் உடல் வலிமையாக இருப்பதாலும், அதன் அமைப்பில் வேறுபாடு இருப்பதாலும், அவர்களுக்கு பெண்களின் நிலை ஏற்படுவதில்லை. இந்த வேறுபாடுகளின் காரணமாக தான் பிரச்சனைகள் தோன்றுகிறது. பெண்கள் சில நேரங்களில் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள்; சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட கோபம் கொள்வார்கள்; பெரிய விஷயத்திற்கு உணர்ச்சியின் வெளிப்பாடே இருப்பதில்லை; சாதாரண கடி ஜோக்கிற்கு விழுந்து விழுந்து சிரிப்பார்கள்; அதுவே வாய் விட்டு சிரிக்க வேண்டிய நல்ல ஜோக்கிற்கு உங்களை பார்த்து கத்தவும் கூடும்.

மேக்-அப் போடுதல்

ஆண்களுக்கு பெண்கள் மேக்-அப் போட்டாலே பிடிப்பதில்லை. அவர்களுக்கு பெண்கள் இயற்கை அழகுடன் இருப்பதே செக்ஸியாக தோன்றும். ஆனால் பெண்களை பொறுத்த வரையில், மேக்-அப் என்பது தங்கள் அழகை மேம்படுத்த உதவும் ஒரு கருவியாகும். தங்கள் அழகை மேன்மேலும் கூட்டி, தங்களை ஒரு தேவதையை போல் காட்ட மேக்-அப் உதவும் என்பது அவர்களின் எண்ணமாகும். கொஞ்சம் மஸ்காரா அல்லது மெல்லிய அளவிலான லைனர் போட்டு கொள்வது பெண்களுக்கு அத்தியாவசியமாகும். மேக்-அப் போட்டுக் கொண்டு வெளியே செல்லும் போது, அவர்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மேலும் மேக்-அப் போட்டால் தான் ஆண்களை கவர முடியும் என்ற எண்ணமும் அவர்களிடம் உண்டு. ஆனால் பெண்கள் ஏன் இவ்வளவு மேக்-அப் போடுகிறார்கள் என ஆண்களுக்கு புரிவதில்லை. பெண்கள் மேக்-அப் போடுவதைப் பற்றி ஒட்டுமொத்த ஆண்களும் கிண்டலளித்தாலும் கூட, மேக்-அப் போட்ட பெண்களை அவர்கள் பிடிக்காமல் இருப்பதில்லை,

நடிகையர் திலகங்களாக விளங்குவார்கள்

ஆண்களை காட்டிலும் பெண்கள் தங்கள் உணர்ச்சிகளை அளவுக்கு அதிகமாக வெளிக்காட்டுவார்கள். மிகச்சிறிய ஸ்பரிசம் முதல் மிகப்பெரிய வலி வரை அனைத்தையும் மிகைப்படுத்துவார்கள். பெண்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள் அல்லது உள்ளதை காட்டிலும் மிகைப்படுத்தி நடிக்க கூடியவர்கள் என ஆண்கள் நினைப்பார்கள். ஆண்களை பொறுத்தவரை, சின்ன விஷயம் அல்லது நிகழ்வை ஊதி பெரிதாக வெளிப்படுத்துவது தான் பெண்களின் வாடிக்கை. பெண்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது ஆண்களுக்கு விளங்குவதில்லை. பெண்களை ஆண்கள் புரிந்து கொள்ளாமல் போகும் பல காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

அரட்டையடிக்கும் கிளிகள்

நாம் ஏற்கனவே கூறியதைப் போல், ஆணின் ஆளுமைக்கும் பெண்ணின் ஆளுமைக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளது. பெண்கள் அதிகமாக பேசுவார்கள்; அப்படி பேசுவதால், தங்கள் மனதை நெருடிக்கொண்டிருக்கும் தங்கள் பிரச்சனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். இதனால் அவர்களின் மனதில் ஓடும் வெறுப்பு மற்றும் பிரச்சனையை போக்குவார்கள். சந்தோஷமான தருணங்களோ அல்லது சோகமான நிகழ்வுகளோ, அதனைப் பற்றி அதிகமாக பேசு கலந்துரையாட வேண்டும் – இது ஆணின் மன ரீதியான புரிதலுக்கு அப்பாற்ப்பட்டவையாக விளங்குகிறது. பெண்களுக்கு எங்கிருந்து தான் இவ்வளவு விஷயம் கிடைக்குமோ என்று ஆண்களுக்கு மறுபடியும் புரிவதில்லை. இதைப் பற்றி அதிகமாக யோசித்து யோசித்து அவர்கள் மண்டை காய்வது தான் மிச்சம்.

சொல்வது ஒன்று நினைப்பது வேறொன்று

பெண்களின் இடது பக்க மூளை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் என உளவியல் கூறுகிறது. அதன் படி, பெண்கள் தங்கள் செய்கைகளில் மறைமுகமாக நடந்து கொள்வார்கள். ஆண்களுக்கோ வலது பக்க மூளை தான் சுறுசுறுப்பாக செயல்படும். இதனால் அவர்களின் செய்கைகள் எப்போதும் நேரடியாகவே இருக்கும். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை தான் சொல்வார்கள். ஆனால் பெண்களோ அதற்கு அப்படியே எதிர்மாறான போக்கை உடையவர்கள். அவர்கள் சொல்வது ஒன்றாக இருக்கும், ஆனால் நினைத்ததோ வேறு ஒன்றாக இருக்கும். ஆண்கள் எதையுமே நேரடியாக செய்வதால், இது அவர்களுக்கு புரிவதில்லை. ஆண்கள் மனதில் நினைத்தால் எளிதாக “ஐ லவ் யூ” என கூறி விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு அந்த எண்ணம் ஏற்பட்டால், அதை சுற்றி வளைத்து, தன் சொல் மற்றும் செயலால், அதனை மறைமுகமாகவே வெளிப்படுத்துவார்கள்.

அதிருப்தி

“நான் ரொம்ப குண்டாக இருக்கிறேனா”, “நான் இன்னும் கொஞ்சம் எடை போட வேண்டுமோ” – நல்ல உடற்கட்டுடன் இருந்தாலும் கூட இவையெல்லாம் பெண்கள் அடிக்கடி கேட்டுக்கொள்ளும் பொதுவான கேள்விகளாகும். தாங்கள் மிகச்சிறந்த உடற்கட்டுடன் கன கச்சிதமாக இருப்பதாக தங்கள் காதலன் அல்லது கணவன் வாயால் கேட்க விரும்புவார்கள். தன் கணவன்/காதலனோ அல்லது வேறு ஒரு ஆணோ ஏதாவது அழகிய பெண்ணை சைட் அடிக்கும் போது, அந்த பெண்ணை போலவே கச்சிதமான உடலுடன் இருக்க தானும் ஆசைப்படுவாள். அப்படிப்பட்ட உடலமைப்பை பெற்றாலும் கூட வேறு ஒரு இலக்கை நோக்கி மீண்டும் ஆரம்பித்து விடுவார்கள். இது ஆண்களுக்கு சுத்தமாக பிடிப்பதில்லை. நல்ல உடற்கட்டு, கட்டுக்கோப்பான உடலமைப்பு மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெற்றிருந்த போதிலும் பெண்கள் திருப்தி அடைவதில்லை. தாங்கள் தான் மிகச்சிறந்த பேரழகியாக இருக்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்படுவார்கள். இவர்களுக்கு என்ன தான் பிரச்சனை என்று ஆண்கள் யோசித்த வண்ணம் இருப்பார்கள்.

அணிவதற்கு நல்ல ஆடைகளே இல்லை என எப்போதும் குறை கூறுவது

அலமாரி முழுவதும் ஆடைகள் இருந்தாலும், அணிவதற்கு ஒன்றுமே இல்லை என கூறுவது எப்படி இருக்கிறது? ஆம், பெண்களிடம் இருந்து வரும் மிகவும் புகழ்பெற்ற பிரச்சனை இது. இது ஆண்களுக்கு பிடிப்பதும் இல்லை, அது ஏன் என்று அவர்களால் புரிந்து கொள்ள முடிவதும் இல்லை. பெண்கள் எப்போதும் இன்றைய நாகரீகத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அதனால் எவ்வளவு தான் இருந்தாலும் ஆடைகள் மீது அதிக நாட்டத்தை அவர்கள் கொண்டிருப்பார்கள். சந்தையில் அல்லது மற்றொரு பெண்ணிடம் புதிதாக ஒரு பேன்ட் வந்து விட்டால் போதும், அது தன்னிடமும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை பெண்கள் பெற்றிடுவார்கள். பெண்களின் ஆடை அலமாரியை பார்க்கும் போது, ஆண்களுக்கு ஒன்று தலை சுற்றும் இல்லை நெஞ்சு வலி வந்து விடும். அதற்கு காரணம் அலமாரி முழுவதும் ஆடைகள் இருந்தாலும் கூட எதை அணிவது என்று கேட்டு உங்கள் கண்ணை கட்ட வைப்பார்.

தம்பட்டம் அடிப்பது

ஒரு விஷயத்தைக் கூறி யாரிடமும் சொல்ல வேண்டாம் என கூறி விட்டால் போதும், முதல் ஆளாக அதனை ஊர் முழுவதும் சென்று தம்பட்டம் அடித்து விடுவார்கள் பெண்கள். ஆனால் ஆண்களோ பொதுவாக இவ்வித விஷயங்களை வெளியில் கூறாமல் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள். பெண்களுக்கு செய்தியை பரப்பச் செய்வது என்றால் அவ்வளவு விருப்பமாகும்.

ஆசிரியராக நடந்து கொள்வது

கடைசியாக ஆனால் முக்கியமானது – ஆண்களிடம் பெண்கள் ஆசிரியர்களாக நடந்து கொள்வது. ஆண்களுக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுக்க அவர்கள் முயல்வார்கள். எதை வைத்திருக்க வேண்டும், எப்படி வைத்திருக்க வேண்டும், என்ன அணிய வேண்டும், எப்படி அணிவது என பல விஷயங்களை சொல்வார்கள். இதனால் அவர்கள் தங்களை ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்ற எண்ணம் ஆண்களுக்கு உருவாகும். உண்மை என்னவென்றால், பெண்கள் ஆண்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை. ஆண்களின் மீது அவர்களின் காதலை வெளிப்படுத்தும் விதமே இது தான். ஆண்கள் இதனை தவறாக நினைத்து விடுகிறார்கள். அதனால் ஆசிரியராக இருந்து உயிரை வாங்குகிறார்கள் என்ற முத்திரையை குத்தி, அவர்களிடம் இருந்து தப்பிக்கவே முயற்சி செய்வார்கள்.

Related posts

ஆரோக்கிய வாழ்வில் தயிரின் பங்களிப்பு…!

nathan

கோடை காலத்தில் எந்த உணவை தவிர்க்கலாம்!….

nathan

அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சில காரணங்கள். அவை எந்தெந்த காரணங்கள். அவற்றால் ஏற்படும் விளைவுகள் என்ன

nathan

தூங்கி எழுந்து 60 நொடிக்குள் நீர் குடியுங்கள்: இந்த அதிசயத்தை பெறலாம்

nathan

பெண்களே உஷார்!பெண்கள் இறைச்சி அதிகம் சாப்பிடக்கூடாது ஏன்னு தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…பெண் காலின் இரண்டாவது விரல் கட்டைவிரலை விட பெரிதாக இருந்தால் என்ன பலன்?…

nathan

வாட வைக்குதா வாடை?

nathan

கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

nathan

முதுகு வலி வரதுக்கு இதெல்லாம் கூட ஒரு காரணம்ன்னு உங்களுக்கு தெரியுமா???

nathan