பொதுவாக தினமும் ஒரு காய்கறி உண்டால் உடலுக்கு அதிக அளவிலான ஊட்டச்சத்தை அளிக்கும் என்பது நாம் அறிந்ததே. சமைத்து தான் உண்ண வேண்டும் என்று இல்லை சில காய்கறிகளை பச்சையாக சமைக்காமல் உண்ணலாம்.
அப்படிப்பட்ட காய்கறிகளில் ஒன்று தாவரத்தின் தங்கம் என்று அழைக்கப்படும் கேரட். ஏன் அவ்வாறு பெயரிடப்பட்டது என்பது தெரியுமா..? மேனிக்கு தங்கம் எப்படி பளபளப்பை தருமோ அப்படிதான் கேரட் நமது உடலுக்கு பளபளப்பை கொடுக்கும்.
உணவு வகையிலும், மருத்துவத்திலும் பல்வேறு பயன்களை தரவல்லது கேரட். மலைப்பகுதிகளில் விளையும் கிழங்கு வகையை சார்ந்த கேரட் ஒரு மினி டாக்டர் என்றே சொல்லலாம்.
தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் மாற்றத்தை பாருங்க –
எலும்பு உறுதி
வயது ஆகும் போது மனிதர்கள் அனைவரின் எலும்புகளும் உறுதித்தன்மையை இழக்கும். தினந்தோறும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு எலும்புகள் வலுவடைந்து, அதன் உறுதித்தன்மையும் அதிகரிக்கும்.
ரத்தம் உறைதல்
ரத்த காயங்கள் ஏற்படும் போது ரத்தம் விரைவாக உறைவதற்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் புரதம் சரியான அளவில் இருக்க வேண்டும். கேரட் ஜூஸ் அருந்தி வருவதால் இதன் அளவு சமநிலையில் வைக்கப்படுகிறது.
புற்று நோய்
தினந்தோறும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு அவர்களின் உடலிலுள்ள செல்களின் ஆயுள்தன்மை நீட்டிக்கிறது. இதன் காரணமாக அவர்களின் உடலில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக கூறுகின்றனர்.
கண்களுக்கு
தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பீட்டா-கரோட்டீன்கள் மற்றும் லுடீன், பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுத்து, கண்களுக்கு நல்ல பாதுகாப்பு கொடுக்கும்.
சருமத்திற்கு
தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் சருமம் வறட்சி அடைவதைத் தடுப்பதோடு, சருமத்தின் பொலிவும் அதிகரிக்கும்.
சர்க்கரை நோய்
கேரட்டில் அதிக அளவு கரோட்டினாய்டு உள்ளதால் அது நம்முடைய இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் நாம் சர்க்கரை நோய் வருவதை தடுக்கலாம்.
கொழுப்பு
நாம் உண்ணும் உணவில் அதிகளவு கொலஸ்ட்ரால் சேருவது உடலநலத்திற்கு தீங்கானது. தினமும் கேரட் ஜூஸ் அருந்துவது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர்மானத்தை கட்டுக்குள் வைக்கிறது.
மாதவிடாய்
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காரணமாக சிலருக்கு அதிக வயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. அப்படி அவதியுறுபவர்கள் கேரட் ஜூஸ் அருந்த நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பற்கள்
நமது வாய்க்குள் இருக்கும் பற்கள் உணவை நன்கு மென்று திண்பதற்கு உதவுகிறது.பற்கள் சொத்தையாவது, ஈறுகளில் வீக்கம், மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவை கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு ஏற்படுவதில்லை.
குழந்தைகள்
ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கேரட் சாற்றை தினந்தோறும் அருந்த கொடுப்பதால் அவர்களின் வளர்ச்சி மேம்படுகிறது. அடிக்கடி நோய்தாக்குதலுக்கு உட்படுவதும் குறைகிறது.