குளிர்காலம் வந்துவிட்டாலே பொதுவாக பலரும் சரும பிரச்சனை தான் சரும வறட்சி. அதுவும் பனி அதிகமாக பொழியும் போது, சருமம் இருமடங்கு வறட்சி அடைகிறது.
குளிர்காலத்தில் சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கும் மாய்ஸ்சுரைசரை தவறாமல் பயன்படுத்த வேண்டும். பின்னர், நீங்கள் உங்கள் சரும வறட்சியைத் தடுக்க ஒரு நல்ல நேச்சுரல் மாய்ஸ்சுரைசரைத் தேடுகிறீர்கள் என்றால், பின்வரும் ஃபேஸ்பேக்குகளை போட்டு வாருங்கள்.
தேன் முட்டை மஞ்சள் கரு
ஒரு பௌலில் ஒரு முட்டையின் மஞ்சள் கரு, 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் பால் பவுடர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் அதை முகம் மற்றும் சருமம் அதிகம் வறட்சி அடையும் கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
முட்டை மஞ்சள் கரு மற்றும் தயிர்
எண்ணெய் பசை சருமத்தினர், முகப்பரு அதிகம் வருபவர்கள், ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் தேன், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து, அத்துடன் சிறித முல்தானி மெட்டி பொடியை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, வறட்சியான சருமத்தில் தடவி 20 நிமிம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.
பப்பாளி
பப்பாளி பழத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதிகம் வறட்டு போகும் சருமத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
மேலும், பப்பாளியில் கிளின்சிங் பண்புகள் உள்ளதால், இதை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்குதோடு, சருமம் வறட்சியின்றி பொலிவோடு மினுக்கும்.
கற்றாழை ஜெல்
இதில், கற்றாழை ஜெல்லுடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து, சருமம் அதிகம் வறண்டு போகும் பகுதியில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியைப் போக்கலாம்.