பொதுவாக நம்முடைய பாரம்பரியத்தில் கூட உணவுக்கு பிறகு மோர் அருந்தும் பழக்கமும், தாகத்திற்கு கூட மோர் அருந்தும் பழக்கமும் இருந்து வந்திருக்கிறது. மோரில் இருக்கும் பாக்டீரியா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மோரில் புரோபயாட்டிக் (Probiotic) எனும் பாக்டீரியா உள்ளது. அது குடலை ஆரோக்கியமாக வைக்க உதவும்.அதுமட்டுமின்றி தினமும் ஒரு டம்ளர் மோர் குடிப்பதனால் பல அற்புத பலன்கள் கிடைக்கின்றது.
அந்தவகையில் தற்போது மோர் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
மோர் செரிமானத்திற்கு நல்லது. மோரில் சேர்க்கப்படும் சீரகப் பொடி போன்ற மசாலாப் பொருட்களும் செரிமானத்திற்கு உதவுவதோடு, செரிமானத்தை எளிதாகவும் மேலும் சரியானதாகவும் ஆக்கும்.
கோடை வெப்பத்தால் உடல் வெப்பமடைகிறது. இதைத் தடுக்க, அதிக அளவு வியர்வை தேவைப்படுகிறது. மோர் இந்தப் பிரச்சனையைத் தடுத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
வயிற்றுப் போக்கால் கஷ்டப்படுபவர்கள், மோரில் இஞ்சி பொடி அல்லது நற்பதமான இஞ்சியை தட்டிப் போட்டு குடித்தால் குணமாகும். அதுவும் விரைவில் குணமாவதற்கு, ஒரு நாளைக்கு 3 முறை மோரைக் குடிக்க வேண்டும். இதனால் இரண்டே நாட்களில் வயிற்றுப்போக்கு பிரச்சனை குணமாகிவிடும்.
மோரில் கால்சியம் தவிர பல்வேறு புரதங்கள், வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு துணைபுரிகின்றன. இதன் விளைவாக, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
மோரை தினமும் குடித்தால், இரத்த அழுத்தம் குறையும் மற்றும் இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.