32 C
Chennai
Wednesday, Feb 5, 2025
21 61cc3d
ஆரோக்கியம் குறிப்புகள்

வினிகரில் ஊற வைத்த வெள்ளரிக்காய் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?தெரிஞ்சிக்கங்க…

வெள்ளரிக்காய். நீர்ச்சத்து மிக்க காய்கறிகளில் முதன்மையானது. முக்கியமானது. கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவும் முக்கியமான காய்கறி என்று சொல்லலாம்.

வெள்ளரிக்காய் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு, காப்பர், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

இது உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்துக்கும் வெள்ளரிக்காய் பெரிதும் உதவும் இதனுடன் சிறிது வினகரை கலந்து சாப்பிடுவதனால் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது.

தற்போது வினிகரில் ஊற வைத்த வெள்ளரிக்காய் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

வினிகரில் சேர்க்கப்பட்ட ஊறுகாய் உடல் எடையை குறைக்க உதவும் . இதில் உருவாகும் நொதிகள் உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை கறைக்க உதவுகிறது.

வெறும் வினிகரில் வெள்ளரிக்காய் ஊற வைத்து சாப்பிடுவதும், அதன் சாறை குடிப்பதும் தசைப்பிடிப்புகளை போக்க உதவும்.

வினிகரில் ஊற வைத்த வெள்ளரியில் விட்டமின் சி, ஈ போன்ற சத்துகள் உள்ளன. அதோடு இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.

மாதவிடாய் சமயத்தில் எதுவும் சாப்பிடப் பிடிக்காது. எனவே அந்த சமயத்தில் வினிகரில் ஊற வைத்து வெள்ளரிக்காய் வாய்க்கு சுவையாக இருக்கும். நல்ல பசியும் இருக்கும்.

வெள்ளரி வினிகர் ஊறுகாயில் விட்டமின் கே நிறைவாக உள்ளது. அதோடு விட்டமின் டி- யும் இருப்பதால் சருமப் பிரச்னைகளை தவிர்க்க உதவுகிறது. இரத்தம் உறைதல், இரத்தம் கசிதல் போன்ற பிரச்னைகள் இருந்தால் அதற்கு இது நல்ல உணவாக இருக்கும்.

ஆல்கஹால் அருந்திய பின் போதையால் கடுமையான தலைவலி, ஹேங்ஓவரிலிருந்து வெளியேற முடியவில்லை எனில் வினிகர் வெள்ளரி சாப்பிட்டால் போதை குறையும். தலைவலி, தலைசுற்றல் சரியாகும்.

Related posts

குழந்தைகளைப் பேச வைக்கும் சில சிறப்பான வழிகள்

nathan

venpoosani juice benefits in tamil – வெண்பூசணி

nathan

தினமும் காலையில் பிரட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாழ்வு மனப்பான்மையை போக்க இதை செய்யலாம்…

nathan

கட்டாயம் இதை படியுங்கள் ஆண்கள் மடிக்கணினிகளை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்!!

nathan

ஒருவருக்கு தினமும் 8 மணிநேர தூக்கம் ஏன் அவசியம் என்று தெரியுமா?

nathan

தூக்கம் நன்றாக வர தயிரை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

வயிற்று தசையை குறைக்க அவசியம் இது தான்! தெரிஞ்சிக்கங்க…

nathan

குழந்தைகள் அதிகம் சோர்வடைய என்ன காரணம் என்று தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan