மழை, குளிர்காலம் என்றாலே சளித் தொந்தரவு பாடாய்படுத்தும், என்னதான் மாத்திரை, மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் சளிப் பிரச்சனைக்கு அவ்வளவு எளிதில் தீர்வு கிடைக்காது.
சளி வந்துவிட்டால், உடல் வலி, இருமல் என ஒவ்வொரு பிரச்சனையாய் வரிசைக்கட்டி நிற்கும்.
இதற்கு நாட்டு மருந்து தான் ஒரே தீர்வு என நம் வீட்டில் பெரியவர்கள் சொல்லக்கேட்டிருப்போம், இந்த பதிவில் சளி, இருமலை போக்கும் மிட்டாய் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சுக்கு பவுடர் – 4 டே.ஸ்பூன்
நாட்டு சர்க்கரை– 1 கப்
எலுமிச்சை- 1 டே.ஸ்பூன்
கிராம்பு – ½ டீ.ஸ்பூன்
ஏலக்காய்த்தூள்- ½ டீ.ஸ்பூன்
தேன்- 2 டீ.ஸ்பூன்
அரிசிமாவு (தேவைப்பட்டால்)
செய்முறை
முதலில் ½ கப் தண்ணீரை கொதிக்க வைத்து, சுக்குத்தூள் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
இதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கிய பின்னர், எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
பின்னர் சுக்கு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து, கலவை நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
பதத்துக்கு வந்த பின்னர், அடுப்பிலிருந்து இறக்கியதும் தேனை ஊற்றி கிளறிவிட்டு, சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
அப்படியே 5 முதல் 6 மணிநேரத்திற்கு ஆறவிட்டால், சளி இருமலை போக்கும் மிட்டாய் தயார்!!!