நமது உடல் ஆரோக்கியத்திற்கு காய்கறிகள், பழங்களை தவிர தானியங்கள் மற்றும் பயறு வகைகளும் மிகவும் அவசியமாகும்.
அதுவும் பச்சை பயறை சுத்தமாக கழுவி ஒரு ஈரத்துணியில் போட்டு இறுக்கமாக கட்டி மறுநாள் காலையில் முளைக்கட்ட வைத்து அதை குறைந்த அளவில் நீர் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டால் அதன் ஆரோக்கிய இரட்டிப்பு பலனை பெறலாம்.
முளைக்கட்டிய பச்சை பயறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்;-
பச்சை பயறில் ஆன்ட்டி-டயாப்பட்டிக் துகள்கள் உள்ளது, இது நம் உடலில் இருக்கக் கூடிய ரத்தச் சர்க்கரையின் அளவை குறைத்து கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
நம் உடலில் உள்ள ரத்த நாளங்களை சுத்தமாக்கி இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது.
குறைந்த ரத்த அழுத்தத்தை சீராக்கி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் ரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் இதனை சாப்பிடலாம்.
நம் உடலில் இருக்கும் செல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், புற்றுநோய் செல்களின் தாக்கம் பரவாமல் தடுக்கிறது.
செரிமான செயல்பாட்டை சீராக்கி, பசி உணர்வை கட்டுப்படுத்துவதுடன், உடல் எடையை குறைக்கிறது.
நம்மை தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து போராடி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்படக்கூடிய வயிற்று வலி, தலைவலி, சோர்வு மற்றும் மன மாற்றங்களை கூட சரிசெய்கிறது.
நம் உடலில் இருக்கக் கூடிய நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி, இரும்புச்சத்து குறைபாடு வராமல் தடுக்கிறது.
கண் பார்வை மற்றும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க செய்து, ரத்த சோகை மற்றும் முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளையும் வரவிடாமல் தடுக்கிறது.