இது எல்லாம் தீயப் பழக்கமா? இவைக் கூடவா நமது வாழ்நாட்களைக் குறைக்கின்றன என்று நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு, சில பழக்கவழக்கங்கள் இன்றைய வாழ்வியல் முறையில் உங்களோடு ஒட்டிக்கொண்டு இருக்கிறது.
சிலர், எப்போது பார்த்தாலும் கும்பகர்ணன் போல, வேலை செய்யும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் படுத்தே இருப்பார்கள், இன்னும் சிலர் ஹெட் செட் அணித்துக் கொண்டு பாடல் கேட்டப்படியே உலாவுவார்கள், கேட்டால் இசை விரும்பிகள் என்பார்கள்.
இது போக, ஹீல்ஸ் அணிவது, இரவுத் தூக்கும் கெடுத்துக் கொண்டு கொட்ட கொட்ட முழித்துக்கொண்டு ஏதாவது செய்துக் கொண்டிருப்பது இன்னும் பற்பல விஷயங்கள் நீங்கள் அன்றாட வாழ்கையில் சாதரணமாக கருதும் பழக்கவழக்கங்கள் உங்கள் உடல்நலத்தை கெடுத்து, ஆயுளைக் குறைக்கிறது….
மூக்கு நோண்டுவது
சிலருக்கு இந்த மூக்கை நோண்டுவது ஒருவகையான அலாதிப் பிரியம். இடம், பொருள், ஏவல் என்று எதையும் பார்க்காது மூக்கை நோண்ட ஆரம்பித்துவிடுவார்கள். பின்பு, அப்படியே உணவு சாப்பிடுவார்கள், மற்ற இடங்களில் கைகளில் வைப்பார்கள். இதன் மூலம் நேரடியாக உங்கள் வைரஸ் மற்றும் கிருமிகள் உடலினுள் செல்கின்றன. நீங்கள் முதலில் நிறுத்த வேண்டிய கெட்டப் பழக்கம் இந்த மூக்கை நோண்டுவது தான்.
இரவு தூக்கம் கெடுவது..
இப்போதுள்ள தலைமுறையினருக்கு இடையே, நான் இரவு 12 மணிக்கு தான் தூங்குவேன், நான் 1 மணிக்கு தூங்குவேன், அட போட நான் எல்லாம் தூங்கவே மாட்டேன் என்பது கெத்துப் பேச்சாகிவிட்டது. ஒரு மனிதன் சராசரியாக 6-8 மணி நேரம் தூங்க வேண்டும். மூளைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இதை சரியாக செய்யாத போது உங்கள் மூளையின் செயல்திறன் குறைந்துவிடுகிறது. பின் என்ன அதிவேகமாக விண்ணை எட்ட வேண்டிய சூழல் பிறக்கும்.
தனிமை
தனிமையில் இருப்பதை தவிர்த்திடுங்கள். தனிமையாக உணர்கிறேன் என்று ஃபேஸ் புக்கில் பதிவேற்றம் செய்வதற்கென்றே சிலர் தனிமையில் இருப்பார்கள் போல. தனிமை உங்களது மன அழுத்தத்தை அதிகப்படுத்துகிறது, பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட காரணமாய் இருப்பதே இந்த மன அழுத்தம் தான்.
ஹெட் செட்
ஹெட் செட் அணிந்து பாடல் கேட்பதை முதலில் கைவிடுங்கள். மணிக்கணக்காக வேலை செய்யும் இடத்திலும், பயனும் செய்யும் போதிலும் ஹெட் செட் பயன்படுத்துவதனால், காது கேளாமை ஏற்படும் அபாயம் இருக்கிறது மற்றும் மூளையும் பாதிக்கப்படுகிறது.
டி.வி
சிலர் மணிக்கணக்காக டி.வி. முன்னே உட்கார்ந்தபடியே அணைத்தது வேலைகளையும் செய்வார்கள். பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்கள் தான் இப்படி இருப்பார்கள். இது கண்பார்வை, மற்றும் இதயப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. முக்கியமாக மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறதாம்.
ஹீல்ஸ்
ஹீல்ஸ்
இன்றைய மார்டன் இளம் மங்கையர் அடிக்கணக்கில் ஹீல்ஸ் அணிகின்றனர். இது, முதுகு வலி, மூட்டு வலி மட்டுமில்லாது பிரசவக் காலங்களில் பல சிரமங்களை தரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதிக எடை
நிறைய பேர் எங்கு போனாலும் அவர்களுடன் ஒரு மிக பெரிய எடையுள்ள பையையும் தூக்கி செல்வார்கள் கேட்டல் அதில் உள்ள பொருள்கள் அனைத்தும் அவர்களது பொக்கிஷம் என்பார்கள். ஆனால், இதன் காரணமாக உங்களுக்கு தோள்பட்டை மற்றும் முதுகு வலி ஏற்படுகிறது. முதுகு வலி உங்களது உடல்நலத்தை வெகுவாக பாதிக்கும் பிரச்னை என்பதை மறந்துவிடாதீர்கள்.
நொறுக்கு தீனி
நொறுக்கு தீனி
பசி இருந்தாலும் இல்லாவிட்டாலும், மணிக்கு ஒருமுறை எதையாவது நொறுக்கி தள்ளிக் கொண்டே இருப்பது நீங்கள் இன்றே கைவிட வேண்டிய பழக்கம். இது, வயிற்று உபாதைகள், நீரிழிவு நோய், இதயப் பாதிப்புகள் போன்ற உடநலக் கோளாறுகள் ஏற்பட காரணமாய் இருகின்றது.
புகை
புகை உங்கள் உடல்நலத்தை மட்டுமில்லாது உங்களை சுற்றி இருப்பவர்களது உடல்நலத்தையும் பாதிக்கிறது. காலம், காலமாக இது புற்றுநோயை உண்டாக்குகிறது என்று கூறினாலும், திருந்தியவர் எண்ணிக்கை அமாவாசை வானில் நிலவை போல தான் இருக்கிறது.
மது
புகையும், மதுவும் உடன் பிறந்த சகோதரர்கள், உங்களை எமனிடம் ஃப்ரீ டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பும் உன்னத வேலையை, உங்கள் காசுலேயே செய்துக் கொடுப்பார்கள். சர்வீஸ் சார்ஜ் ஏதும் இல்லை!!!
காலை உணவு
உங்கள் உடல்நலத்திற்கு மிகவும் முக்கியமானது காலை உணவு. இதை தவிர்ப்பது எதிர்வினை வளர்ச்சிதை மாற்றங்களை ஏற்படுத்தும், செரிமானப் பிரச்சனைகளை உண்டாக்கும்.
உடலுறவு
உடலுறவு உங்களது உடல் மற்றும் மன நிலையை சமநிலைப் படுத்த உதவுகிறது. எனவே, உடலுறவுக் கொள்வதை தவிர்க்க வேண்டாம். முக்கியமானக உடலுறவுக் கொள்வதனால் மன அழுத்தம் குறைகிறது.
வேகமாக சாப்பிடுவது
குறைந்தது 20 நிமிடங்களாவது எடுத்துக் கொண்டு நிதானமாய் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். வேகமாக சாப்பிடுவதனால் வயிற்றுப் பிரச்சனைகள் எற்படுகின்றன.