156327
ஆரோக்கிய உணவு

நீரிழிவு நோயாளிகள் தேங்காய் பால் எடுத்துக்கொள்வது ஆபத்தா? தெரிஞ்சிக்கங்க…

பொதுவாக நமது அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியப்பொருள் தான் தேங்காய்.

தேங்காயில் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளும், உடலைப் பாதுகாக்கும் விஷயங்களும் அடங்கியுள்ளன.

தேங்காயில் கார்போ ஹைட்ரேட், புரதச் சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், நார்ச்சத்து என பல ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளன.

ஆனால், சிலர் தேங்காயை எடுத்துக் கொள்வது சர்க்கரை மற்றும் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் என்றும் நம்புகின்றனர்.

உண்மையில் தேங்காய் எடுத்து கொள்வது சர்க்கரை நோயாளிக்கு உகந்ததா என்பதை இங்கே பார்ப்போம்.

தேங்காயை சேர்த்துக் கொள்ளலாமா?
சிலர் தேங்காயை அரைத்து பால் எடுத்து அதனைக் கொண்டு உணவுகளை செய்வர். இது தவறானது. ஏனெனில், இதில் நீங்கள் தேங்காயில் உள்ள நார்ச்சத்தை நீக்கி விட்டு வெறும் கொழுப்பு மற்றும் கார்போ ஹைட்ரேட்டை மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும்.

நார்ச்சத்து இன்றி வெறும் கார்போ ஹைட்ரேட் மட்டும் எடுத்துக் கொள்வது உங்களின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கவே செய்யும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிக அளவில் தேங்காயை அப்படியே சாப்பிட வேண்டாம்.

எப்படி எடுத்து கொள்ளலாம்?
தேங்காயை சிலர் பொரியலுக்குத் துருவலாக பயன்படுத்துவர். அப்படி எடுத்துக் கொள்வது நல்லது தான். அதேபோல், தேங்காய் சட்னியாகவும் இதனை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

குறிப்பு
தேங்காய் நல்லதா, கெட்டதா என்றால் இரண்டுமே அதில் உள்ளது. இருப்பினும், தேங்காயில் அதிக அளவில் நன்மைகள் உள்ளன.

அதனை நீங்கள் எந்த வடிவில் அதனை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அதன் நன்மை நமக்குக் கிடைக்கும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…டீ ஆறிடுச்சுனா மறுடிபயும் சூடு பண்ணக் கூடாது!

nathan

உங்களுக்கு தெரியுமா காலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற மிகவும் சிறப்பான பழங்கள்!!!

nathan

அஜீரணம், நெஞ்செரிச்சலை குணமாக்கும் மோர்

nathan

எப்போதும் வெந்நீரில் துணி துவைப்பதால் ஏற்படும் குறைபாடுகள் என்ன?

nathan

கருணை கிழங்கு தீமைகள்

nathan

கடக ராசியினர்களே… அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான்

nathan

மாவை நீண்ட காலம் கெடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

nathan

உணவில் தினமும் ஒரு கீரையை சேர்ப்பது நல்லதா?

nathan

மொறுமொறுப்பான மீன் மிளகு வறுவல்!

nathan