தென்னிந்தியாவில் செய்யப்படும் குழம்புகளில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் மணத்தக்காளி வத்தல் குழம்பு. இந்த குழம்பு செய்வது சுலபமாக இருப்பதுடன், மிகவும் சுவையாகவும் இருக்கும். மேலும் இதனை செய்தால், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இங்கு அந்த மணத்தக்காளி வத்தல் குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.
Manathakkali Vatha Kuzhambu
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி வத்தல் – 2 1/2 டேபிள் ஸ்பூன்
புளி – 1 எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி – 5 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்
வரமிளகாய் – 1
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் புளியை 2 1/2 கப் சுடுநீரில் 20 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் மணத்தக்காளி வத்தலை சேர்த்து சிறிது நேரம் வறுத்து, பின் அதில் உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி, மிதமான தீயில் 20-30 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
குழம்பானது ஓரளவு கெட்டியாகி, எண்ணெய் பிரியும் போது அதனை இறக்கினால், சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பு ரெடி!!!