30.9 C
Chennai
Thursday, Aug 20, 2026
முகப் பராமரிப்பு

தேவையற்ற முடிகளை நீக்கும் மஞ்சள் பேஸ் பேக்

பெண்களுக்கு அவர்களின் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இவற்றை அகற்ற பல சிகிச்சைகள் இருக்கின்றன. லேசர் சிகிச்சைகளும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்கின்றன. ஆனால் அத்தகைய அதிநவீன சிகிச்சையால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். மஞ்சளின் மகிமையை அறியாதவர்கள் யாரும் இல்லை. இது முகத்தில் மட்டுமல்ல கை, கால்களில் இருக்கும் முடிகளை நீக்க பயன்படுகிறது.

* கஸ்தூரி மஞ்சளை பாலாடையுடன் சேர்த்து முகத்தில் பூசி வர, முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் மறையும். கஸ்தூரி மஞ்சள் மூலிகை கடைகளில் அரைத்தே விற்பனை செய்யப்படுகிறது.

* மஞ்சளுடன் பப்பாளிக்காயை அரைத்து முகத்தில் தடவி வந்தால் தேவையற்ற முடிகள் உதிர்ந்து முகம் பொலிவு பெறும்.

* பசும்பாலுடன் பாசிப்பயறு தோலை கலந்து அரைத்து கொள்ளவேண்டும். பிறகு அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறைந்து முகம் பளபளக்கும்.

* சாதாரண மஞ்சளை இரவு தூங்கும் போது அரைத்து முகத்தில் பூசிக் கொண்டு, காலை இளஞ்சூடான நீரில் கழுவி வந்தால் படிப்படியாக முகத்தில் இருக்கும் முடிகள் நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.

Related posts

உங்க முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகமாக உள்ளதா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

உங்களுக்கான தீர்வு முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்க???

nathan

பெண்களே வெள்ளையாக ஆசையா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க…

nathan

பொதுவாகவே முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுகிறது எப்படி தெரியுமா..?

sangika

முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமா?

nathan

அழகை சீராக பராமரிப்பதன் மூலம் தான் ஆரோக்கியமான அழகை பெறமுடியும்……

sangika

சருமத்தில் எப்போதும் எண்ணெய் வடிகிறதா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

முகத்தில் உள்ள கருமையான புள்ளிகளைப் போக்கும் சில சூப்பர் டிப்ஸ்!

nathan

பளிச் முகத்திற்கு பலவித பேக்குகள்

nathan