27 C
Chennai
Thursday, Nov 14, 2024
21 61bda36c6
ஆரோக்கிய உணவு

சளியை விரட்டி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

கருப்பு மிளகில் ஏராளமான விட்டமின்கள், தயமின், ரிபோப்ளவின், விட்டமின் சி, ஈ, பி6 மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது.

அதுமட்டுமின்றி ஜிங்க், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது மற்றும் பலவித ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது.

குறிப்பாக மிளகில் உள்ள விட்டமின் சி நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இதனை கஷாயமாக எடுத்து கொண்டால் இன்னும் நன்மைகள் கிடைக்கும்.

தற்போது இந்த கஷாயத்தை எப்படி தயாரிப்பது என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கருப்பு மிளகு – 1/4 கப்
துளசி : 10 எண்ணிக்கை
பனை வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 2 கப்

​தயாரிக்கும் முறை

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கருப்பு மிளகை போட்டு வெடிக்கும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதை உரலில் போட்டு நன்றாக பொடியாக்கி கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

உடைத்த மிளகு அதனுடன் துளசி, பனை வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும். 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து சூடுபடுத்துங்கள்.

பிறகு ஒரு வடிகட்டியைக் கொண்டு கஷாயத்தை வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்த கஷாயத்தை குடித்து வந்தால் சீரணமின்மை, இருமல் மற்றும் ஜலதோஷம் அறிகுறிகள் குறையும்.
நன்மைகள்

சீரண சக்தியை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல், வாய்வுத் தொல்லை, வயிற்று போக்கை போக்குகிறது.

இதிலுள்ள விட்டமின் சி சாதாரண சலதோஷம் இருமலுக்கு எதிராக ஆன்டி பயாடிக் ஆக செயல்படுகிறது.

சருமம் வயதாவது, சருமச் சுருக்கங்கள் மற்றும் சரும கோடுகள் போன்ற அறிகுறிகளை இதிலுள்ள விட்டமின் சி குறைக்கிறது.

இதன் ஆன்டி பயாடிக் தன்மை நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

Related posts

ஏலக்காயை உங்கள் வாயில் போட்டு ஒவ்வொரு நாளும் மெல்லுங்கள்! மருத்துவரே தேவை இல்லை!

nathan

முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?

nathan

கனிமச்சத்துக்களை கொண்டுள்ள பூசணி விதைகள் !!

nathan

கொழுப்பு, உடல் எடை குறைக்கும்… கொள்ளு தரும் 8 அபார மருத்துவப் பலன்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி!

nathan

மீன் உணவு… இதயத்துக்கு இதம், உடலுக்கு பலம், மனதுக்கு நலம்!

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்பிணி பெண்கள் இறாலை சாப்பிடலாமா.?!

nathan

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சேர்க்க – தவிர்க்க வேண்டியவை

nathan

நீங்கள் காலை உணவை தவிர்ப்பவரா? அய்யய்யோ அப்படின்னா இதை படிங்க

nathan