சில காய்கறிகளும், பழங்களும் ஆரோக்கியமானவையாக இருந்தாலும் அவற்றில் உள்ள குறிப்பிட்ட சில சத்துகள் நமக்கு ஆரோக்கிய சீர்கேட்டை உருவாக்கும். இதுபோன்ற காய்கறிகள் மற்றும் பழங்களை குறைந்த அளவில் சாப்பிடுவதே நல்லது.
அப்படிப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு
பலருக்கும் பிடித்த உருளைக்கிழங்கா இந்த பட்டியலில் இருக்கிறது என்பது உங்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கலாம். இதில் பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற பல சத்துக்களும் நிறைந்துள்ளது. பெரும்பாலும் இதிலுள்ள நார்சத்துக்களை தோலை சுத்தம்செய்வதன் மூலம் நாம் இழந்துவிடுகிறோம். மேலும் இதனை வேகவைத்தோ, வறுத்தோ சாப்பிடும்போது இதில் உள்ள சத்துக்கள் மறைந்து கொழுப்பு போன்ற தீமைகள் மட்டுமே கிடைக்கிறது.
மாம்பழம்
மாம்பழம் அனைவரும் விரும்பும் ஒரு பழமாகும். சுவையான இந்த பழம் பல அத்தியாவசியமான சத்துக்களையும் கொண்டுள்ளது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் நீர்சத்துக்கள் உங்களுக்கு உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. ஆனால் இதில் 31கி சர்க்கரை உள்ளது. எனவே குறைந்த கார்போஹைட்ரேட் உணவுமுறையை பின்பற்றுவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.
கத்திரிக்காய்
சுவையான அதேசமயம் ஆரோக்கியமான ஒரு காயாக கருதப்படுவது கத்திரிக்காய். இது பலவிதமான வலிகளை குணப்படுத்தக்கூடியது. ஆனால் இது உணவில் அதிகம் சேர்க்கப்படும்போது அது உங்கள் உடலில் கலோரிகள் மற்றும் சோடியத்தின் அளவை அதிகரிக்கிறது.
ப்ரோக்கோலி
மேலோட்டமாக பார்க்கும் போது ப்ரோக்கோலி ஒரு ஆரோக்கியமான காய்கறிதான். ஆனால் உங்கள் உடலில் வீக்கம் மற்றும் வாயுத்தொல்லைகள் ஏற்பட இதுதான் மூலகாரணம் என்று நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.