இன்றைய நிலையில் உடல் பருமன் தான் பெரும்பாலானவர்களின் பெரும் தலைவலியாக இருக்கிறது.
உடற்பயிற்சி, தீவிரமான டயட் என பலவற்றை பின்பற்றியும் உடல் எடை குறையாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகுவதால் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும் என பலருக்கும் தெரிவதில்லை.
ஏனெனில், சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால், பசியை கட்டுப்படுத்த முடியும், இதில் இருக்கும் அமில சத்து கொழுப்பை விரைவாக கரைக்க உதவுகிறது.
நம்முடைய சித்தா ஆயுர்வேதா அலோபதி இப்படி அனைத்து மருத்துவங்களும் பரிந்துரை செய்வது தினமும் பழங்கள் அவசியம் சாப்பிட வேண்டும் நம் உடலுக்கு தேவையான சத்துக்களை பெற வேண்டுமானாலும் சரி உடல் எடையை குறைக்க வேண்டும் ஆனாலும் சரி மருத்துவர்கள் பரிந்துரை செய்வது பழங்கள் தான் அந்த வகையில் சிட்ரஸ் பழ வகையை சேர்ந்த சாத்துக்குடியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன சொல்லப் போனால் ஆறு மாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
சாத்துக்குடியில் உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவெனில், இதில் கலோரிகள், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. சாத்துக்குடியின் ஜூஸில் மட்டுமின்றி, அதன் தோலிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
இதன் தோலை உலர வைத்து பொடி செய்து, குடிக்கும் பானங்களில் சிறிது சேர்த்து குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, நோயெதிர்ப்பு மண்டலமும் வலிமையடையும்.
தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம் –
உடல் எடை குறைக்க
உடல் எடை அதிகமாய் உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால், கண்டிப்பாக உடல் எடை கிடுகிடுவென்று குறையும்.
இரத்தம் சுத்தமாக
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால், இரத்தத்தில் கலந்து இருக்கும் நச்சு பொருள், மற்றும் உடலில் வளர்ச்சிதைவு மாற்றத்தினால் ஏற்படும் கழிவுகளையும் நீக்கும் தன்மை இந்த சாத்துக்குடி ஜுஸிற்கு உள்ளது. சாத்துக்குடி ஜூஸ் குடித்து வருவதால் கண்டிப்பாக உடலில் உள்ள இரத்தம் அனைத்தும் சுத்தமாகும்.
அல்சர், நெஞ்சு எரிச்சல் சரியாக
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால், சாத்துகுடியில் நிறைய ஊட்டச்சத்துக்கள் மிகுந்துள்ளது. சாத்துக்குடி ஜூஸ் அருந்துவதால் இறப்பை சம்மந்தப்பட்ட நோய்களான அஜீரணம், வயிற்றில் எற்படும் அல்ஸர், நெஞ்சு எரிச்சல், போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த சாத்துக்குடி ஜூஸ் குடித்து வரலாம்.
நோய் எதிர்ப்பு சக்திப்பெற
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால், இதில் உள்ள வைட்டமின் சி உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் சக்தி அளவையும் அதிகரிக்கும்.
கல்லீரல் பலம்பெற
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால், ஸ்கர்வி என்னும் நோய் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் அடுத்து கல்லீரல் இது உடலில் மிகவும் முக்கிய பணிகளை செய்து வருகிறது