ஆண்களை விட பெண்களே அதிகமான காலத்திற்கு உயிர் வாழ்வார்கள் என்பது உலகளாவிய முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். ஆனால், சராசரியாக பார்க்கையில், ஆண்களை விட பெண்கள் ஏன் நீண்ட காலம் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கான சரியான காரணங்களை இன்னமும் யாராலும் கூற முடியவில்லை. அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், முக்கியமாக கருதப்படுவது – ஆண்களை போல் அல்லாமல் பெண்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்கிறார்கள். சின்ன சின்ன விஷயமாக இருந்தாலும் கூட தங்கள் உடலை அவர்கள் அக்கறையுடன் பாதுகாக்கிறார்கள்.
ஆண்கள் பொதுவாக எதை பற்றியும் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. தங்கள் அழகு அல்லது ஆரோக்கியம் என இரண்டின் மீதும் அவர்கள் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. ஆண்கள் சில தீய பழக்கங்களுக்கு உள்ளாகின்றனர். அதுவும் வாழ்க்கையின் மீதான எதிர்ப்பார்ப்பு என்று வரும் போது அதனை அவர்களின் விதி என கருதுவார்கள். பெண்களுடன் ஒப்பிடுகையில் உணர்ச்சி ரீதியான உணர்வுகள் ஆண்களுக்கு குறைவாகவே இருக்கும். உணர்ச்சி ரீதியான அதிர்ச்சிகளையும் அவர்களால் சரியாக கையாள முடிவதில்லை.
கருவில் இருந்தே ஆண்களை விட பெண்கள் வலுவானவர்கள். ஆண் சிசுக்களை விட பெண் சிசுக்கள் வலுவாகவும் மரபணு ரீதியாக நிலையாகவும் இருக்கும். பிறப்பிற்கு பிறகு அதுவே அவர்களின் இரத்தத்தில் ஊறி போகிறது. சரி ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகமாக உயிர் வாழ்கிறார்கள் என்பதை பற்றி சற்று தெளிவாக இப்போது பார்க்கலாமா?
ஆண்களுக்கு அதிகமாக மன அழுத்தம் ஏற்படும்
பெண்களை விட ஆண்களுக்கே அதிக மன அழுத்தம் உண்டாகும். இந்த மன அழுத்தம் பெண்ணால் வந்தாலும் கூட அவர்கள் அதனால் பாதிக்கப்படுவதில்லை.
X காரணி
கூடுதல் X என அழைக்கப்படும் குரோமோசோம் பெண்களுக்கு நல்ல உதவியை அளிக்கும். XX தான் பெண்களின் மரபணு அமைப்பு. ஆண்களின் மரபணு அமைப்பான XY-ஐ விட இது நிலையுள்ளதாக இருக்கும்.
பெண்களுக்கு இதயம் கிடையாது
எப்போதாவது பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கேள்விப் பட்டிருக்கிறீர்களா? வாய்ப்பே இல்லை; பெண்களுக்கு இதயம் என ஒன்று இருந்தால் தானே. ஆண்கள் தான் மாரடைப்பில் அதிகமாக உயிரிழப்பது.
ஆண்களின் ஆரோக்கியமற்ற பழக்கங்கள்
பெண்களை விட பொதுவாக ஆண்கள் தான் அதிகமாக மதுபானம் குடித்து ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுவார்கள். ஆண்கள் அவர்களின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொள்வதில்லை. அதனால் அவர்களின் வாழ்க்கை முறை அவர்களுக்கு சீக்கிரமே சாவை தேடி தருகிறது.
பெண்களை விட ஆண்களே அதிகமாக புகைப்பிடிக்கின்றனர்
பெண்களை விட ஆண்களே அதிகமாக புகைப்பிடிக்கின்றனர். இது உங்கள் வாழ்க்கையில் இருந்து 10 வருடங்களை பிடுங்கி விடும்.
ஆண்கள் அதிக விபத்துகளில் சிக்குகிறார்கள்
விபரீதமான விஷயங்களில் ஈடுபடும் போது தான் ஒருவர் விபரீதமான விபத்துகளில் சிக்குகின்றனர். பெரும்பாலும் ஆண்கள் தான் ஆபத்தான வீரதீர விளையாட்டுக்களிலும் ஆபத்தான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள். அதனால் அவர்களே அதிகமான விபரீத விபத்துக்களை சந்திப்பார்கள்.
தங்களை காத்துக் கொள்ள பெண்களுடன் ஹார்மோன்கள் உள்ளது
மனநிலை மாற்றங்களை உண்டாக்கும் அதே ஹார்மோன் தான் பெண்களின் ஆரோக்கியம் விஷயத்திலும் அவர்களுக்கு கை கொடுக்கிறது. ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டெரோன் போன்ற பெண்களின் ஹார்மோன்கள் அவர்களின் இதயம், நுரையீரல் ஆகியவைகளை காத்து, புற்று நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்த்தியை உண்டாக்கும்.
உணர்ச்சி ரீதியாக பெண்கள் வலுவானவர்கள்
ஆண்களை விட பெண்களே உணர்ச்சி ரீதியாக நிலையானவர்கள். ஆண்கள் கடுமையாக நடந்தாலும் உள்ளுக்குள்ளே அவர்கள் அவ்வளவு கடுமையானவர்கள் கிடையாது. அதிர்ச்சிகள், உணர்ச்சி ரீதியான காயங்கள் மற்றும் கஷ்ட காலங்களை ஆண்களை விட பெண்கள் சிறப்பாக தாங்குவார்கள்.
பெண்களுக்கு மெதுவாகவே வயதேறும்
ஆண்களை விட பெண்களுக்கு மெதுவாகவே வயதேறும். இளமை குறைகிறது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளும் அவர்கள் அதற்கேற்ற வாழ்வு முறைக்கு தங்களை மாற்றிக் கொள்வார்கள். ஆனால் ஆண்களோ, எப்போதுமே இளைஞர்களாகவே இருக்க ஆசை படுகிறார்கள்.
இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…