23.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
3 152
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்களுக்கு இன்னும் சரியா பிரா துவைக்கவே தெரியலையா?…

நம் உள்ளாடைகள் சுத்தமாக இல்லாவிட்டால் நமக்கே அது பிடிப்பதில்லை. அதே மாதிரி தான் நீங்கள் பயன்படுத்தும் பிராவும் சீக்கிரம் அழுக்காகி விடும். உங்கள் வேர்வை நாற்றம், உடம்பின் அழுக்கு, கிருமிகள் எல்லாம் உங்கள் பிராவில் தான் இருக்கும். எனவே அதை சரியான முறையில் சுத்தம் செய்து உடுத்துவதும் நமக்கு முக்கியம். ஆனால் நாம் அப்படி செய்வதும் இல்லை. நிறைய பெண்கள் தங்கள் பிராவை அடிக்கடி சுத்தம் செய்ய சோம்பேறித்தனம் படுகின்றனர். சில பேருக்கு அதை எப்படி சுத்தப்படுத்துவது என்பதே தெரிவதில்லை.

டேனி கோச் நியூயார்க் நகரத்தில் 125 ஆண்டுகளாக பிரா உள்ளாடை கடை நடத்தி வரும் உரிமையாளர். கிட்டத்தட்ட 4 தலைமுறைகளாக இவர்கள் இந்த கடையை நடத்தி வருகின்றனர். உள்ளாடைகளான பிராக்களை எப்படி சுத்தம் செய்வது, துணியின் தன்மை, நீடித்து உழைத்தல், பொருத்தமான உள்ளாடைகளை எப்படி தேர்ந்தெடுப்பது, பிரா தழும்புகள் போன்ற கருத்துகளை பற்றி அவர்கள் கூறுவதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

1. பிராவை எப்படி அலச வேண்டும்?

உங்கள் பிரா நீண்ட காலம் உழைக்க வேண்டும் என்றால் அதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஒரு நாளைக்கு 10-12 மணி நேரம் நீங்கள் பிராவை அணியும் போது உங்கள் வியர்வை, உடம்பின் எண்ணெய் பசை இவற்றை மட்டும் அவை உறிவதோடு அதன் எலாஸ்டிக் தன்மையும் சீக்கிரம் போய்விடுகிறது. இதனால் நீங்கள் தரம் வாய்ந்த பிராக்களை நாடிச் செல்ல வேண்டியது இருக்கும். அதிகபட்சமாக நீங்கள் மூன்று முறை கூட பயன்படுத்தி கொள்ளலாம்.

2. பிராவை சுத்தம் செய்ய சிறந்த வழி

உங்கள் பிராவை முதலில் நீங்கள் கைகளில் துவைப்பது தான் நல்லது. ஏனெனில் நீங்கள் அதை வாஷிங் மெஷினில் போடும் போது அதில் பயன்படுத்தப்பட்ட மெட்டல் ஊக்குகள், அதன் துணிகள், எலாஸ்டிக் எல்லாம் பாழாகி விடும். அதனால் கொஞ்சமாக டிடர்ஜெண்ட்டைப் பயன்படுத்தி உங்கள் பாத்ரூமிலே 4-5 நிமிடங்கள் அலசி பாத்ரூம் ஹேங்கரில் தொங்க விட்டு இரவு முழுவதும் காய விடலாம். அரை மணி நேரம் அலச வேண்டிய வேலையே தேவை இல்லை.

3. எவ்வளவு நாள் அணியலாம்?

வருடத்திற்கு நான்கு பிராக்கள் சுழற்சி முறையில் தேவை என்றால் 90-100 முறை அதைஅணிந்து கொள்ளலாம் . பிராக்களை அணியும் போது ரொம்பவும் இறுக்கமாக அழுத்தாமல் மூச்சு விட எளிதாக இருக்க வேண்டும். அதைவிட ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது பழைய பிராக்களை மாற்றிவிட்டு, புதிய பிராக்களை வாங்கி அணியுங்கள்.

4. பிராவை எங்கே வைக்க வேண்டும்?

இதற்கென்று தனி பைகளோ அல்லது மெத்தை அமைப்போ தேவையில்லை. கப் பகுதியை நன்றாக மடித்து துணி அலமாரியில் வைத்து கொள்ளலாம். மென்மையான பிரா, ஸ்போர்ட்ஸ் பிராக்களை மட்டும் துணிகளுக்கு இடையில் மற்றும் சூட்கேஸ் போன்றவற்றில் வைத்து பாதுகாத்தால் போதும்.

Related posts

வெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்

nathan

மரு நீக்கும் ointment

nathan

ஆண்கள் கள்ள உறவில் ஈடுபடும்போது என்னென்ன காரணங்கள் சொல்லி மனைவியை ஏமாற்றுவார்கள் தெரியுமா? தெரிந்துகொள்வோமா?

nathan

பசியால் வரும் உடல்நலக்குறைபாடுகள்

nathan

முதல் இரவு பழக்கவழக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் தெரிந்து கொள்ளலாம்.

nathan

புத்துணர்ச்சி…உடல் ஆரோக்கியம்… ஒரே கல்லில் இரண்டு மாங்காய்….

sangika

நம் முன்னோர்கள் மட்டும் எப்படி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்று தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…பெயரின் முதல் எழுத்து B -ல் ஆரம்பிக்கிறவர்கள் எப்படி இருப்பார்கள்?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…திடமான உடலை பெற முடியாமல் இருப்பதற்கான 7 காரணங்கள்!!!

nathan