curry using coconut milk
ஆரோக்கிய உணவு

சுவையான தேங்காய் பால் முட்டை குழம்பு

முட்டை குழம்பையே பலவாறு செய்வார்கள். அதில் ஒன்று தான் தேங்காய் பால் சேர்த்து செய்யும் முட்டை குழம்பு. இந்த வகை முட்டை குழம்பானது ருசியாக இருப்பதுடன், செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். ஏன் பேச்சுலர்கள் கூட இதனை செய்யலாம்.

இங்கு தேங்காய் பால் முட்டை குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Egg Curry Using Coconut Milk
தேவையான பொருட்கள்:

முட்டை – 2
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் – 1/2 கப் (ஓரளவு கெட்டியாக)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

பட்டை – 1/2 இன்ச்
கிராம்பு – 1

வறுத்து அரைப்பதற்கு…

மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 4-5

செய்முறை:

முதலில் முட்டையை வேக வைத்து, அதன் ஓட்டை நீக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

பின்பு அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு பிரட்டி, பின் உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின் அதில் தேங்காய் பால், 1/4 கப் தண்ணீர் ஊற்றி, மீண்டும் 5 நிமிடம் கொதிக்க விட்டு, குழம்பானது ஓரளவு கெட்டியாக இருக்கும் போது, அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

அடுத்து அதில் வேக வைத்துள்ள முட்டையை இரண்டாக வெட்டி, குழம்பில் சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், தேங்காய் பால் முட்டை குழம்பு ரெடி!!!

Related posts

சூப்பரான கீமா டிக்கி

nathan

வேக வைத்த முட்டைக்கோஸ் நீரை மறந்தும் கொட்டிடாதீங்க!! படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயாளிகள் முட்டைகோஸ் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!!!!

nathan

அருமையான முட்டை வறுவல்

nathan

ருசியான கப் கேக் செய்முறை!

nathan

நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும் பூசணி விதைகள்

nathan

தேனில் ஊற வைத்து நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

இரத்த உற்பத்திக்கு சாப்பிட வேண்டிய உணவுகள் | Food Items That Will Increase Blood

nathan

நுங்கு, அம்மை நோய் தீர்க்கும்… பதநீர், ஆண்மைக்கோளாறு நீக்கும்!

nathan