25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
04 15150514
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பாலை நிறுத்த சில பாட்டி வைத்திய தீர்வுகள்!

குழந்தைகளுக்கு தாய்ப்பாலை நிறுத்துவது என்பது கடினமாக வேலையாக உள்ளது.. குழந்தை தாய்பால் குடிப்பதை நிறுத்த அழுது அடம் பிடிக்கும்.. பிற உணவுகளை சாப்பிட மறுக்கும்.. சரி குழந்தை ஒழுங்க குடிக்கிறதே இந்த பாலை தான் என்று பெண்கள் தாய்ப்பால் கொடுத்துவிடுவார்கள்… மூன்று வயது எல்லாம் ஆனால் குழந்தையின் தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தை மாற்றுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.

இது போன்ற சூழ்நிலையில் ஒரு தாய் தனது குழந்தையின் தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தை நிறுத்த என்னென்ன எல்லாம் செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது? இந்த பகுதியில் குழந்தையின் தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தை எப்படி நிறுத்துவது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

எப்போது பாலை நிறுத்தலாம்?

பொதுவாக குழந்தைக்கு ஒன்றுஅல்லது ஒன்றரை வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம். அதற்குப் பிறகு பெரியவர்கள் சாப்பிடும் உணவுகளை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். அதனால்அவர்களுக்கு தாய்ப்பாலின் அவசியம் இருக்காது. ஒரு சிலர் குழந்தைகளுக்கு இரண்டு வயதாகும் வரை பால் கொடுப்பதுண்டு. ஒருவேளை ஒன்றே முக்கால் அல்லது ஒரு வயதாகி 10 மாதங்கள் வரை பால் கொடுத்து விட்டு நிறுத்தி இருந்தால், குழந்தைக்கு 2 வயதாகும் வரை பால் சுரப்பதுண்டு. அதிலும் தவறில்லை. அது தானாகவே சில நாட்களில் குறைந்து விடும்.

புரோட்டின் உணவுகள்

புரோட்டீன் உணவுகளை தாய் குறைப்பதன் மூலம், இயற்கையாகவே தாய்ப்பால் குறையும். திடீரென பால் நிறுத்தப்படுவதால், ஹார்மோன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். இதனால் தாயின் உடல் சிறிது பாதிக்கப்படலாம். சிலநேரங்களில் பால் கொடுக்காமல், தாயின் மார்பக பகுதியில் வலி ஏற்படும். குழந்தையின் மனநிலையும் பாதிக்கும். இதனால் தாய்ப்பால் நிறுத்தும் போது, கவனத்துடன் செயல்பட வேண்டும்.

திட்டமிட்டு, மெதுவாக குழந்தையை தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். இதுவே இருவருக்கும் நல்லது. ஏனெனில் திடீரென நிறுத்துவதால் குழந்தை மற்றும் அம்மா இருவருக்கும், உடலில் சில உபாதைகள் ஏற்படும். முக்கியமாக திடீரென நிறுத்தினால், தாயின் மார்பக குழாய் அடைபட்டு, வீக்கம் அடையும். மார்பக வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.

கவனம் தேவை

குழந்தைகளின் முன்பு உடை மாற்றுவதை நிறுத்த வேண்டும். குழந்தையுடன் சேர்ந்து குளிப்பதை தவிர்க்க வேண்டும். அவர்கள் தாயின் மார்பகத்தை பார்ப்பதால், மீண்டும் அவர்களுக்கு தாய்ப்பால் நினைவுக்கு வரும் வாய்ப்புள்ளது. குழந்தையை தூக்கி நடக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்கள் மார்பக பகுதியை தொடாதவாறு பார்த்து கொள்ளவும். அவ்வாறு தூக்கும்போது குழந்தையிடம் ஏதாவது பேசிக் கொண்டு, அவர்களின் கவனத்தை மாற்ற வேண்டும். உங்கள் குழந்தைகளை திசை திருப்புவதால், அவர்களை எளிதில் தாய்ப்பால் மறக்க செய்யலாம்.

பால் பாட்டில்

பால் கொடுக்கும் போது, அழகான பாட்டிலில் கொடுக்கலாம். அந்த பாட்டிலை, தாயானவள் குழந்தைக்கு கொடுக்கும் போது அதனை வர்ணித்தோ அல்லது வேறு யாரிடமாவது கொடுத்துவிடுவோம் என்று பயமுறுத்தியோ கொடுக்கலாம். ஏனெனில் பொதுவாக சில குழந்தைகள், அவர்களுக்குரிய பொருளை மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். சில குழந்தைகள் தாயின் அரவணைப்பில் இருந்தால்தான் பால் குடிப்பார்கள், அப்போது தாயானவள் குழந்தையை மடியில் போட்டு அரவணைத்து, பாட்டிலின் மூலம் பாலைக் கொடுக்கலாம்.

துவரம் பருப்பு

துவரம் பருப்பை பன்னீர் வீட்டு அரைத்து மார்பகத்தில் பற்றுப் போட்டால் தாய்ப்பால் சுரப்பு குறையும்.

தேங்காய் பூ

தேங்காய் பூவை வதக்கி மார்பகத்தில் கட்டினால் தாய்ப்பால் சுரப்பு நின்றுவிடும்.

மல்லிகை பூ

மல்லிகை பூவை மார்பகத்தில் வைத்துக் கட்டினால் தாய்ப்பால் சுரப்பு நின்றுவிடும்.

வேப்பில்லை

வேப்பில்லைகளை மார்பில் வைத்துக் கட்டினால் பால்சுரப்பு வற்றிவிடும்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸை பொடிப்படியாக நறுக்கி மூட்டையாக கட்டி மார்பில் வைத்துக் கட்டினால் தாய்ப்பால் சுரப்பு குறையும்.

வாழை பிஞ்சு

வாழைப்பிஞ்சு தாய்ப்பாலை நிறுத்தும் தன்மை உள்ளது. வாழைப்பிஞ்சை அரைத்து மார்பில் பற்று போட்டால் பால் சுரப்பது நின்றுவிடும்.

பாலை நிறுத்திய பின்பும் சுரப்பு?

பாலூட்டும் தாய்மார்களுக்கு புரோலாக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் சுரப்பு இருக்கும். தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய சில மாதங்களுக்குப் பிறகு, அந்த ஹார்மோன் கொஞ்சம் கொஞ்சமாக சுரப்பதை நிறுத்தும். ஆனால், பால் கொடுப்பதை நிறுத்திய உடனே பால் சுரப்பது நிற்காது. தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு 3 – 6 மாதங்கள் வரை தாய்ப்பால் சுரப்பு இருக்கும். அது இயல்புதான். இதில் பிரச்சனை ஒன்றும் இல்லை

இது அரிது!

அரிதாக ஒரு சிலருக்கு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி பல ஆண்டுகளுக்குப் பின்னரும் பால் சுரப்பு இருக்கும். இதனை Galactorrhoea என்பார்கள். இது ஹார்மோன் பிரச்னை. அதாவது, புரோலாக்டின் ஹார்மோன், தைராய்டு ஹார்மோன், பிட்யூட்டரி ஹார்மோன் போன்ற ஹார்மோன்சுரப்புகளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் தாய்ப்பால் நிறுத்திய பல வருடங்களுக்குப் பிறகும் சிலருக்கு இப்படி ஏற்படும். ஹார்மோன்களில் ஏற்படும் பிரச்னையைத் தவிர்த்து வேறு காரணங்களால் இப்பிரச்னை ஏற்படாது.

அறுவை சிகிச்சை

புரோலாக்டின் ஹார்மோன் மற்றும் தைராய்டு ஹார்மோன் பிரச்னை குறைபாடுகளுக்கு மாத்திரை சாப்பிடுவதன் மூலம் இந்தப் பிரச்னையை குணப்படுத்தி விட முடியும். பிட்யூட்டரி ஹார்மோன் சுரப்பதில் பிரச்னை இருந்தாலும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். ஒரு வேளை பிட்யூட்டரியில் கட்டி இருந்தால் அறுவைசிகிச்சை மூலம் தான் சரி செய்ய முடியும். இது மூளை வழியாக சிறுதுளை மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சை.

Related posts

பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது பிரச்சனையா?

nathan

பசியின்மையை நீங்கும் இலந்தை

nathan

தைராய்டு பாதிப்பை அஜாக்கிரதையாய் எடுத்துக்காதீங்க! அதன் அறிகுறிகளும் , தீர்வும் !!

nathan

பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறையை மஞ்சளை வைத்து எப்படி போக்குவது என தெரியுமா?

nathan

3 வயதில் குழந்தைகளுக்கான சத்தான டயட் டிப்ஸ்

nathan

இரவில் பெற்றோர் அருகில் குழந்தைகளைப் படுக்க வைக்கலாமா?

nathan

இந்த 6 விஷயங்களைக் கடைபிடிச்சா.. நீங்களும் ஆகலாம் மிஸ்டர் K

nathan

தொல்லை தரும் வயிற்று நோய்களை போக்கும் கொத்தமல்லி

nathan

இந்த சின்ன அறிகுறிகள் இவ்வளவு பெரிய ஆபத்தா?தெரிந்துகொள்வோமா?

nathan