மருதாணியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மருதாணி பிடித்தமான ஒன்றாகும்.
மருதாணி வைப்பது வெறும் அழகிற்காக மட்டும் இல்லை. மருதாணி வைப்பதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அதனால் தான் நம் முன்னோர்கள் ஒவ்வொரு விசேஷத்திர்க்கும் மருதாணி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.
அந்த காலத்தில் மருதாணி இலையை பறித்து அரைத்து கைகளில் வைத்துக் கொள்வார்கள். ஆனால் மருதாணி இலையை அரைத்து வைக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது.
அதற்கு மாறாக மருதாணி .பேக்,பவுடர்,அச்சு,என பல வடிவங்களில் வந்துவிட்டது. இதில் இயற்கையாக அரைத்து வைக்கும் மருதானியின் மருத்துவ குணங்கள் இல்லை.
செயற்கை பவுடரில் உடலுக்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல் கலந்துள்ளதால் கைகளில் அலர்ஜி, உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடலுக்கு அதிகப்படியான வெப்பத்தினை கொடுக்கிறது.
கடைகளில் பேக் செய்யப்பட்ட மெஹந்தி உடலுக்கு குளிர்ச்சியை தராது என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
உடல் சூட்டை குறைக்கும்
மருதாணியை உள்ளங்கை மற்றும் பாதத்தில் வைப்பதால் அதில் உள்ள குளிர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைக்கிறது. இதனால் உடல் வெப்பத்தால் ஏற்படும் தோல் நோய்கள்,வயிற்று உபாதைகள் போன்றவை கட்டுப்படுத்தப்படுகிறது.
தலை முடி
முடி உதிர்தல், இளநரை, வழுக்கை, முடி அடர்த்தியாக வளர,மருதாணியை அரைத்து தலைக்கு குளிக்கும் முன் தலையில் தேய்த்து மசாஜ் செய்து 1 மணி நேரம் ஊறவைத்து பின் குளித்தால் முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.
தீக்காயம்
தீக்காயங்களுக்கு மருதாணி இலைகள் பெரிதும் உதவி புரியும். மருதாணி இலைகளை அரைத்து தீக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வலி வெகுவாக குறையும். அதனால் தீக்காயங்களுக்கு மருதாணி இலைகளை மருந்தாக பயன்படுத்தலாம்.
வலி நிவாரணி
மருதாணி இலைகள் அல்லது அதன் பவுடர் அல்லது பேஸ்ட்டை நெத்தியில் தடவினால் தீராத தலைவலியாக இருந்தாலும் கூட குறைந்து விடும்.
தொண்டை கரகரப்பு
மருதாணி இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும்.
தூக்கமின்மை
மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் நன்றாக வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.