23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
3 diabetics
மருத்துவ குறிப்பு

நீரிழிவு நோயினை கட்டுப்படுத்த முடியவில்லையா? இதோ எளிய நிவாரணம்

நமது உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் ஏற்படும் விளைவே சர்க்கரை நோய் ஆகும்.

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், இதய நோய், கண் நோய், சிறுநீரக நோய் போன்றவை உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நீரிழிவு நோயில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

அந்தவகையில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

வேப்பம் பொடி தயாரிக்க வேப்ப இலைகளை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி நைஸாக பொடிக்கவும். தினமும் கால் டீஸ்பூன் அளவு இரண்டு வேளையும் எடுத்து வரலாம். இது சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவும்.

மா இலைகளை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து 15 நிமிடங்கள் வேகவைத்து வடிகட்டவும். இந்த டீயை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
தினமும் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு குடிக்கலாம். அல்லது அதை சமைத்து எடுக்கலாம். எவ்வளவு அளவு என்பது குறித்து மருத்துவரை அணுகுங்கள்.
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் நாவல் விதை பொடியை சேர்த்து வெறும் வயிற்றில் குடித்துவருவதன் மூலம் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
ஓர் அங்குல இஞ்சியை எடுத்து ஒரு பாத்திரத்தைல் ஒரு கப் நீர் கொதிக்க விட்டு பிறகு இஞ்சியை தோல் சீவி நசுக்கி சேர்த்து கொதிக்க விடவும். தொடர்ந்து 5 நிமிடங்கள் நீரை கொதிக்க வைத்து வேகவைத்து வடிகட்டவும். தினமும் இரு வேளை அல்லது ஒரு வேளை குடித்து வந்தால் பலன் கொடுக்கும்.
ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் விதைகளுடன் அந்த தண்ணீரை குடிக்கலாம். வெந்தயம் கசப்பு தெரியாமல் இருக்க அதை முளைகட்டியும் சாப்பிடலாம்.
தினமும் 10 எண்ணிக்கை கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுங்கள். உங்களுக்கு பிடித்த உணவோடு மற்றும் சாலட்களில் கறிவேப்பிலை நறுக்கி சேர்க்கலாம்.
ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை சேர்த்து குடிக்கலாம். தேநீரில் இனிப்பு வகைகளில் இலவங்கப்பட்டையை சேர்க்கலாம்.
கற்றாழை இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கற்றாழை சாற்றை இனிப்பு சேர்க்காமல் எடுத்துகொள்வதன் மூலம் சர்க்கரை அளவை குறைக்கலாம்.

Related posts

வயிற்றுப் பிரச்சனைகள் தீர அங்காயப் பொடி!

nathan

அதிகரிக்கும் தனிப்படுக்கை தம்பதிகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது? அப்ப எவ்வளவு நேரம் கழிச்சு குளிக்கலாம்?

nathan

பெற்றோர் குழந்தைகள் முன்னால் செய்யக்கூடாதவை

nathan

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய காபி குடிப்பதை கைவிடுங்கள்

nathan

பெண்களுக்கு வயது அடிப்படையில் ஏற்படும் நோய்களும் – தடுக்கும் முறைகளும்

nathan

தலைவலியை குணப்படுத்தும் கறிவேப்பிலை

nathan

தினமும் ஒயின் குடிப்பது உடலுக்கு நல்லதா?

nathan

வெங்காயம் – பாதம் வைத்தியம்…!

nathan