26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
finance manager girl 11
ஆரோக்கியம் குறிப்புகள்

தளர்ந்து தொங்கும் மார்பகங்களைப் பற்றிய சில தவறான கருத்துக்கள்!

பெரும்பாலான பெண்கள் மட்டுமே சந்திக்கும் ஓர் அழகு பிரச்சனை தான் தளர்ந்து தொங்கும் மார்பகங்கள். இது வயது, ஹார்மோன் பிரச்சனைகள், பிரசவ காலத்திற்கு பின், எடை குறைவு மற்றும் சில நேரங்களில் உடல் எடை அதிகரிப்பின் காரணமாகவும் ஏற்படும். எனவே மார்பகங்களுக்கு சரியான பராமரிப்புக்களை மேற்கொண்டு வர வேண்டியது அவசியம்.

தற்போது தொய்வடைந்த மார்பகங்களுக்கான ஏராளமான மசாஜ் க்ரீம்கள் கடைகளில் கிடைக்கின்றன. அந்த க்ரீம்களைப் பயன்படுத்தினால், பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவே அவற்றைத் தவிர்த்து,

இங்கு தளர்ந்து தொங்கும் மார்பகங்கள் குறித்து மக்களிடையே உள்ள சில தவறான கருத்துக்களும், உண்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

மார்பக உடற்பயிற்சிகளை செய்து வந்தால்

மார்பகங்கள் தளர்வதைத் தடுக்கலாம்! மார்பகங்களில் எந்த ஒரு தசைகளும் இல்லை. அது இழைம திசுக்களை மட்டுமே கொண்டுள்ளது. எனவே உடற்பயிற்சியின் மூலம் மார்பகங்களை பெரிதாக்க முடியாது. இருப்பினும் மார்பகங்களுக்கான உடற்பயிற்சியை செய்வதன் மூலம், மார்பகங்கள் நிலைமாறாமல் இருக்கும். அதிலும் புஷ் அப் செய்வதன் மூலம், மார்பகங்களின் வடிவம் அழகாக்கப்பட்டு, மார்பகங்களில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் வெளியேற்றப்படும். எனவே உங்கள் மார்பகங்கள் தளர்ந்து தொங்காமல் இருக்க வேண்டுமெனில், பளு தூக்குதல், செஸ்ட் பிரஸ் போன்றவற்றை செய்து வாருங்கள்.

தாய்ப்பால் கொடுப்பது மார்பகங்களைத் தளர்த்தும்!

தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் எப்போதும் மார்பகங்கள் தளர்வதில்லை. பிரசவத்திற்கு பின் அதிகப்படியான எடை ஒரே நேரத்தில் குறைவதால் தான் மார்பகங்கள் தளர்கிறது. எனவே இதனைத் தவிர்க்க பிரசவத்திற்கு பின் நல்ல கொழுப்புக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் போதிய அளவில் நட்ஸ்களை சாப்பிட வேண்டும்.

பிரா அணிவதன் மூலம் மார்பகங்கள் தளர்வதைத் தடுக்கலாம்!

மற்றொரு கட்டுக்கதை பிரா அணிவதன் மூலம் மார்பகங்கள் தளர்ந்து தொங்குவதைத் தடுக்கலாம் என்பது. பிராவை 24/7 அணிவதன் மூலம் மார்பகங்கள் தளர்வதைத் தடுக்கலாம் என்பது உண்மையல்ல. ஆனால் சரியான மற்றும் ஃபிட்டான பிரா அணிவதன் மூலம் தளர்ந்த மார்பகங்களுக்கு ஆதரவைத் தான் கொடுக்க முடியுமே தவிர, சரிசெய்ய முடியாது.

சிறிய மார்பகங்கள் தளராது!

இது மற்றொரு மடத்தனமான கட்டுக்கதை. அது என்னவெனில் பெரிய மார்பகங்கள் தான் தொய்வுறும் என்பது. உண்மையில் மார்பகங்களில் உள்ள கொழுப்பு மற்றும் மார்பக திசுக்களின் அளவைப் பொறுத்து தான் தொய்வுறுவது உள்ளது. அதிலும் மார்பகங்களில் கொழுப்புக்கள் அதிகமாகவும், மார்பக திசுக்களின் அளவு குறைவாகவும் இருந்தால் தான் மார்பகங்கள் தொய்வுறும்.

புகைப்பிடிப்பதால் மார்பகங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை!

இது ஒரு கட்டுக்கதை. உண்மையில் புகைப்பிடிப்பதால், கொலாஜன் மற்றும் இழைம திசுக்கள் உடைக்கப்பட்டு, அதனால் மார்பகங்கள் தளர ஆரம்பிக்கும். எனவே உங்கள் மார்பகங்கள் கச்சிதமான அமைப்புடன் இருக்க புகைப்பிடிப்பதை முதலில் நிறுத்துங்கள்.

மார்பகங்கள் தளர்ந்தால் சரிசெய்ய முடியாது!

இது தவறான கருத்து. மார்பகங்கள் தளர்ந்தால், அதனை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் மீண்டும் உறுதியுடன் இருக்கச் செய்யலாம். அதற்கு நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது, மார்பகங்களில் எண்ணெய் மசாஜ் செய்வது, தண்ணீர் அதிகம் குடிப்பது, சில மார்பக பயிற்சிகளை செய்வதன் மூலம், உறுதியிழந்த மார்பகங்களின் உறுதித்தன்மையை அதிகரிக்கலாம்.

 

Related posts

இதோ எளிய நிவாரணம் அறுவை சிகிச்சையால் ஏற்படும் தழும்பை இயற்கையாக மறைப்பது எப்படி?..!!

nathan

குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் எவ்வாறு உதவியாக இருக்கிறது

nathan

உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருந்தா…ஷாக் ஆகாதீங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…நாம் சாப்பிடும் உணவை வேகமாக சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?

nathan

வேர்க்கடலை. ஏழைகளின் அசைவ உணவு!

nathan

கொரியர்களின் அழகிய சருமத்திற்கு காரணம் அவர்களின் இந்த ரகசிய அழகு குறிப்புகள்தானாம் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சுற்றுச்சூழல் மாசுபாட்டில், சில குறிப்பிட்ட வாயுக்களின் வெளிப்பாடினால் ஏற்படும் உடல்நல அபாயங்கள்!!!

nathan

தாய்ப்பால் கொடுப்பது மார்பகத்தின் வடிவமைப்பை மாற்றுமா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

ஜப்பானியர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான ரகசியம் என்னவென்று தெரியுமா?

nathan