25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
nagging
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… பெண்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் ஆண்களிடம் உள்ள பழக்கவழக்கங்கள்!!!

பெண்கள் தங்களுடைய ஆண்கள் மேல் எவ்வளவு தான் அன்பும், காதலும் வைத்திருந்தாலும், ஆண்களிடம் உள்ள சில எரிச்சலூட்டும் குணங்களை அவர்களால் தவிர்த்திட முடியாது. சில ஆண்கள் தங்களுடைய பெண்களை எரிச்சலூட்டுவதை வாடிக்கையாக கொண்டிருப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் பெண்களுக்கு எரிச்சலூட்டும் விஷயங்களை, ஆண்கள் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். எனினும், இது போன்ற பழக்கங்களை, குறிப்பாக உங்கள் பெண் நண்பரை எரிச்சலூட்டும் பழக்கங்களை தவிர்ப்பதும் அல்லது வெளிவராமல் தடுப்பதும் உறவை மேம்படச் செய்யும்.

எல்லா பெண்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, எனவே உங்களுடைய பழக்கத்தில் எது அவளுக்கு எரிச்சலூட்டுகிறது என்று கண்டறிந்து அதனை தவிர்ப்பது நல்ல பலன் தரும். இதன் மூலம் எரிச்சலூட்டும் பழக்கத்தால் உருவாகும் மோதல்களை தவிர்த்திட முடியும். சில நேரங்களில் இந்த எரிச்சலூட்டும் விஷயங்களை உங்களுக்கு வெளிப்படையாகவே தெரியும். நெடுங்காலம் உறவு சிறப்புடன் இருக்கவும், அவளிடம் நெருங்கிச் செல்லவும் நீங்கள் அவளுடைய உணர்வுகளை மதிக்க வேண்டியது அவசியமாகும்.

அதிலும் உடலுறவிற்குப் பின் தூங்கி விடுதல் (நீங்கள் களைப்பாக இருந்தாலும்), சொல்வதை கேட்காமல் இருத்தல், ஏளனமாக சத்தமாக சிரித்தல், அவலட்சணமான சேட்டைகள் போன்றவை பெண்களுக்கு அறவே பிடிப்பதில்லை. இவற்றில் பெரும்பாலானவை ஆண்கள் இயற்கையாகவே பின்பற்றும் பழக்கங்களாக இருந்தாலும், பெண்கள் அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே உங்கள் உறவு சிறப்பாக மேம்பட, இந்த பழக்கங்களை முடிந்த வரையிலும் ஒழித்து விடுவது நல்லது.

உடலுறவிற்குப் பின்னர் உடனே தூங்கி விடுதல்

உள்ளார்ந்த உறவின் ஒரு பகுதியாக இருக்கும் விஷயம் உடலுறவு. எனவே, உடலுறவிற்குப் பின்னர் அதிகமான காதலையும், கொஞ்சல்களையும் பெண் எதிர்பார்ப்பாள். எனவே தூங்கி விட வேண்டாம்.

குறைவாக பேசுதல்

பொதுவாகவே பெண்கள் அதிகம் பேசுவார்கள், ஆண்கள் குறைவாகவும், குறிப்பிட்டும் பேசுவார்கள். அவளுக்கு பட்டென பதில் சொல்லி விட்டு செல்வது, உங்கள் உறவுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும் செயலாக இருக்கும். அவ்வாறு செய்வதால் உறவில் விரிசல்கள் விழத் தொடங்கும்.

மோசமான ஸ்டைல்

ஆண்களுடன் ஒவ்வொரு முறையும், பெண்கள் வெளியே செல்லும் போது தங்களுடைய தோற்றத்தை மிகவும் நாகரீகமாக காட்ட முனைவார்கள். ஆனால், பெரும்பாலான ஆண்கள் வெகு சீக்கிரத்தில், சற்றே டல்லான உடையுடன் தயாராகி விடுவார்கள். இந்த பழக்கம் கண்டிப்பாக பெண்களுக்கு எரிச்சலூட்டும்.

ஷேவிங் செய்த பின்னர்

ஷேவிங் செய்த பின்னர், அந்த முடிகளை சிங்க்கில் கழுவாமல் விட்டு வைப்பவராக இருந்தால், அந்த பழக்கம் உண்மையில் உங்கள் துணைவியை மிகவும் எரிச்சலூட்டும் பழக்கம் என்பதை உணரும் நேரம் இது.

கேட்டல்

பெண்கள் மிகவும் அதிகம் பேசத் துடிப்பவர்களாதலால், ஆண்கள் அதிகம் கேட்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதுவும் அமைதியாக கேட்காமல், சற்றே பதில்களுடன் கேட்க வேண்டும். நீங்கள் எப்பொழுது கேட்பதை நிறுத்துகிறீர்களோ அப்பொழுது பிரச்னையை துவக்குகிறீர்கள்!

வீட்டு வேலைகளை தவிர்த்தல்

ஆண்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் வீட்டு வேலைகளை செய்யாமல் இருப்பதை விரும்புவார்கள். நீங்களும் அதே போல இருந்தால், உங்கள் உறவில் புயலடிக்கத் துவங்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சத்தம்

ஆண்கள் எதையாவது உளறுவதையோ அல்லது முணுமுணுப்பதையோ விரும்புவார்கள். அது உங்களுக்கு எந்தவித அர்த்தமும் தருவதாக இல்லாமலிருந்தாலும், பெண்களுக்கு எரிச்சலை தருவதாக இருக்கும். எனவே, இது போன்ற விஷயங்களை தனிமையில் செய்வது நலம்.

டிவி பார்க்கும் ஆண்கள்!

ஆண்கள் டிவி பார்க்கும் முறை அலாதியானது. செய்திகள், பொழுதுபோக்குகள் என மாறி மாறி ஒரு சேனலில் நிறுத்தாமல் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருப்பது தான் அது! இந்த விஷயம் எந்த பெண்ணையும் எரிச்சலடையச் செய்து விடும்!

குளறுபடியாக சிறுநீர் கழித்தல்

நீங்கள் சிறுநீர் கழிக்கும் முறை இது தானா? அப்படியானால் நீங்கள் முறையாக சிறுநீர் கழிக்க கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அதன் மூலம் டாய்லெட்டிலுள்ள பொருட்களில் சிறுநீர் கறைகள் படுவதை தவிர்த்திட முடியும்.

அசுத்தமாக இருத்தல்

பேச்சுலராக இருக்கும் நாட்களிலிருந்தே, பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய உடைகளையும், பிற பொருட்களையும் முறையாக வைக்கமால் கண்டபடி போடுவது வழக்கம். இவற்றை முறையாக அடுக்கி வைக்க அவர்களுக்கு எப்பொழுதும் நேரம் கிடைப்பதில்லை! இந்த பழக்கம் பெண்களை மிகவும் எரிச்சலூட்டும் விஷயம் என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை!

Related posts

நீங்கள் காய்கறி வாடாம இருக்க பிளாஸ்டிக் கவர்ல போட்டு வைக்கறீங்களா?அப்ப இத படிங்க!

nathan

இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கேள்வியா?

nathan

கர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை வருவதைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்

nathan

சமையலறைக்கு சில எளிய குறிப்புகள்.

nathan

வாழ்நாள் முழுக்க சந்தோசமாக இருக்க வேண்டுமா? உறவில் அன்யோன்யம் அதிகரிக்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ஆபரணங்களை அணிந்து கொள்வதற்கான அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியிலான காரணங்கள்!!

nathan

விரலி மஞ்சளில் இத்தனை ஆரோக்கிய நன்மையா..?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

அதிகமாக வியர்ப்பது ரொம்ப நல்லது

nathan

அவசர வாழ்க்கைக்கு நடுவில் சந்தோஷமாக இருக்க உதவும் 6 காலை நேர டிப்ஸ்…தெரிஞ்சிக்கங்க…

nathan