28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
7 chocolatefacem
முகப் பராமரிப்பு

பெண்களே உங்க சருமம் அதிகமா வறட்சி அடையுதா?

சரும வறட்சி உள்ளவர்கள் குளிர்காலத்தில் பல சரும பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள். குறிப்பாக குளிர்காலத்தில் வீசும் குளிர்ச்சியான காற்றினால் சருமமானது அதிகம் வறட்சியடைந்து, சருமத்தில் இருந்து வெள்ளை நிறத்தில் செதில் செதில்களாக தோல் உரிய ஆரம்பிக்கும். இப்படி ஏற்படும் போது அதற்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுக்காமல் இருந்தால், சரும பிரச்சனைகள் வர ஆரம்பிப்பதோடு, தீவிரமடைந்துவிடும்.

குளிர்காலத்தில் வறண்ட சருமம் கொண்டவர்கள் தங்கள் சருமத்திற்கு தவறாமல் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். சருமத்தின் வறட்சியைத் தடுக்க கடைகளில் பல்வேறு அழகு சாதனப் பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால் இந்த பொருட்களில் கெமிக்கல்கள் இருப்பதால், இதைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், சருமம் வறட்சியின்றி பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போது சரும வறட்சியை வீட்டிலேயே சமாளிக்க உதவும் சில வழிகளைக் காண்போம்.

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் ஆகிய இரண்டு பொருட்களுமே சருமத்திற்கு ஈரப்பதமளிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. தேங்காய் எண்ணெய் மற்றும் தேனை சரிசம அளவில் எடுத்து நன்கு கலந்து, அதை அதிகம் வறட்சியடையும் முகம், கை, கால்களில் தடவி 20-30 நிமிடங்கள் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் சரும வறட்சி கட்டுப்படுத்தப்படும்.

வாழைப்பழம் மற்றும் தேன்

வாழைப்பழம் மற்றும் தேன் ஆகிய இரண்டுமே ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளன. சரும தொற்றுகள், அழற்சி போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இந்த வழியைப் பயன்படுத்துவதன் மூலம் தடுக்கலாம். அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

மயோனைஸ் மற்றும் பேபி ஆயில்

மயோனைஸ் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டது. பேபி ஆயிலில் கெமிக்கல்கள் அதிகம் இருக்காது. எனவே 2 டீஸ்பூன் மயோனைஸ் உடன் ஒரு டீஸ்பூன் பேபி ஆயில் சேர்த்து கலந்து, வறட்சியடையும் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

அவகேடோ ஆயில்

அவகேடோ பழம் சருமம் மற்றும் தலைமுடிக்கு அற்புதமான நன்மைகளை வழங்கக்கூடிய பழம். இதில் அழகை மேம்படுத்த தேவையான சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இதன் சிறப்பான பகுதி என்னவென்றால், இதை எந்த ஒரு பொருளுடனும் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படியே பயன்படுத்தலாம். குறிப்பாக வறட்சியான சருமத்தினரின் சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்கக்கூடியது. அதற்கு அவகேடோ பழத்தை அப்படியே சருமத்தில் தடவலாம் அல்லது அவகேடோ எண்ணெயை சருமத்திற்கு தடவலாம்.

முட்டை மஞ்சள் கரு மற்றும் பாதாம் எண்ணெய்

முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகம் இருப்பதால், இது ஒரு அற்புதமான ஈரப்பதமூட்டும் பொருளாக செயல்படுகிறது. அதேப் போல் பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ, மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், புரோட்டீன்கள், பொட்டாசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் இருப்பதால், இது ஒரு சிறப்பான சரும பராமரிப்பு பொருள். ஒரு பௌலில் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக எடுத்து நன்கு கலந்து, அதிகம் வறட்சியடையும் பகுதியில் தடவி ஊற வைத்து, பின் கழுவினால், சரும வறட்சி கட்டுப்படும்.

பிரஷ் க்ரீம் மற்றும் வாழைப்பழம்

வாழைப்பழம் மற்றும் பிரஷ் க்ரீம் ஆகிய இரண்டிலுமே ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன. அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை எடுத்து மசித்து, அத்துடன் சிறிது பிரஷ் க்ரீம் சேர்த்து கலந்து, முகத்தில் மற்றும் வறட்சி அதிகம் ஏற்படும் சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரத் துணியால் துடைத்து, அதன் பின் கழுவ வேண்டும்.

சாக்லேட் மற்றும் தேன்

2-4 டார்க் சாக்லேட் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதை உருக்கி, அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக தேய்த்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

பப்பாளி டோனர்

பப்பாளியில் ஈரப்பதமூட்டும் பண்புகள் மற்றும் சருமத்தை பிரகாசமாக்கும் பண்புகள் அதிகம் உள்ளன. இத்தகைய பப்பாளியின் ஒரு துண்டை பிளெண்டரில் போட்டு ஒரு கப் நீரை ஊற்றி நன்கு அரைத்து, ஒரு பஞ்சுருண்டையால் அதை நனைத்து முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். ஒருமுறை தயாரிக்கும் இந்த டோனரை 5 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

கற்றாழை, தேன் மற்றும் பாதாம் எண்ணெய்

கற்றாழையில் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன. இதை பாதாம் எண்ணெய் மற்றும் தேனுடன் சேர்த்து பயன்படுத்தும் போது இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். அதற்கு 2 டேபிள் ஸ்பூன் கற்றாழையுடன் தேன் மற்றும் பாதாம் எண்ணெயை சரிசம அளவில் கலந்து, முகம் மற்றும் வறட்சி அதிகம் ஏற்படும் பகுதியில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.

Related posts

கோடையில் அழகா ஜொலிக்கணுமா? அப்ப நைட் இத செய்யுங்க…

nathan

ஆண்களே உங்கள் முகத்தில் உள்ள கருமையை போக்க வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

வெள்ளையான சருமம்

nathan

முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகளை நீக்க இதை செய்யுங்கள்!…

sangika

உங்களுக்கு தெரியுமா ஒயினை கொண்டு இப்படியெல்லாம் செய்யலாமா?

nathan

முகத்தை ஜொலிக்க வைக்கும் கிரீன் டீ ஸ்க்ரப்..!!

nathan

உங்க முகத்தை என்றும் இளமையாக வைத்து பட்டுப்போல மாற்றும் ஆளி விதை…! சூப்பர் டிப்ஸ்

nathan

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் சருமத்தை சில்லுனு மாற்ற வேண்டுமா! இதை முயற்சி செய்யலாமே

nathan

முகப் பொலிவிற்கு!

nathan