சமமான இரட்டைச் சிறகமைப்புக் கூட்டிலைகளையும், பூக்களின் கற்றையான மகரந்தத் தாள்களையும் தட்டையான காய்களையும் வட்டமான விதைகளையும் மிகவும் உறுதியான கட்டைகளையும் உடைய மரம். இலை, பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
இலைப் பொடியை எண்ணெய்க் குளியலின் பொது சிகைக்காய்க்குப் பதிலாகப் பயன்படுத்த உடல் குளிர்ச்சி பெறும்.
உசிலைப் பட்டை, வெங்காயம், கரியாக்கிய வசம்பு வகைக்கு 10 கிராம் எடுத்து இடித்து 360 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு 50 மி.லி. யாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 15 to 30 மில்லி லிட்டர் ஒரு நாளைக்கு மூன்று வேலையாகக் கொடுக்க குழந்தைகளுக்கு வரும் அள்ளு மாந்தம், சுழிக் கணை ஆகியவை குணமாகும்.
இதன் பிசின் பித்த மேகத்திற்கு உரித்தான லேகியங்களில் கூட்டலாம். குளிர்ச்சியான குடித்தைலம் (உள்ளுக்கு சாப்பிடும் தைலம் )காய்ச்சும் பொழுது இதன் கட்டையைக் கொண்டு எரித்தல் மிகவும் சிறந்தது.