25.9 C
Chennai
Tuesday, Nov 19, 2024
baby vomit
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளுக்கு கேடு விளைவிக்க கூடிய ஆரோக்கிய உணவுகள்

குழந்தைகள் பிறந்த் முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சாதனையாக தான் தெரியும். ஆனால் இப்போது தான் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். முக்கியமாக குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள்.

நமக்கு ஆரோக்கியமாக இருக்கும் உணவுகள் எல்லாம் குழந்தைக்கும் ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.. எனவே குழந்தைகளுக்கு எது ஆரோக்கியமான உணவாக இருக்குமோ அந்த உணவை மட்டும் குழந்தைக்கு கொடுங்கள். இந்த பகுதியில் சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன, இந்த உணவுகளை எல்லாம் குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை கொடுக்காதீர்கள்.

1. பால்

மாட்டின் பால் அல்லது சோயா பால் போன்றவை குழந்தைகளுக்கு செரிமானமாவது மிகவும் சிரமமான ஒன்றாகும். மேலும் இந்த பால்களில் உள்ள புரோட்டின் மற்றும் மினரல்கள் குழந்தையின் சிறுநீரகத்தை பாதிக்கும் அபாயமும் உள்ளது.

அதுமட்டுமின்றி சில குழந்தைகளுக்கு லேக்டோஸ் அலர்ஜி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இது குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை உண்டாக்கும். எனவே நீங்கள் தாய்ப்பால் கொடுக்கலாம். அல்லது தாய்ப்பாலை பாட்டிலில் கொடுக்கலாம்.

2. சிட்ரஸ் பழங்கள்

ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளூ பெர்ரி, பிளாக் பெர்ரி ஆகியவற்றில் அதிகளவு புரோட்டின் உள்ளது. இவை குழந்தைக்கு எளிதில் செரிமானமாகாது.

திராட்சை மற்றும் ஆரஞ்ச் போன்ற பழங்களில் அதிகமாக அமில தன்மை உள்ளது. இது குழந்தைகளுக்கு தடிப்பு அல்லது வயிற்று உபாதைகளை கொடுக்கும்.

3. தேன்

தேன் என்பது பாக்டீரியாக்களின் ஆதாரமாக உள்ளது. இது குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. இது குழந்தைகளுக்கு மலச்சிக்கலை உண்டாக்குகிறது. அதே போல மற்ற திரவ இனிப்புகளும் கூட குழந்தைகளுக்கு ஏற்றதல்ல… திரவ இனிப்புகள், மாப்பிள் சிரப் போன்றவையும் ஒரே மாதிரியான பிரச்சனையை தான் குழந்தைக்கு தருகின்றன.

4. பினட் பட்டர்

இது நிலக்கடலையில் இருந்து பெறப்படுவதாகும். இந்த பினட் பட்டரும் கூட குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்க கூடியதாக இருக்கிறது. எனவே இதை எல்லாம் நீங்கள் குழந்தை கொஞ்சம் வளர்ந்ததுக்கு பிறகு கொடுப்பது நல்லதாகும்.

5. சில காய்கறிகள்

கீரைகள், பீட்ரூட் போன்றவற்றில் லேக்டோஸ் அளவு அதிகமாக உள்ளது. இது ஒரு வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான உணவாகும். இதில் இருக்கும் சத்துக்களை செரிக்கும் அளவுக்கு குழந்தைகளின் உடலில் ஆசிட் சுரப்பது இல்லை.. எனவே நீங்கள் இது போன்ற காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.

6. உப்பு

குழந்தைகளுக்கு ஒரே ஒரு கிராம் உப்பு என்பது ஒரு நாளைக்கு போதுமானதாக உள்ளது. உங்களது தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு தேவையான உப்பு இருக்கிறது. எனவே உப்பு கலந்த எந்த ஒரு பொருளையும் குழந்தைகளுக்கு கொடுத்து குழந்தைகளுக்கு ஆபத்தை கொடுத்து விட்டாதீர்கள்…

7. நட்ஸ்

பாதாம், முந்திரி என ஒட்டுமொத்த நட்ஸ் வகைகளையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். இவை அலர்ஜியை உண்டாக்க கூடியதாகும். இவை நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்தை கூட குழந்தைகளுக்கு கொடுக்கும்.எனவே எக்காரணத்தை கொண்டும் இது போன்ற நட்ஸ் வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.

8. சாக்லேட்

அனைத்து குழந்தைகளுக்குமே சாக்லேட் என்றால் மிக மிக பிடிக்கும். ஆனால் சாக்லேட்டில் உள்ள காஃபின் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இதில் மட்டுமல்ல பால் பொருட்களும் குழந்தைகளுக்கு சேராது. எனவே இவற்றை கொடுப்பதை குழந்தை வளரும் வரை நிறுத்தி வைக்கலாமே…!

9. பாப் கார்ன்

பாப் கார்ன் ஒரு சுவையான உணவு தான்.. மொருமொருப்பாகவும் ஒரு ஆரோக்கியமான நொறுக்கு தீனியாகவும் உள்ளது. இது அனைவருக்குமே பிடிக்கும் ஒன்றாகும். ஆனால் இது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது ஆகும். 12 மாதத்திற்கு குறைவான குழந்தைக்கு தயவு செய்து பாப்கார்ன் கொடுக்க வேண்டாம்.

10. முட்டை

முட்டை காலையில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவாக இருக்கிறது. ஆனால் முட்டையின் வெள்ளைக்கருவானது குழந்தைக்கு அலர்ஜுயை கொடுக்க கூடியதாக உள்ளது. உங்களது குழந்தைக்கு முட்டை கொடுக்க வேண்டும் என்றால். முழுமையாக முட்டையின் வெள்ளைக் கருவை நீங்கிவிட்டு, மஞ்சள் கருவை மட்டும் சமைத்து கொடுக்கலாம்.

மீன்

மீன் ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை கொண்ட உணவாகும். இது பெரியவர்களுக்கு பல நன்மைகளை செய்யக்கூடியது. ஆனால் குழந்தைகளுக்கு மீன் கொடுக்கும்போது அது அவர்களுக்கு பல ஒவ்வாமைகளை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் மீன்களில் உள்ள மெர்குரி குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல.

பழச்சாறு

முதல் ஆறுமாதங்களுக்கு குழந்தைக்கு பழச்சாறு கொடுக்கக் கூடாது. ஏனெனில் அவர்களுடைய சிறிய செரிமான மண்டலத்தால் பழச்சாறில் உள்ள அமிலத்துவத்தை தாங்கிக்கொள்ள இயலாது. இது குடல்புண் போன்ற உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்

அடைக்கப்பட்ட உணவுகள்

தேன், பால் மற்றும் பழச்சாறுகள் என பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் பெரியவர்கள் மீதே மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்நிலையில் குழந்தைகள் எவ்வாறு இதனை தாங்கிக்கொள்வார்கள். அடைக்கப்பட்ட உணவுகளில் இருக்கும் ஆபத்தான பாக்டீரியாக்கள் குழந்தைகள் மீது ம்மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் முடிந்தவரை அவர்களும் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

புகைமூட்டப்பட்ட இறைச்சி

புகையில் சமைக்கப்பட்ட இறைச்சியை குழந்தைக்கு கொடுக்க நினைத்து பார்க்கவே கூடாது. ஒரு வயதிற்கு பிறகுதான் மருத்துவருடன் ஆலோசனை செய்த பிறகு இறைச்சியை குழந்தைக்கு கொடுக்க தொடங்க வேண்டும். புகைமூட்டப்பட்ட இறைச்சி குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

0-4 மாதம் வரை:

தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். ஏனெனில், தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றிவிடும். அதிலும் அந்த தாய்ப்பாலை

குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.

4-6 மாதம் வரை:

நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில், கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். அதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். அதுவும் ஒருடேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.

6-8 மாதம் வரை:

இந்த மாதங்களில் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள் ஆகிவற்றை கொடுக்கலாம். அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது, அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4 அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம்.

அவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு அந்த உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.

8-10 மாதம் வரை:

இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம்.

10-12 மாதம்:

இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். அளவாக இருக்க வேண்டும். உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும். அதாவது 1/3 கப் பால்பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்.

Related posts

தினமும் 1 முட்டையா? ஆண்மை குறைவா?!

sangika

உடல் எடையைக் குறைக்கும் ‘சமைக்காத உணவுகள்’ -தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பத்தின் முதல் பருவத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

nathan

கோடையில் டயட்டில் இருக்கும் போது கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

மீன் சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு அசிடிட்டி பிரச்சனை உள்ளதா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

மகளிர் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிய மரபும் உணவும்!

nathan

இரவு தூங்கும் முன் 5 உலர் திராட்சை சாப்பிடுங்க! சூப்பர் டிப்ஸ்

nathan

உடல்வலியை உடனே போக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan