25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
IMG 202007
மருத்துவ குறிப்பு

கல்யாண முருங்கை இலையில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கா? நம்ப முடியலையே…

கல்யாண முருங்கையானது எண்ணற்ற மருத்துவ பயன்கள் கொண்டது. இது கிராமப்புறங்களில் முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள் முருக்கு என்ற பெயர்களிலும் அழைக்கபடுகிறது. இதன் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் குணங்கள் கொண்டது. கல்யாண முருங்கையானது காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. அகன்ற, பச்சை நிற இலைகளையும், சிவப்பு நிறப் பூக்களையும்கொண்டது.

கன்னிப்பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கை மரம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது பழமொழி. பெண்களின் நன்மைக்காக இயற்கை அளித்த வரம் கல்யாண முருங்கை. பெண்களுக்கு பெண்தன்மையை அளிக்கும் ஹர்மோன் சுரப்பிகளை சீராக வைத்திருக்கும் மிக சிறப்பான கீரை. ஏனேனில் அதன் இலையை மாதந்தோறும் சமைத்துக் கொடுத்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாய், கருப்பை பிரச்சனை என எதுவும் இவர்களை அண்டாது. அவர்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரக்கூடிய வலி, வேதனைகளில் இருந்து அவர்களை காக்கக்கூடியது இந்த கல்யாண முருங்கை.

 

கல்யாண முருங்கையின் மருத்துவ பயன்கள்
கல்யாண முருங்கையில் சுண்ணாம்புச்சத்து,நார்சத்து,இரும்புசத்து அதிகம் உள்ளது.
கல்யாண முருங்கையானது கர்ப்பபை பிரச்சனைகளைசரிசெய்யும். கருச்சிதைவிலிருந்துசிசுவைக் காப்பாற்றும். பெண் மலட்டுத் தன்மையை நீக்கும்.

கல்யாண முருங்கையை பெண்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய்க் காலத்தில்ஏற்படும் அதிகப்படியான வயிற்றுவலி மற்றும் உதிரிப்போக்கை தடுக்கும்.

கல்யாண முருங்கை இலைச் சாற்றை தினமும் குடித்துவந்தால்,குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களின் குறை நீங்கும். அத்துடன் இந்த இலைச் சாற்றை குடித்தால், பொதுவாக நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும், பருத்த உடல் இளைக்கும்.

கல்யாண முருங்கையானது பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க உதவும்.
இந்த கீரையானது சிறுநீரகப்பிரச்சனையை சீர்செய்யும். சூடு மற்றும் பித்தநோய்களை கட்டுப்படுத்தும்.
கல்யாண முருங்கை இலையுடன் கசகசா,உளுந்து, மாதுளம்பழச் சாறு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், ஆண்மை பெருகும், தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்கு உறவில் ஆர்வம் ஏற்படும்.

கல்யாண முருங்கை காய்ச்சலை குறைக்கும்,மேலும் உடலை வலுவாக்கும்.
கல்யாண முருங்கை இலை,முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு இவற்றை சூப்வைத்து குடித்தால் ரத்தசோகை குணமாகும்.

கல்யாண முருங்கை இலையுடன் மிளகு சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் பனி மற்றும் மழை காலத்தில் சளித்தொல்லை இருக்காது.
கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் பின் குளித்தால் உடலில் ஏற்படும் தோல் நோய்களான சொறி,சிரங்கு போன்றவை குணமாகும்.

Related posts

நீங்கள் தூக்கமே வராமல் கஷ்டப்படுகிறீர்களா?அப்ப இத படிங்க!

nathan

பெண்களின் பார்வை பலவிதம்

nathan

தெரிஞ்சிக்கங்க…சூரிய ஒளி உடலுக்கு ஆரோக்கியமானது என்பதற்கான 6 காரணங்கள்!!!

nathan

எனது 8 வயது மகனின் உயரமானது குறைவாக உள்ளது. எனினும் அவரது உடல் நிறையானது வயதுக்கு ஏற்ற அளவில் போதுமா…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!!

nathan

எந்த வயதில் விட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்..?

nathan

உங்களுக்கு தெரியுமா நீண்ட ஆயுள் பெற உடற்பயிற்சியை விட மது குடிப்பதே சிறந்தது

nathan

உங்களுக்கு தெரியுமா! பழங்கால உணவு ஊட்டச்சத்துக்களின் சொர்க்கமா அல்லது அழிவா?

nathan

அதிகமாக கணினி உபயோகப்படுத்துவதனால் ஏற்படும் மோசமான உடல்நலக் கோளாறுகள்!!!

nathan