27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
14 1500040485 5
ஆரோக்கியம் குறிப்புகள்

காதில் நுழைந்த பூச்சியை வெளியில் எடுப்பது எப்படி?

காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். உடனடியாக காதினுள் எண்ணெயோ, உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப்பட்டு உடனடியாக இறந்து விடும் அல்லது பூச்சி மிதந்து வெளியே வந்து விடும்.

தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும். பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது.

இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப்பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும். ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு. ஜாக்கிரதையாகக் கையாளாவிட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற்சொன்னவாறு செயல்படவும்.14 1500040485 5

Related posts

சூரியனின் ஒளி தருமே சூப்பரான வைட்டமின்!

nathan

டான்சில்ஸ் பாதிப்பு குழந்தைகளுக்கு வரும்..

nathan

தும்மல் பற்றிய பல சுவாரஸ்ய தகவல் தெரியுமா?

nathan

நீரழிவின் எதிரி செர்ரி

nathan

பெண்கள் உடல் நலம்சரியில்லாத பொது கணவனிடம் விரும்பும் சில எதிர்பார்ப்புகள் என்ன…?

nathan

தெரிஞ்சிக்கங்க…மகள்களுக்கு அம்மாக்கள் கற்றுக் கொண்டுக்க வேண்டிய முக்கியமான 8 விஷயங்கள்!

nathan

உங்க கண்களை பாதுகாக்கனும்னா இந்த லைட்டை மட்டும் போடாதீங்க

nathan

உங்களுக்கு தெரியுமா நமது ஆரோக்கியம் நம் நாக்கில்… உங்கள் நாக்கு உங்களின் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்லும்..!!

nathan

பெண்கள் செய்யும் இந்த விஷயங்களை ஆண்கள் தலைகீழாக நின்றாலும் செய்ய முடியாது!!தெரிஞ்சிக்கங்க…

nathan