வெந்தயம் நீரிழிவு நோய் மட்டுமன்றி பெருங்குடல் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்கும் உதவுகிறது. வெந்தயம் சமையலுக்கு பயன்படுத்துவதன் முக்கிய காரணம் அதன் சுவைக்காக மட்டுமல்ல. அதன் மருத்துவ குணங்களாலும் உணவின் பிரதானமாக இருக்கிறது.
அதாவது வெந்தயம் நீரிழிவு நோய்க்கு உதவுவதாக கூறப்படுகிறது. அதோடு செரிமானப் பிரச்னை, எலும்பு ஆரோக்கியம் போன்றவற்றிற்கும் உதவுவதாக கூறப்படுகிறது.
எனவே தினமும் 10 கிராம் வெந்தயம் சூடான நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோயை குறைக்கும் திறன் இருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சரி வாங்க இது குறித்து விரிவாக பார்க்கலாம்..
ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகளை ஒரு கிளாஸ் சூடான தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். அந்த நீரில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து தேநீர் போல் பருகலாம் அல்லது அப்படியேவும் குடித்துவிடலாம்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. தினசரி தேநீர் போல் பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். வெந்தயம் நீரிழிவு நோய் மட்டுமன்றி பெருங்குடல் புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்கும் உதவுகிறது. நெஞ்சு எரிச்சல், வயிற்று பிரச்னைகள், மலச்சிக்கல் போன்றவற்றிற்கு உடனடி வீட்டு வைத்தியமாக உதவுகிறது.
காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து பருகுவது ஆபத்து. ஆயுர்வேத நிபுணர் எச்சரிக்கை உடலில் உள்ள ஃபிரீ ரேடிக்கல்களை அழித்து முகத்தின் கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை நீக்கி எப்போதும் இளமையான தோற்றத்தை பெற உதவுகிறது.
சில நேரங்களில் வெந்தய கீரைகளும் வலி நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது. கீரையை சூடாக்கி தசை வலி, வீக்கம் உள்ள இடங்களில் வைத்து கட்டினால் வலி குறையும் என்று கூறப்படுகிறது.