1 31 14
ஆரோக்கிய உணவு

காலை எழுந்த பின் ஒரு டம்ளர் வேப்பில்லை சாறு குடித்தால் போதும்! தெரிஞ்சிக்கங்க…

வேப்பில்லையானது பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் இருந்து சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பது வரை வேப்பிலை சாற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் காணப்படுகிறது.

மேலும், தினமும் காலையில் வேப்பிலை சாற்றை குடித்து வருவது உங்க செரிமான பிரச்சினைகளை போக்க உதவுகிறது. இதிலுள்ள அஸ்ட்ரிஜெண்ட் பண்புகள் வாயு உருவாக்கத்தை தடுக்கின்றன.

இதன் மூலம் வயிற்று வீக்கம், வாயு மற்றும் வயிற்று மந்தம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை குறைக்கிறது. வேப்பிலை சாறு நிறைய தொற்றுகளுக்கு காரணமான பாக்டீரியா, வைரஸ், வைரல் மற்றும் பூஞ்சை இவற்றை எதிர்த்து போராட உதவுகிறது.

காய்ச்சல், சலதோஷம் மற்றும் தொண்டை புண் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. வேப்பிலை சாற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், அல்சர், பெப்டிக் புண்கள், வாய்ப் புண்கள் போன்றவற்றை குறைக்கிறது. இதிலுள்ள பயோஆக்டிவ் சேர்மங்கள் திசு உருவாக்கத்தையும், சேதமடைந்த திசுக்களை மீட்கவும் உதவுகிறது.

சீக்கிரமே காயங்களை ஆற்ற உதவுகிறது. பின்னர், வேப்பிலையிலும் நச்சுத்தன்மைகளை நீக்கும் சக்தி இருக்கிறது. வேப்பிலை சாற்றை தினமும் குடித்து வர உடம்பில் இருக்கும் நச்சுக்களை கழிவுகளை நீக்குகிறது. இது இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. வேப்பிலை விதை சாற்றில் அசாதிராச்ச்டின் என்ற பொருள் உள்ளது. இது தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லை, கூந்தல் உதிர்தல், பேன் தொல்லை இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. இதன் மூலம் முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

Related posts

கட்டாயம் தவிர்க்க வேண்டிய உப்பு அதிகம் நிறைந்த உணவுப் பொருட்கள்!!!

nathan

கோடையில் கவனம் தேவை… இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்

nathan

எடை குறைப்பு உணவு பட்டியல் – weight loss food chart in tamil

nathan

உங்கள் தினசரி உணவில் தயிர் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் மாற்றங்கள்…

nathan

அதிமதுரம் பயன்கள்

nathan

சுவையான ஜவ்வரிசி பாயாசம் செய்ய…!

nathan

சூடான நீரில் எலுமிச்சை, உப்பு கலந்து குடித்தால் நடக்கும் அதிசயங்கள் இதோ!

nathan

கோடை காலத்தில் உடலை குளிர்விக்கும் உணவுகள்

nathan

உங்களுக்கு தெரியுமா சீதாப்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

nathan