p
முகப் பராமரிப்பு

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… முகத்தில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா?

பொதுவாக ஆண்கள் தங்களது முக ஆரோக்கியத்தை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

அவர்களது அலச்சியம் காரணமாக முகத்தில் கரும்புள்ளிகள், முக பருக்கள், தேமல், அலர்ஜி இப்படி பலவகை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இது முக தோற்றத்தை மாற்றிவிடும். எனவே இவற்றை ஆரம்பத்திலே சரி செய்ய ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

 

ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, பால் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் அல்லது கருமையான பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

ஒரு பௌலில் நற்பதமான தக்காளி சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, கருமையாக இருக்கும் முகம், கை, கால் பகுதியில் தடவி 20 நிமடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுத்து, அதை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து, சருமத்தில் தடவி நன்கு காய்ந்ததும், முகத்தைக் கழுவ வேண்டும். வேண்டுமானால், வெள்ளரிக்காய் சாறுடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

உருளைக்கிழங்கைத் துருவி சாறு எடுத்து, அதை பாதிக்கப்பட்ட கருமையான பகுதிகளில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மாயமாய் மறையும்.
2 டீஸ்பூன் ஓட்ஸை மோரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கை, கால்களில் தடவி 25-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

3 டீஸ்பூன் துவரம் பருப்பை நீரில் சில மணிநேரம் ஊற வைத்து, பின் அதை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 டீஸ்பூன் தக்காளி சாறு சேர்த்த கலந்து, கருமையாக உள்ள முகம், கை, கால், கழுத்துப் பகுதியில் தடவி 25-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி மென்மையாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.

Related posts

நீங்கள் சீக்கிரம் வெள்ளையாவீங்க தூங்கும் முன் பாதாம் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க..

nathan

ஒருவர் முதுமையடைவதை முதலில் எடுத்துச் சொல்வது கண்களைச் சுற்றியுள்ள தோல் மற்றும் நெற்றியின் தோல் பகுதிகள்தான்.

nathan

மேக்கப்பை எளிதாக அகற்ற பாதாம் எண்ணெய் பயன்படுத்துங்க!

nathan

சருமத்தை பளபளப்பாக்க உதவும் சாக்லேட் மாஸ்க்…!! சூப்பர் டிப்ஸ்

nathan

பட்டுபோல சருமம் மின்ன இயற்கை ஃபேஷியல்…

nathan

முகத்தில் வளரும் தேவையற்ற முடி..நீக்குவது எப்படி?

nathan

சூப்பர் டிப்ஸ்! பளபளக்கும் ஆரோக்கியமான சருமத்தை பெற உதவும் 3 ஃபேஸ் பேக்குகள்..!!

nathan

நீங்க அழகாக பொலிவா இருக்க இந்த உணவுகளை சாப்பிட்டா போதுமாம்…!

nathan

முகத்திற்கு ப்ளீச்சிங் செய்தால் ஏற்படும் பிரச்சனைகள்

nathan