21 619ff0c
ஆரோக்கிய உணவு

கொழுப்பை கரைத்து எடையை குறைக்கச் செய்யும் கருஞ்சீரக டீ!

கருஞ்சிரகம் தமிழர்களின் உணவில் சேர்க்கப்படும் முக்கிய உணவு பொருள்.

சுவைக்கு மட்டும் இதனை சேர்ப்பது இல்லை. இதில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது.

கருஞ்சீரகத்தில் தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் தோன்றும் ஏராளமான பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.

 

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு கருஞ்சீரகம் தீர்வாக அமையும்.

அதனால் கருஞ்சீரகத்தை தேனீர் போட்டு கூட பருகலாம். இதனால் கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க உதவும்.
தினமும் ஒரு கப் கருஞ்சீரக டீ குடித்து வருவது உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.

அதை எப்படி தயாரிப்பது என்று இங்கு பார்ப்போம்.

 

தேவையான பொருள்கள்
கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்
புதினா – 1 கைப்பிடியளவு
இஞ்சி – 1 துண்டு
தேன்- 2 ஸ்பூன்

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் கருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வையுங்கள். கருஞ்சீரகம் நன்கு கொதித்து அதன் சாறு தண்ணீரில் இறங்க ஆரம்பித்ததும் அதில் இஞ்சியைத் தட்டி சேர்க்க வேண்டும்.

 

இஞ்சியும் கருஞ்சீரகமும் சேர்த்து கொதித்து வரும்போது கழுவி சுத்தம் செய்து வைத்திருந்த புதினாவை அதில் சேர்த்து விடுங்கள்.

புதினா சேர்த்ததும் கொதிக்க வைக்கத் தேவையில்லை. புதினாவைச் சேர்த்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டைப் போட்டு மூடி விடுங்கள்.

ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த டீயை வடிகட்டி அதில் சிறிது தேன் சேர்த்தால் கருஞ்சீரக டீ ரெடி. நீங்கள் பொதுவாக டீ குடிக்கும் நேரங்களில் இந்த டீயைக் குடிக்கலாம்.
ஆனால் காலையில் வெறும் வயிற்றில் இந்த கருஞ்சீரக டீ குடிப்பது தான் நல்ல பலன் தரும். ஒரே வாரத்தில் நல்ல அதிசய பலன்களை காண முடியும்.

Related posts

பக்கவாதத்தை தடுக்கும் உணவுப் பழக்கங்கள்

nathan

சுவையான வேர்க்கடலை புளிக்குழம்பு

nathan

வேக வைத்த முட்டைக்கோஸ் நீரை மறந்தும் கொட்டிடாதீங்க!! படிங்க!

nathan

கருத்தரிப்பதில் பிரச்சனைக் கொண்டவரா?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

கொழுப்பை குறைக்கும் வெங்காயத்தாளின் மேலும் பல பயன்கள்

nathan

தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்…?

nathan

சத்துக்கள் நிறைந்த கேரட் கீர்

nathan

ஆவாரம் பூ (Aavaram Poo) நன்மைகள் – aavaram poo benefits in tamil

nathan

சரியான சருமத்தை பெற சாப்பிட வேண்டிய 5 உணவுகள்

nathan