26.1 C
Chennai
Thursday, Nov 14, 2024
21 619fc8548d2
சமையல் குறிப்புகள்

சுவையான முட்டை சமோசா கோதுமை மாவில் செய்யலாம்….

கோதுமை மாவில் பல சுவையான உணவு பொருட்கள் செய்யலாம்.

இன்று நாம் மொறு மொறு முட்டை சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 50 கிராம்
முட்டை – 2
முட்டை மிளகு பொடி – தேவையான அளவு
சீரகம் – ¼ ஸ்பூன்
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
கடலை எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு
செய்முறை
கோதுமை மாவில் இரண்டு ஸ்பூன் கடலை எண்ணெய் மற்றும் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் திரட்டிக் கொள்ளவும். ஈரத்துணியால் பிசைந்த மாவினை மூடி, அரைமணி நேரம் வைத்திருக்கவும்.

சின்ன வெங்காயத்தை பொடியான சதுரத் துண்டுகளாக வெட்டவும். சிறிதளவு கோதுமை மாவினை எடுத்துக் கொண்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பசைபோல் கலக்கிக் கொள்ளவும்.

 

வாணலியை அடுப்பில் வைத்து, நல்ல எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்க்கவும். சீரகம் பொரிந்ததும், சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும், முட்டை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு சேர்த்து ஒருசேரக் கிளறவும்.

பின்னர் அதனுடன் மிளகுப்பொடி போட்டு, முட்டையை நன்கு வதக்கிக் கொள்ளவும். பிசைந்த சப்பாத்தி மாவினை, சிறு உருண்டைகளாக்கவும்.

சிறு உருண்டையை கோதுமை மாவினைப் பயன்படுத்தி, மிகவும் மெல்லிய வட்ட சப்பாத்தியாக விரிக்கவும். இவ்வாறாக எல்லா உருண்டைகளையும் மெல்லிய சப்பாத்திகளாக விரிக்கவும்.

தோசை கல்லில் விரித்த சப்பாத்திகளை எண்ணெய் ஊற்றாமல், மேற்புறம் லேசாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஒவ்வொரு சப்பாத்தியையும் மூன்று துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

 

வெட்டிய துண்டினை கூம்பாக மடித்து, கோதுமை மாவு பசையினை வைத்து ஓரங்களை ஒட்டிக் கொள்ளவும். கூம்பிற்குள் வதக்கிய முட்டைக் கலவையை வைத்து, ஓரங்களில் கோதுமை மாவு பசையினைத் தடவி மூடிக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சமோசாக்களைப் பொரித்துக் கொள்ளவும்.

Related posts

பச்சை பயறு கடையல்

nathan

உருளைக்கிழங்கு குருமா

nathan

வெள்ளரி சாலட்டை இவ்வாறு செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு!…

sangika

தயிர் சேமியா செய்வது எப்படி?….

sangika

மலபார் மட்டன் ரோஸ்ட்

nathan

தக்காளி தொக்கு

nathan

தொண்டை வலி ? உடனடி நிவாரணத்திற்கு இந்த 10 எளிய வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கவும்

nathan

புதினா தொக்கு

nathan

சுவையான அன்னாசி மசாலா

nathan