28.3 C
Chennai
Sunday, Mar 23, 2025
01 1512
Other News

ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் தெரிஞ்சிக்கங்க…

சில உணவு பொருட்கள் மன ஆரோக்கியத்தை சேதப்படுத்துவதோடு, நினைவாற்றலையும் பலவீனப்படுத்தி, மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.

இன்றைய காலகட்டத்தில், மோசமான வாழ்க்கை முறை, நமது மன ஆரோக்கியத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நம் நினைவாற்றல் பலவீனமடைந்து, சிறிய விஷயங்களைக்கூட மறந்து விடுகிறோம்.

சிலருக்கு முந்தைய நாள் என்ன நடந்தது என்பதை கூட ஞாபகபடுத்தி பார்க்கும் அளவுக்கு மறந்து போகிறார்கள். சில உணவுகள் நினைவாற்றலை மிகவும் பலவீனமாக்குகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெரியவர்கள் மட்டுமல்லாது, இந்த உணவுகளை உட்கொள்ளும் குழந்தைகளுக்கும், நினைவாற்றல் குறைவதோடு, மூளை வளர்ச்சியும் பாதிக்கிறது.

குளிர்பானங்கள் மற்றும் டயட் சோடா
சிலர் தாகம் எடுக்கும்போது குளிர்பானங்களை உட்கொள்கிறார்கள். ஆனால் அது உங்கள் நினைவாற்றலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஏனெனில், குளிர்பானங்களில் காணப்படும் அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப், மூளை வீக்கத்தை அதிகரிப்பதன் மூலம் நினைவாற்றலையும் கற்றல் திறனையும் குறைக்கிறது. மேலும், மூளை மற்றும் நினைவாற்றலை பலவீனப்படுத்தும் கூறுகள் டயட் சோடாவில் காணப்படுகின்றன.

பேக் செய்யப்பட்ட உணவு
பசிக்கும்போது பேக் செய்யப்பட்ட சிப்ஸ் போன்றவற்றை கொரிக்கும் எண்ணம் அனைவரின் மனதிலும் நிச்சயம் தோன்றும். குழந்தைகளும் அதை அதிகம் உட்கொள்கிறார்கள்.

ஆனால் இந்த உணவில் உள்ள டிரான்ஸ் கொழுப்பு மூளையின் வலர்ச்சியை குறைப்பதோடு, நினைவாற்றலை பலவீனமாக்குகிறது. பெரியவர்களுக்கு அல்சைமர் நோய் அபாயத்தை இது அதிகரிக்கிறது.

இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் மற்றும் துரித உணவு ((Junk And Fast Food)
குழந்தைகள் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் மற்றும் துரித உணவை உட்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் இது மூளையின் Brain Derived Neurotrophic Factor (BDNF) உற்பத்தியைக் குறைக்கும். இதன் காரணமாக நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன் குறையும்,. இந்த உணவுகள் புதிய நியூரான்கள் உற்பத்தி ஆவதை தடுக்கிறது.

மது
நீங்கள் தினசரி மது அருந்தினாலும் அல்லது எப்போதாவது மது அருந்தினாலும், அது உடலில் இருந்து வைட்டமின் பி 1 ஊட்டசத்தை நீக்குகிறது. இதன் காரணமாக ஞாபக சக்தி குறைந்து நரம்பியக்கடத்தியில் சேதம் தொடங்குகிறது. இந்த காரணங்களால், உங்கள் நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது.

Related posts

நடிகை நஸ்ரியா வீட்டிற்கு சென்ற நடிகை நயன்தாரா

nathan

டாம் பாய் லுக்கில் சினேகன் மனைவி!

nathan

அம்மா நயன்தாரா மடியில் படுத்து உறங்கும் மகன்.. வைரல் வீடியோ

nathan

இந்த ராசி பெண்களிடம் கொஞ்சம் உஷாரா இருங்க!

nathan

சனியிடம் சிக்கியா ராசி

nathan

பெரிய சைஸ் டாட்டூ- ப்ரா-வை கழட்டி விட்டு ரச்சிதா மகாலட்சுமி ஹாட் போஸ்..!

nathan

இரும்புச்சத்து குறைபாடு : உங்கள் இரும்பு உட்கொள்ளலை அதிகரிக்க சிறந்த உணவுகள்

nathan

ஜோவர் பலன்கள்: jowar benefits in tamil

nathan

நடிகர் ஜெயராம் மகள் திருமணம்

nathan