27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
21 619d5e2
சமையல் குறிப்புகள்

சுவையான ஆப்பம்… இப்படி அரிசி அரைச்சு சுடுங்க!

ஆப்பம் பலருக்கு பிடித்த உணவுகளின் ஒன்று.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக உள்ளது.

நிரைய பேருக்கு வீட்டில் ஆப்பம் செய்ய தெரியாது. அப்படியே செய்தாலும் ஓட்டல் சுவையில் செய்வது மிகவும் கடினம்.

ஆரோக்கியம் நிறைந்த ஆப்பத்தை சுவையாக வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை பார்போம்.

 

தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – ஒரு கப்
பச்சை அரிசி – 2 கப்
துருவிய தேங்காய் – ஒரு கப்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
ஊளுந்து – ஒன்னரை டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – அரை டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் – சிறிதளவு
ஆப்ப சோடா – சிறிதளவு
சோடா வாட்டர் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை
முதலில், இட்லி அரிசி பச்சை அரிசி, ஒளுந்து வெந்தயம் ஆகியவற்றை நன்றாக 4 மணி நேரம் ஊறவைக்கவும். துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக ஆட்டிக்கொள்ளவும்.

அடுத்து இந்த மாவில், தேங்காய் பால் சர்க்கரை, மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைத்து விட்டு மாவை 8 மணி நேரம் புளிக்கவைக்கவும்.

அடுத்து புளித்த மாவில் சிறிதளவு ஆப்ப சோடா மற்றும் சோடா வாட்டரை சேர்த்து கரைக்கவும். பின்பு அடுப்பில் காடாய் வைத்து சூடேரியதும் அதில் மாவை இட்டு கடாயயை சுழற்றி வைக்கவும்.

சுமார் ஒன்னரை நிமிடத்தில் ஆப்பம் தயாராகி விடும். இதில் தேங்காய் பால் சர்க்கரை சேர்த்து பரிமாறலாம்.

Related posts

தோசை மீந்து விட்டதா… கவலைய விடுங்க..

nathan

KONDAKKADALAI SUNDAL/ கொண்டைக்கடலை சுண்டல்

nathan

ஆஹா பிரமாதம்! செட்டிநாடு கத்திரிக்காய் சாப்ஸ்

nathan

சேனைக்கிழங்கு வறுவல்

nathan

சுவையான வல்லாரைக் கீரை துவையல்

nathan

பன்னீர் சீஸ் டோஸ்ட்

nathan

ஆரோக்கியமான ஜீரண இடியாப்பம்!

sangika

சுவையான வெஜ் கீமா

nathan

சுவையான காளான் பொரியல்

nathan