29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
sevenhealthbenefitsofwhiterice
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…சாப்பாடு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா!!!

பிட்சா, பர்கர், சாண்விட்ச் என ரூட்டு மாறி போய் கொண்டிருக்கும் நமக்கு வெள்ளை அரிசி சாதம் பற்றி என்ன தெரியும். பள்ளி, கல்லூரி வாழ்க்கையின் மதிய உணவோடு இன்று பல பேர் வெள்ளை சாதத்தை சாப்பிடுவதை குறைத்துக் கொண்டனர். இதற்கும் மேற்கத்திய மோகம் என்று பழி கூற இயலாது. இது அதிக பணம் சம்பாதிக்கும் திமிரு என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.

 

மதிய உணவை எடுத்து செல்லும் பழக்கத்தை தவிர்த்து, பன்னாட்டு நிறுவனங்களின் கண்ணாடி அறைகளுக்குள் கணினியின் முன்னின்று உணவை வேண்டி வணங்கி உண்பது நமது வழக்கமாக மாறிவிட்டது. அந்த உணவுகளில் இருந்து ஒரு வெங்காயமும் ஆரோக்கியத்திற்கு பயனில்லை என்ற போதும். நாவில் ஊரும் எச்சில் அதை தான் தேடி செல்ல தூண்டுகிறது.

 

ஊட்டச்சத்து நிறைந்த நமது பாரம்பரிய உணவை நாம் சாப்பிட வேண்டும் என சொல்வதற்கு காரணம் நமது உடலின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு தான். சாதத்தில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்த பின்பாவது பிட்சா, பர்கர், சாண்விட்ச்சிலிருந்து திரும்பி வாருங்கள்…

ஊட்டச்சத்து நிறைந்தது

வெள்ளை சாதத்தில் நிறைய ஊட்டச்சத்து இருக்கிறது. இதில், வைட்டமின் பி6, இரும்புச்சத்து, கால்சியம், புரதம் போன்றவை இருக்கின்றன.

ஆர்சனிக் இல்லாது

ஆர்சனிக் என்பது விஷத்தன்மை கொண்ட ஒரு இரசாயன பூச்சு, மேற்கத்திய உணவுகள் சிலவற்றில் இதன் கலப்பு இருக்கும். ஆனால், வெள்ளை சாதத்தில் இது இல்லை.

சக்தி அதிகம்

வெள்ளை சாதம் சாப்பிடுவதன் மூலம் உடலிற்கு அதிக சக்தி கிடைகின்றது. உடல் எடை அதிகரிக்க விரும்பவர்கள் வெள்ளை சாதம் சாப்பிடலாம்.

தசை வளர்ச்சி
தசை வளர்ச்சி
வெள்ளை சாதத்தில் இருக்கும் புரதமும், கார்போஹைட்ரேட்டும் உங்கள் உடலின் தசை வளர்ச்சிக்கு நன்கு பயன் தரும்.

இரைப்பைப் பிரச்சனையை சரி செய்யும்

வயிற்று உபாதை மற்றும் இரைப்பை பிரச்சனைகளை வெள்ளை சாதம் சாப்பிடுவதனால் சரி செய்ய இயலும்.

நோய் எதிர்ப்பு சக்தி

வெள்ளை சாதம் சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. மற்றும் இதில் இருக்கும் குறைந்த சோடியம் அளவு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு ஆகும்.

பசியின்மையை அதிகரிக்கும்

பசியின்மையால் அவதிப்படுவர்கள் வெள்ளை சாதம் சாப்பிடுவது நல்லது. இது உங்கள் பசியை அதிகரிக்கும் மற்றும் உங்களது அஜீரண கோளாறுகளுக்கும் தீர்வளிக்கும்.

Related posts

உடல் சூட்டை தணிக்கும் கற்றாழை ஜூஸ்

nathan

கர்ப்பப்பை காக்கும்… ஆயுள் கூட்டும்… குழந்தையின்மை போக்கும்… வாழைப்பூ!

nathan

இது, எத்தனையோ நோய்களைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது…

sangika

தெரிந்துகொள்வோமா? அரிசி சாதம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

nathan

பெண்களின் ஹார்மோன்கள் அதிகரிக்க கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

பன்னீர் புலாவ்

nathan

அசைப்பிரியரா நீங்கள்? கண்டிப்பாக படிக்கவும்

nathan

ஆரோக்கியம் தரும் உணவு வகைகள்

nathan

தினமும் முளைக்கட்டிய பயிரை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? தெரிஞ்சிக்கங்க…

nathan