25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
static image 1 1
ஆரோக்கிய உணவு

சூப்பரான கேரட் சப்பாத்தி!

சைடிஷ் ஏதும் இல்லாமல் சுவைத்து சாப்பிடக் கூடிய ஒரு உணவு தான் கேரட் சப்பாத்தி.

இதில் கேரட் , மசாலாப் பொருட்கள் சேர்க்க‌ப்படுவதால் தனியாக சைடிஸ் ஏதும் தேவையில்லை.

கேரட் சப்பாத்தி சுவை மிகுந்த இது ஆரோக்கியமானதும் கூட.இனி எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்
கோதுமை மாவு ‍ – 1 & 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடலை எண்ணெய் – சப்பாத்தி சுடுவதற்கு தேவையான அளவு
கேரட் – 2 எண்ணம் (பெரியது)
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி – சுண்டுவிரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 3 பற்கள்
மல்லி இலை – 3 கொத்து
மஞ்சள் பொடி – 3 டீஸ்பூன்
மிளகுப் பொடி – 3 டீஸ்பூன்
சீரகப் பொடி – 3 டீஸ்பூன்
கேரட் சப்பாத்தி செய்முறை
கோதுமை மாவுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இத்துடன் தண்ணீர் சிறிது சிறிதாகச் சேர்த்து ஒருசேரத் திரட்டவும். நன்கு ஒருசேரத் திரட்டியதும் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து உருண்டையாகத் திரட்டவும்.

கேரட்டை கழுவி துடைத்து துருவியில் மெல்லிதாகத் துருவிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி துருவியில் மெல்லிதாகத் துருவிக் கொள்ளவும்.

 

கொத்தமல்லி இலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், வெங்காயம், கொத்தமல்லி இலை, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் பொடி, மிளகு பொடி, சீரகப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு ஒருசேர கிளறிக் கொள்ளவும் திரட்டிய கோதுமை மாவினை படத்தில் உள்ளவாறு சிறிய உருண்டைகளாகத் திரட்டிக் கொள்ளவும்.

சிறு உருண்டையை கோதுமை மாவில் தோய்த்து வெளிப்புறம் மெலியதாகவும், நடுவில் சற்று தடிமனாகவும் இருக்குமாறு லேசாக விரிக்கவும். அதில் கேரட் கலவையை நடுவில் வைக்கவும்.

 

சுற்றியுள்ள மாவினை லேசாக மடித்து மூடி உருண்டையாக உருட்டவும். இவ்வுருண்டையின் மீது கோதுமை மாவினைத் தூவி மெதுவாக சப்பாத்தியாக விரிக்கவும்.

சப்பாத்திக் கல்லினை அடுப்பில் வைத்து சூடேறியதும் அதில் திரட்டிய சப்பாத்தியைச் சேர்க்கவும். கடலை எண்ணெயை சப்பாத்தியைச் சுற்றிலும் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போடவும்.

மறுபுறம் வெந்ததும் எடுத்து விடவும். சுவையான கேரட் சப்பாத்தி தயார். விருப்பமுள்ளவர்கள் மிளகுப் பொடிக்குப் பதிலாக‌ பச்சை மிளகாயை பொடியாக வெட்டி ஸ்டஃப்பிங் கேரட் கலவையில் சேர்க்கலாம்.

Related posts

கறிவேப்பிலையை இப்படி உணவில் சேர்த்தால் பல வகை நன்மைகள் கிடைக்குமாம்!

nathan

ஆயுர்வேதத்தின் படி உங்கள் குடல் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

nathan

சுவையான கருணைக்கிழங்கு புளிக்குழம்பு

nathan

தெரிஞ்சிக்கங்க…கோடை வெயிலை தணிக்க உதவும் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா அல்சர் நோயை விரைவில் குணமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…வெறும் வயிற்றில். வெந்தயம் ஊற வைத்த நீரை குடியுங்க. எந்த நோயுமே அண்டாது.!!!

nathan

கோடை வெப்பத்தை சமாளிக்க… தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க!

nathan

ஆலிவ் ஆயிலை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் 7 நன்மைகள்!

nathan

வயிற்று உபாதைகளுக்கு ஏற்ற பூண்டு சட்னி -சூப்பர் டிப்ஸ்

nathan